சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு: போலீசார் விளக்கம்

Updated : மே 23, 2018 | Added : மே 23, 2018 | கருத்துகள் (81)
Advertisement
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, போலீசார் விளக்கம், தூத்துக்குடி சம்பவம் , தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,Sterlite gunfire, police explanation, Tuticorin incident, Tuticorin riots, sterile plant, Sterlite protest, Tuticorin Firing, Tuticorin protest, Tuticorin Sterlite Plant,

தூத்துக்குடி: பேராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனவும், தகுந்த எச்சரிக்கைக்கு பின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். மேலும் பொது அமைதியை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathir - chennai,இந்தியா
23-மே-201812:29:37 IST Report Abuse
kathir யாரை பாதுகாக்க துப்பாக்கி சூடு. மக்களை பாதுகாக்க மக்கள் மீதே துப்பாக்கி சூடா??? 99 நாட்கள் அமைதி பாதுகாத்த மக்களின் பொறுமையை களைத்து வன்முறையை தூண்டிவிட்டு இப்பொழுது அமைதி காக்க சொல்லும் முட்டாள்களே ...அவர்கள் நிறுத்த மாட்டார்கள்..
Rate this:
Share this comment
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-மே-201816:14:39 IST Report Abuse
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர்99 நாட்கள் அமைதியாக நடந்தது எதற்கு ? இப்படியொரு வன்முறைக்குமக்களை தயார் படுத்தவே. மொத்தமாக மூளைச்சலவை செய்யப்பட்ட ஆட்டு மந்தை கூட்டம் , தொடர்ந்து உணர்ச்சிகரமாக பேசிப்பேசி வெறியூட்ட பட்டு வெறிநாய்களை போல ஆட்டம்போட கற்று கொடுக்க பட்டு தயார் படுத்த பட்டு வேட்டைக்கு அனுப்பி வைக்க பட்டது.. இந்த வெறியாட்டத்தை சவுகரியமாக மறந்து விட்டு காவல் துறை மீது பழி போடும் நியாயவாதிகளால் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதில்சொல்ல தெரியவில்லை .. கேள்விகள் கேட்க படும்போது அதற்கு பதில் சொல்லாமல்வெறுமனே போலீஸ் , அராஜகம், அப்பாவி பொதுமக்கள் , வாழ்வாதாரம், அப்புறம் கடைசியாக மோடியின் சதி, ஸ்டெர்லைட் முதலாளியின் கைக்கூலி என்றெல்லாம் திசை திருப்பி பேசத்துணிகிறார்களே ஒழிய கேட்கப்படும் கேள்விகளில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள கூட தயார் இல்லை .. ரவுடிக்கூட்டம் இல்லை ..இது பொதுமக்கள் தான் என்றால் இந்தக்கூட்டம் எதற்கு அரசு அலுவலகத்தின் உள்ளே புகுந்தது ? எதற்கு ஏ டி எம், வாகனங்கள் இவற்றிற்கெல்லாம் தீ வைக்கிறது ? இதையெல்லாம் விட ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அங்குள்ள பெண்கள் குழந்தைகளை ஏன் மிரட்ட வேண்டும்? கூட்டமாக சேர்ந்து என்ன செய்தாலும் தப்பித்து விடலாம் என்கிற குருட்டு தைரியம் .. கேவலமான தாழ்ந்த எண்ணம் . கிடைக்கிற சாக்கில் ஏதாவது கொள்ளை அடிக்கலாம், வாய்ப்பு கிடைத்தால் பெண் போலீசை கூட தடவி பார்க்கலாம் இந்த கேடுகெட்ட குணாதிசயங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்த திருட்டு கும்பல்தான் நேற்று போராட்டம் நடத்திய கும்பல்.. வக்காலத்து வாங்குவோர் இதே குணாதிசயம் கொண்டவர்கள்தான். அவர்களின் பகுதியில் இப்படி ஒரு கலவரம் நடந்தால், இங்கே கருத்து எழுதி கலவரக்காரர்களை ஆதரிக்கும் கும்பலும் இதே வேலையை செய்யும்.....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-மே-201812:22:02 IST Report Abuse
Ramamoorthy P வட்டாட்சியர் அலுவலகம் சூறை. ஸ்டெர்லிட் ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் போலீஸ் அரசு வாகனங்கள் தீக்கிரை. ஊழியர்கள் குடியிருப்பு கட்டிடம் கொளுத்தப்பட்டது இதெல்லாம் என்ன அறவழி போராட்டமா?
Rate this:
Share this comment
Bala - singapore,சிங்கப்பூர்
23-மே-201814:20:16 IST Report Abuse
Balaயார் முதலில் அறவழியை உடைத்தது மக்களா, அல்லது காவல் துறையா? மக்கள்தான் செய்ததற்கு சாட்சி ஏதேனும் உண்டா......
Rate this:
Share this comment
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
23-மே-201816:20:55 IST Report Abuse
Chowkidar தெய்வசிகாமணி மாரப்ப கவுண்டர்Bala - singapore,சிங்கப்பூர் :- அனைத்து டிவி மீடியா, பத்திரிக்கை புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் தெளிவாக சொல்கிறது ..வன்முறை கும்பல் அரசு அலுவலகத்தின் உள்ளே புகுந்து அட்டூழியம் செய்ததும் தெளிவாக தெரிகிறது.. போலீசார் முதலில் தற்காப்புக்காக பின்வாங்கும்போது, அடேய் போலீஸ் பயந்து ஓடுறாண்டா .. துரத்துங்கடா என்று கூச்சலிட்டு கொண்டு வீரத்தை காட்டிய வெற்றியாளர்கள்.. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய பொது அதே வீரத்தை காட்டியிருக்கலாம்.. எதற்கு தலை தெறிக்க ஓடியது ? வெட்டி வாய் வீரம், எதிரி பலவீனமாக இருந்தால்தாக்குவது, அவன் பலத்தோடு திருப்பிதாக்கினால் குய்யோ முய்யோஎன்று கூவுவது. அப்புறம் இன்டர்நெட்டில் வாய் கிழிய வசைபாடுவது.. உன் வீட்டில் உள்ளே புகுந்து நாலுபேர் உன் மனைவி குழந்தைகளை துன்புறுத்தி உன் வீட்டு சாமான்களை அடித்து நொறுக்கட்டும்.. அப்போது தெரியும் அந்த வலி உனக்கு.....
Rate this:
Share this comment
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
23-மே-201816:36:09 IST Report Abuse
Seenu Cp99 நாட்கள் அறவழிப் போரட்டம் செய்த போது எவனுக்கும் வலிக்கவில்லை...அப்போதெல்லாம் எங்கேபோய் இருந்தீர்கள்???? "வட்டாட்சியர் அலுவலகம் சூறை. ஸ்டெர்லிட் ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் போலீஸ் அரசு வாகனங்கள் தீக்கிரை. ஊழியர்கள் குடியிருப்பு கட்டிடம் கொளுத்தப்பட்டது" ஆளும் வர்கத்திடமிருந்து ஒரே ஒரு உயிர் கூட பலி இல்லை....பதிப்படைந்த ஒரு காவலரை கூட...போரட்டக்காரர்கள் மருத்துவமனை சேர்த்து காப்பாற்றினர்...ஆனால் இந்த தாயுள்ளம் படைத்த போராட்டக்காரர்களில் 12 உயிரிழந்துள்ளனர்......
