சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
TN Jallianwala Bagh , Sterlite protest, Tuticorin riots, தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி வன்முறை வெறியாட்டம், 
 Sterlite plant, Tuticorin 144 ban imposed, law and order problem, Tuticorin protest, Tuticorin Sterlite plant, Thoothukudi shootings, Thoothukudi struggle, Thoothukudi Sterlite plant, Thoothukudi violence ,

துாத்துக்குடி: துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக, 100 நாட்களாக அமைதியாக நடந்த போராட்டம், நேற்று திசைமாறி, வன்முறையாக வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஏராளமான வாகனங்களையும், தீவைத்து எரித்தனர். நான்கு மணி நேரத்திற்கு மேலாக, அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பள்ளி மாணவி உட்பட, ஒன்பது பேர் பலியாகினர்.

துாத்துக்குடியில் செயல்படும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பிப்ரவரியில், ஒன்றிரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். பின், அவர்களுக்கு ஆதரவாக மேலும், 17 கிராம மக்கள் போராட துவங்கினர். போராட்ட களத்திற்கு, திருமாவளவன், கமல், சரத்குமார், பிரேமலதா விஜயகாந்த் போன்ற தலைவர்கள், நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின், 100வது நாளான நேற்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர்.

புறக்கணிப்பு


இதைத் தவிர்க்க, சப் - கலெக்டர் பிரசாந்த் மற்றும், எஸ்.பி., மகேந்திரன் தலைமையில், மே, 20ல், அமைதி பேச்சு நடந்தது. இதை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவைச் சேர்ந்த, பாத்திமா பாபு தவிர, மற்றவர்கள் புறக்கணித்தனர். வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, 22 பேர் பங்கேற்றனர். அப்போது, மே, 22ல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதில்லை; போலீசார் அறிவித்த, எஸ்.ஏ.வி., பள்ளி மைதானத்தில், ஆர்ப்பாட்டத்தை நடத்தி கலைவதாக உறுதி அளித்தனர்.இதற்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் சம்மதிக்கவில்லை.

பாத்திமா பாபுவை போராட்டக்குழுவில் இருந்து நீக்கினர். 'திட்டமிட்டபடி, மே, 22ல் கலெக்டர்

அலுவலக முற்றுகை நடந்தே தீரும்' என, போராட்டக்குழு அறிவித்தது. அதனால், பாத்திமா பாபு உட்பட,எட்டு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், மக்கள் அதிகாரம், புரட்சிகர மக்கள் முன்னணி, நாம் தமிழர் போன்ற அமைப்பினர், போராட்டத்தை கையில் எடுத்தனர்.

கோட்டை விட்டது


இதற்கு முன், மார்ச், 24ல், நடந்த ஆர்ப்பாட்டத்தில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நேற்றைய போராட்டத்தில், அதை விட அதிகமானோர் பங்கேற்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மட்டும், 144 தடையுத்தரவு பிறப்பித்து, நேற்று முன்தினம் இரவுஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, ஒரே நேரத்தில், நகரின் நான்கு முனைகளில் இருந்தும், போராட்ட குழுவினர் புறப்பட்டனர். துாத்துக்குடி வடக்கு மாவட்ட, தி.மு.க., செயலர், கீதாஜீவன் தலைமையில், அக்கட்சி தொண்டர்கள், நாலாம் கேட் அருகே வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றி சென்றனர். மடத்துார் என்ற இடத்திலிருந்து புறப்பட்ட கிராம மக்களையும், போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தடியடி


காலை, 9:30 மணியளவில், துாத்துக்குடி பனிமயமாதா ஆலயம் முன்பிருந்து, 4,000 பேர் புறப்பட்டனர். வழிநெடுகிலும் நிறைய பேர் சேர்ந்ததால், ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்கள் எண்ணிக்கை, 10 ஆயிரமானது. வழியில், போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை கடந்து,

Advertisement

கலெக்டர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். உடன், போலீசார் தடியடி நடத்தினர். இருப்பினும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் மேலும் மேலும் அதிகரித்து, 20 ஆயிரத்தை எட்டியது.

துாத்துக்குடி - நெல்லை சாலையில், உணவு கழக குடோனை கடந்த போது, நெல்லை, எஸ்.பி., அருண்சக்திகுமார் தலைமையில் போலீசார் தடுத்தனர். ஆனாலும், தடையை மீறி கூட்டம் முன்னேறியது. எனவே,அதேநேரத்தில், போராட்டக்காரர்களில் மனிதாபிமானம் மிக்க சிலர், போலீசாரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். நான்குவழிச் சாலை பாலத்தை கடந்த கும்பல், நேராக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி, ஆவேசத்துடன் முன்னேறியது.

