சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
TN Jallianwala Bagh , Sterlite protest, Tuticorin riots,   தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், இன்டர்நெட் இணைப்பு முடக்கம், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி,குழப்பம்,
Thoothukudi, Tamil Nadu opposition leaders, confusion, 
Internet connection freezing, sterile plant,Tuticorin 144 ban imposed, law and order problem, sterile struggle, Tuticorin shoot, Tuticorin struggle, Tuticorin sterile plant,

துாத்துக்குடியில் குவியும் எதிர்க்கட்சி தலைவர்களால், அமைதி நடவடிக்கையில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பதற்றம் நீடிக்கும் நிலையில், 'நேரில் ஆறுதல்' என, நாடகமாட வருவதாகவும், அரசுக்கு எதிராக, மக்களை துாண்டும் வகையில் பேசுவதாகவும், குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இவர்களுக்கு இடையில், அரசியலில் குதித்த நடிகர்களும், ஆளாளுக்கு ஆவேசப்படுவதால், அமைதியை ஏற்படுத்த, போலீசார் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

TN Jallianwala Bagh , Sterlite protest, Tuticorin riots,   தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள், இன்டர்நெட் இணைப்பு முடக்கம், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி,குழப்பம்,
Thoothukudi, Tamil Nadu opposition leaders, confusion, 
Internet connection freezing, sterile plant,Tuticorin 144 ban imposed, law and order problem, sterile struggle, Tuticorin shoot, Tuticorin struggle, Tuticorin sterile plant,


துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, நேற்று முன்தினம், போராட்டக்காரர்களும், பொது மக்களும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை, போலீசார் தடுத்த போது, இரு தரப்பினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. பின் அது, கலவரமாக மாறியது.

கலவரத்தை ஒடுக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,12 பேர் பலியாகினர்.அதை தொடர்ந்து, ஆங்காங்கே வன்முறைநீடிப்ப தால், மாவட்டம் முழுவதும், பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அங்கு, அமைதி எப்போது திரும்பும் என, மாவட்ட மக்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர். ஆனால், எதிர்க் கட்சி தலைவர்களால், மீண்டும் குழப்பம் ஏற்படத் துவங்கி உள்ளது. இச்சம்பவத்தை, தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த துடிக்கும், அரசியல் கட்சித் தலைவர்கள், 'நேரில் ஆறுதல்' என்ற பெயரில், துாத்துக்குடி வந்துள்ளனர்.

பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அரசுக்கு எதிராக, மீண்டும் மக்களை துாண்டும் விதத்தில் பேசுகின்றனர். அரசியலில், புதிதாக குதித்த நடிகர்களும், ஆளாளுக்கு ஆவேசமாக, கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது, அமைதியை விரும்பும் மக்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மாவட்டத்தில் பதற்றத்தை தணித்து, அமைதியை ஏற்படுத்த, போலீசார் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதற்கு, பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கலவரத்தை துாண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர், கருத்துகள் பதிவிடு வதை தவிர்க்க, துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், நேற்று, 'இன்டர்நெட்' இணைப்பு முடக்கப்பட்டது. 27ம் தேதி வரை, இம்மூன்று மாவட்டங்களிலும், இணையதள சேவைகள் முடக்கப்படுகின்றன.

நடிகர்கள் மீது நடவடிக்கை :

'துாத்துக்குடியில், போராட்டத்தை துாண்டும் வகையில், 'வீடியோ' வெளியிட்ட நடிகர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை, அரசுக்கு எதிராக திருப்ப, பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, 'செயல்' என்ற அமைப்பின் சார்பில், 'தடை அதை உடை' என்ற பெயரில், வீடியோ தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோ பாடல், ஒரு வாரமாக, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்பட்டது. இந்த வீடியோவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வரும்படி, நடிகர்கள் அமீர், விதார்த், கபாலி விஸ்வந்த் உள்ளிட்டோர், மக்களுக்கு அழைப்பு விடுத்த னர். சினிமா கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்திற்கு வந்து உள்ளனர். போராட்டம், கலவரமாக வெடித்து உள்ளது. 'போராட்டத்தை துாண்டும் வகையி லான வீடியோவில் நடித்த, நடிகர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (146)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
bkumar -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-201819:53:38 IST Report Abuse

bkumarnow for any issue in tamilnadu- Kamal, Rajani, vishal, satyaraj, bharathiraj, vijay, surya, vairamuthu, etc,.etc,. have to visit disaster sites, proclaim their loyalty to tamil and tamilians in front of TV cameras. this is in addition to about 20 political parties routinely practising disaster tourism.mad people crowd around just to gawk at them. how can the Govt do its job? if you remove TV cameras all this tourism crowd will disappear. govt should ban TV channels and allow only Doordarshan to cover these sites.

Rate this:
ssk - chennai,இந்தியா
24-மே-201818:43:00 IST Report Abuse

sskகைப்புள்ள நீ சொல்வது 100 % கரெக்ட். இந்த உதவாத சினிமா காரங்க சொல்ல கேட்டு தூத்துகுடி மக்கள் உண்மை என்ன வென்று தெரியமா போராடறாங்க...

Rate this:
Ramanujan - Chennai,இந்தியா
24-மே-201817:57:58 IST Report Abuse

RamanujanPolice force lacks professionalism. That is why they couldn't manage it well. I have been building a house in Chennai. They are roaming everyday to see if materials are outside and demanding money. They should search for criminals, not like this. They should use a helicopter to videograph the criminals in such agitation and catch at least 1000 with evidence and see they are jailed. They should shoot only those doing vandalism and no innocent should get caught in the fire. When they will raise the standard?

Rate this:
bal - chennai,இந்தியா
24-மே-201821:13:02 IST Report Abuse

balஇது ஒன்னும் வீடியோ கேம் இல்ல கண்ணு.... ...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
25-மே-201812:35:01 IST Report Abuse

Gopiஇப்படியே பேசிட்டு இருந்தால் ஒன்னும் நடக்காது. ஹெலிகாப்டர் இல்லைனா என்ன ஒரு டுரொன கொண்டாவது நிலைமை எப்படி இருக்கு எப்படி பாதுகாப்பை அதிகரிக்கலாம், எந்த இடத்துக்கு அதிக காவலர்களை அனுப்பலாம். கும்பல்களிலிருந்து எப்படி குழந்தைகள், பெண்களை பிரித்து பக்கத்திலில் உள்ள பெரிய திடல் பள்ளிகளில் அமரவைக்கலாம் என்ற செயலில் ஈடு பட்டு , அதையும் மீறி வன்முறை நடந்திருந்தா வீடியோ பதிவை கொண்டு கும்பலில் இருந்த குற்றவாளிகளை பிடிக்கலாம் ...

Rate this:
மேலும் 141 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X