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
23-மே-201820:55:29 IST Report Abuse
Dr.  Kumarsterlie plant, is actually encroachment of Tutukudi inhabitants. ஸ்டெரிலைட் பிளான்ட் affects the health of Tuthukudi residents. it is like as you have cited.The increased prevalence rate of asthma and respiratory infections are due to the air pollution caused by the plant. Residents wake up to itchy eyes, burning throat and breathing trouble.It is daily nesance for tutukudi people. people are seen running about the streets of Anna Nagar, Toovipuram, Bryant Nagar and George Road, fearing for their well-being. the DEE report says that after the repair work was completed, sulphur-di-oxide levels suddenly shot up from 20 ug/cubic metre to 62 ug/cubic metre, Sterlite denies all allegations. The company says it was given a clean chit by the district environmental engineer. it is contray to the report of DEE. Except people from Tutukudi, nobody can understand their problem...
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
23-மே-201811:09:32 IST Report Abuse
Needhiyin Pakkam Nil இனி யாரும் தங்களின் மற்றும் தங்கள் நாட்டின் வளங்களை காப்பதற்கும் அதன் உரிமைகளை மீட்பதற்காகவும் போராட கூடாது என்பதற்காக இது முன்கூட்டியே திட்டமிட்ட நடத்தப்பட்ட ஒரு படுகொலை, நாளை என்கவுண்டர் செய்து போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரப்போகிறார்கள் என்று தெரிந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் ஓட்டபிடாரம் சென்றார், இதற்கு முன் கொடுக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மனுக்களை கார்ப்பரேட் அரசுகளின் அழுத்தத்தின் காரணமாக தன் பதவி மட்டும் நிலைத்தால் போதும் என்று அவர் மனுக்களை குப்பை தொட்டியில் போட்டுள்ளார். வெளிநாட்டு கார்ப்பரேட் கடனுக்காக எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்து கொண்டு சத்தமே இல்லாமல் கடுமையான அடக்குமுறை சர்வாதிகாரத்தை தனக்கு வாக்களித்த மக்களின் மீதே நிகழ்த்தி வருகிறார். மண்வளம் நீர் வளம் எல்லாம் அழிந்தும் மீண்டும் இரண்டாவது ஆலைக்கு தொடங்குவதற்கு கார்ப்பரேட் அரசு அனுமதி கொடுப்பது என்ன நியாயம், மக்கள் இதை எல்லாம் எதிர்த்து போராடாமல் இதை தாங்கி கொண்டு வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு சாக வேண்டுமா, தமிழன் நிலத்தில் உள்ள மெரினாவில் தமிழ் மக்களுக்காக நினைவேந்தல் நடத்த நிரந்தர தடை என்ன ஒரு மிக பெரிய சர்வாதிகாரம் ஆட்சி, இனப்படுகொலை செய்த இலங்கையின் அழுத்தம் காரணமாக இந்திய அரசு பணிக்கிறது இந்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக அரசும் பணிகிறது தடையும் விதிக்கிறது, பாதிக்கப்பட்டவனின் உரிமை மறுக்கப்படுகிறது, மெரீனாவை இப்போது இலங்கை தான் ஆள்கிறது எனவே பேசாமல் கட்ச தீவை போன்று மெரீனாவையும் இலங்கைக்கே கொடுத்து விடலாம்........
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-மே-201816:10:18 IST Report Abuse
pradeesh parthasarathyஸ்டெர்லிட் போராட்டத்திற்கும் மெரினாவில் நினைவேந்தல் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ....உங்களை போன்றவர்களால் தான் இந்த நியாயமான ஸ்டெர்லிட் போராட்டம் வேறு பாதைக்கு திரும்புகிறது .... உங்களை போன்றவர்களின் தலையீடு இல்லாமல் ஜல்லிக்கட்டு போராட்டம் எவ்வளவு சிறப்பான வெற்றியை கண்டது ... அதை போன்று நீங்கள் தலையிடாமல் இருந்தாலே போதும் அனைத்து பொது ஜனங்களும் சேர்ந்து இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த நிறுவனத்தை தடை செய்ய வைப்பார்கள் ... உங்களுக்கு அதையும் மீறி நினைவேந்தல் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் இலங்கையில் சென்று அதை செய்யுங்கள் ... இங்கு தமிழகத்தில் வேண்டாம் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X