தமிழ்நாடு

வீணாகும் விரகனூர் மதகு அணை களை இழந்த சுற்றுலா தலம்; விரக்தியில் விவசாயிகள்

Added : மே 23, 2018
Advertisement

மதுரை, மதுரை விரகனுாரில் 1975ம் ஆண்டு 18.77 லட்சம் ரூபாயில் கட்டிய மதகு அணையின் தடுப்புச்சுவர், ஷட்டர், பூங்காக்கள் பராமரிப்பின்றி உள்ளது. நீர்ப்பிடிப்பு மற்றும் வரத்து கால்வாய்களில் முட்புதர் மண்டி சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் அணையை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வைகை அணை நீரை தேக்கி மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் 87 கண்மாய்களை நிரப்பி, 40,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற, இந்த அணை கட்டப்பட்டது. அணை வலது கால்வாயில் 3, இடது கால்வாயில் 2, ராமேஸ்வரம் ரோட்டில் 6 மற்றும் அணை குறுக்கே 18 ஷட்டர்கள் அமைத்து தண்ணீர் வினியோகம் நடந்து வருகிறது. மதுரை -- ராமேஸ்வரம் ரோட்டில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதற்காக, செயற்கை நீரூற்று மற்றும் குழந்தைகள் விளையாட்டு சாதனம் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.சேதமாகும் அணை பகுதிஅணை பராமரிப்பிற்காக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உட்பட 62 ஊழியர்கள் பணிபுரிந்தனர். தற்போது 4 ஆக குறைந்துவிட்டது. இதனால் அணையை பராமரிக்க முடியாமல் அணை தடுப்புச்சுவர் மற்றும் ஷட்டர்கள் சேதமுற்றன. பூங்கா மரங்களால் அடர்ந்து காணப்படுகிறது. ஒரு பூங்காவை பூட்டியே வைத்துள்ளனர். மின்விளக்குகள் எரியாமல் இருண்டு காணப்படுகிறது. மின்விளக்கு பராமரிப்பிற்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்கியும், மின்விளக்கு செப்பனிடப்படவில்லை.ஆற்றின் குறுக்கே நடைபாதை அணை பகுதியில் வாகனங்களை அனுமதித்தால், சேதம் ஏற்படும் என்பதற்காக ஆண்டார் கொட்டாரம் உட்பட 7 கிராமங்களை சேர்ந்தவர்கள் விரகனுார் செல்ல ஆற்றின் குறுக்கே நடைபாதை பாலம் கட்டும் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணியோடு நின்றுவிட்டது. இதனால், மழை, வெள்ள காலங்களில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணைப்பகுதி ரோட்டில் செல்ல தடை விதிப்பர். அக்காலகட்டத்தில் 7 கி.மீ., துாரமுள்ள கருப்பாயூரணி, சக்கிமங்கலம் சுற்றியே மக்கள் செல்ல வேண்டும். அதே போன்று மதகு அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் வரத்து கால்வாய்கள் முட்புதர்களால் சூழ்ந்துள்ளன. அணையின் உள்பகுதியில் தேங்கிய சாக்கடை கழிவுநீரில் ஆகாய தாமரைகள் வளர்ந்து, நீர்ப்பிடிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.முடங்கிய சுற்றுலா தலம்இங்கு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா வருவர். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. தற்போது உரிய பராமரிப்பின்றி சுற்றுலா தலமே முடங்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருமாவட்ட விவசாயிகள், சுற்றுலா பயணிகள் நலன்கருதி மதகணையை செப்பனிட அரசு முன்வரவேண்டும்.

இரவில் மணல் திருட்டு


எங்கள் கிராம விவசாயத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் முட்புதரால் மூடிக்கிடக்கின்றன. இரவில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுத்து நீர் ஆதாரத்தை காக்க வேண்டும். பொதுப்பணி நிர்வாகம் கருணையுடன், அணை சாலை பகுதியில் டூவீலர், நடந்து செல்ல அனுமதிக்கின்றனர். மழை வெள்ள காலத்தில் இதற்கும் தடை விதித்தால், சிரமம் தான். இதை தவிர்க்கவே ஆற்றின் குறுக்கே நடைபாதை பாலம் கட்டுவதாக கூறினர். அப்பணியும் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.எஸ்.பூதத்தார், கருப்புபிள்ளையேந்தல்சேதமாகும் சுவர், ஷட்டர்கள்
அணையை பராமரிக்க இருந்த ஊழியர்கள், தற்போது இல்லை. இதனால், உரிய பராமரிப்பின்றி மதகு அணையின் சுற்றுச்சுவர், ஷட்டர்கள் சேதமடைந்து, அணை தன் பலத்தை இழந்து வருகிறது. மின் விளக்குகள் எரியாமல் இரவில் திருடர்கள் அச்சம் நிலவுகிறது. அரசு அணைப்பகுதியை புனரமைத்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.எம்.கிருஷ்ணன், கருப்பு பிள்ளையேந்தல்அணை புத்துயிர் பெறும்அணைப்பகுதியில் போர்வெல் அமைத்தும் நீர்வரத்து இல்லை. இதனால் பூங்காக்களை பராமரிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் அணை பகுதியில் உள்ள மின்விளக்குகளை சேதப்படுத்திவிட்டு செல்கின்றனர். சாக்கடை கழிவுகள் வருவதை தடுத்தால் மட்டுமே, ஆறு சுத்தமாகும். சேதமான அணை தடுப்புச்சுவர், ஷட்டர்களை புனரமைத்து மதகு அணை புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மோகன்குமார்,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்120 கால்வாயில் கழிவு நீர்துவரிமான் முதல் விரகனுார் வரை 120 இடங்களில் மழைநீர் ஆற்றிற்குள் செல்வதற்காக வரத்து கால்வாய் அமைத்திருந்தனர். காலப்போக்கில் இக்கால்வாய் வழியே கழிவு நீர் சென்று, ஆற்றில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. மதுரையில் இருந்து செல்லும் கழிவுநீர் விரகனுார் மதகு அணையில் தான் தேங்குகிறது. ஆற்றிற்குள் சாக்கடை கழிவு கலக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி, மாவட்ட நிர்வாகம் ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடி, பாலிதீன் கழிவுகளை அகற்றும் பணியை துவக்கியது. அத்திட்டமும் முடங்கிவிட்டது. வைகையை சுத்தம் செய்தால் மட்டுமே, நீர் ஆதாரத்தை காக்க முடியும்.எல்.ஆதிமூலம், பொதுச்செயலாளர், வைகை பாசன விவசாயிகள் சங்கம்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X