வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை

Updated : மே 23, 2018 | Added : மே 22, 2018 | கருத்துகள் (9)
 பைனலுக்கு, முன்னேறியது, சென்னை

மும்பை: ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. முதல் தகுதிச்சுற்றில் ஐதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்றில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் பில்லிங்கிற்குப்பதில் வாட்சன் இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.


அசத்தில் பவுலிங்:

ஐதராபாத் அணியை துவக்கத்திலேயே சென்னை 'வேகங்கள்' மிரட்டினர். சகார் வீசிய முதல் பந்தில் ஷிகர் தவான் போல்டானார். லுங்கிடி 'வேகத்தில்' கோஸ்வாமி (12) சிக்கினார். கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்தார். சாகிப் (12), மணிஷ் பாண்டே (8) விரைவில் திரும்பினர். பிராவோ பந்தில் யூசுப் பதான் (24) ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூரின் கடைசி ஓவரில் கார்லோஸ் பிராத்வைட் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். புவனேஷ்வர் (7) ரன்-அவுட்டானார். முடிவில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. பிராத்வைட் (43) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார்.


டுபிளசி அரை சதம்:

எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாட்சன் டக்-அவுட்டானார். சித்தார்த் கவுல் 'வேகத்தில்' ரெய்னா (22), ராயுடு (0) அடுத்தடுத்து சிக்கினர். ரஷித் 'சுழலில்' தோனி (9) வெளியேறினார். பிராவோ (7), ஜடேஜா (3) ஒற்றை இலக்கில் திரும்பினர்.

பொறுப்புடன் விளையாடிய டுபிளசி அரை சதம் கடந்தார். இவருக்கு ஷர்துல் தாகூர் கைகொடுக்க, வெற்றியை நெருங்கியது. புவனேஷ்வர் பந்தை டுபிளசி சிக்சருக்கு பறக்கவிட, சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுபிளசி (67), தாகூர் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம், சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X