தீ வைப்பு


கலெக்டர் அலுவலகத்திற்குள் போதுமான போலீசார் இல்லாததால், அங்கிருந்த அரசு ஜீப்கள், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவை உடைத்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால், அங்கு மேலும் பதட்டம் ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகே, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பான, தாமிரா கட்டடத்தை சூழ்ந்து, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடும்பத்தினர், கட்டடத்தின் மேல் மாடிக்கு சென்று தப்பினர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்களுக்கு தீ வைப்பது நீடித்ததால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், துாத்துக்குடியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி வெனிஸ்டா உட்பட, 35 - 62 வயது வரையுள்ள ஏழு ஆண்கள் என, எட்டு பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு தகவல் பரவியதால், நகரமே கலவர பூமியானது. போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கற்களை வீசி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். மாவட்ட எஸ்.பி., மகேந்திரனின் முகாம் அலுவலகம், திரேஸ்புரத்தில் உள்ளது. மதியம், 2:30 மணியளவில், அவர் காரில் வந்த போது, திரேஸ்புரத்தை சேர்ந்த மக்கள் முற்றுகையிட்டனர். கட்டுப்படுத்த முடியாத நிலையில், அங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 27 வயதுடைய பெண் ஒருவர் பலியானார். இதனால், பலி எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்தது.

போராட்டக்காரர்களில், 40 பேரும், போலீசார், 20 பேரும் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பதட்டம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (211)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
26-மே-201807:58:09 IST Report Abuse

Sitaramen Varadarajanஇந்த குடும்பம் வாய் வைக்காத இடமே இல்லை எனலாம். தம்பதிகளுக்கு எவ்வளவு கொடுத்து அழைத்து வந்தாரோ ....அல்லது இதுவும் செட் அப் தானோ.......தமிழகத்தில் எரிந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் ஆயிரம் இருக்க. டெபாசிட் இழந்த கட்சிக்கு வேறு பிழைப்பே இல்லையா.........கோடி கோடி கோடி கோடி அடித்த கொள்ளையுடன் எங்கேயாவது வெளி நாட்டுக்கு பொய்த்தோலைவதுதானே.................பாவமன்னிப்புகளுக்கு ஏஜெண்டாக இருந்து இன்னும் சம்பாதிக்க வேண்டுமா. ......தமிழர்களை இனியாவது நிம்மதியாக வாழ விடலாமே.......இந்த கழகங்கள் எதுவுமே வேண்டாம். தமிழகம் தானாக தலை நிமிரும்......எத்தனை எத்தனை பிரச்னைகள்.....தண்ணீர், கல்வி, வழிபாடு, சாலை, பசுமை......எதையுமே எந்த பிரச்னையும் முக்கியமில்லை. எவனோ ஒரு துரோகிக்கு எடுபிடியாக இருந்து வேலை பார்ப்பது ஒரு அரசியலா... மோடி அவர்களை வீழ்த்த வேண்டும். இதற்கு ஜபம் நடத்துகிறார்கள்....துரோகிகள். கான் கிராஸ் அறுபது ஆண்டுகள் கொடுத்த சிறுபான்மை சலுகைகள் இவர்களை இவ்வளவு திமிராக நடக்க வழி செய்துள்ளது. இப்படியும் ஒரு நாறிப்போன கும்பல். மக்கள் இவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

Rate this:
spr - chennai,இந்தியா
24-மே-201814:58:07 IST Report Abuse

sprஇந்தப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள் ஆனால் "கலெக்டர் அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஏராளமான வாகனங்களையும், தீவைத்து எரித்தனர். நான்கு மணி நேரத்திற்கு மேலாக, அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை முறியடிக்க, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,........................." இவ்வளவும் நடந்த பின்னர் காவற்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தவறில்லை பிரச்சினைக்குத் தீர்வு அரசும், (அரசியல் கலப்பில்லா) மக்கள் பிரதிநிதிகளும் ஆளை நிர்வாகிகளும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவதே ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க வேண்டாம்

Rate this:
rajan - nagercoil,இந்தியா
24-மே-201809:50:09 IST Report Abuse

rajanஇது குஜராத் மாடல் வளர்ச்சி . சிந்திக்க

Rate this:
மேலும் 208 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X