துாத்துக்குடி: துாத்துக்குடி முற்றுகை போராட்டக்காரர்களுடன், மாவோயிஸ்ட் உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் ஊடுருவியிருப்பதை போலீசார் கண்காணிக்க தவறி விட்டதையே, நேற்றைய சம்பவம் உணர்த்துகிறது.
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், சில மாதங்களாகவே திசை மாறி வருகிறது. வழக்கமாக, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் என்ற பெயரில் நடத்துவர். போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றி சென்று, மண்டபத்தில் வைப்பது வழக்கம். ஆனால்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குமரெட்டியாபுரம், மீளவிட்டான் என, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியது. குறிப்பாக, புற்றுநோயால் குடும்ப தலைவர்களை இழந்த குடும்பங்களை ஒன்றிணைத்தனர்.
கடந்த, 100 நாட்களாக நடந்த போராட்டம், இதுவரை போராட்டத்தையே பார்த்திராதவர்களிடம் புதிய போக்கை ஏற்படுத்தியது. மேலும், தி.மு.க., - அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்திராமல் மக்கள் அதிகாரம், புரட்சிகர மக்கள் முன்னணி போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்கள், போராட்ட களத்தில் இறங்கின.
நேற்றைய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில், ஜெயராமன், மக்கள் அதிகாரம் அமைப்பையும், தமிழரசன், புரட்சிகர மக்கள் முன்னணி அமைப்பையும் சேர்ந்தவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடம் தீவிர இடதுசாரி அமைப்புகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்றைய சம்பவத்திலும், இத்தகைய அமைப்பினர் ஊடுருவியதை கண்காணிக்க, போலீசாரின் உளவுப் பிரிவுகள் தவறி விட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE