தி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ஸ்டெர்லைட்டை மூட ஸ்டாலின் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு
ஸ்டெர்லைட்டை மூட ஸ்டாலின் வலியுறுத்தல்

துாத்துக்குடி:''ஸ்டெர்லைட் ஆலையை மூடினால்தான் துாத்துக்குடியில் அமைதி ஏற்படும் நிலை உள்ளது,'' என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தி.மு.க., வினரின் 8 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கார் எரிக்கப்பட்டது.

 தி.மு.க.வினரின், 8 கார்கள் ,சேதம், தீவைப்பு, ஸ்டெர்லைட்டை மூட ,ஸ்டாலின், வலியுறுத்தல்


துாத்துக்குடி துப்பாக்கிசூட்டில் காயமடைந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூற ஸ்டாலின் வந்தார். நுழைவு வாயிலில் பாதிக்கப்பட்ட மக்கள் அவரை மறித்தனர். அரசியல்வாதிகள் வருவதால் எந்த பயனும்

இல்லை என அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கமாண்டோ படையினர் ஸ்டாலினை மீட்டு மருத்துவமனைக்குள் அழைத்துச்சென்றனர். அவருடன் டி.ஆர்.பாலு, மாவட்டசெயலாளர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் இருந்தனர்.

ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:


காயமடைந்தவர்களுக்கு நான் ஆறுதல் கூறினேன். முதல்வரோ, அமைச்சர்களோ ஆறுதல் கூறவரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவித்தால்தான் அமைதி ஏற்படும். அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்சியில் இருந்தால் போதும் என்று உள்ளார்கள்.

துப்பாக்கிசூட்டிற்கு முழுப்பொறுப்பு ஏற்று முதல்வர், டி.ஜி.பி.,ராஜேந்திரன் பதவி விலக வேண்டும். கலெக்டர், எஸ்.பி.,யை மாற்றவேண்டும்.

Advertisement

அமைதி ஏற்பட, அரசு நல்லிணக்க குழு ஏற்படுத்த வேண்டும். இந்த சம்பவம் குறித்து தலைமை செயலாள ரும் எதுவும் தெரிவிக்காமல் முதல்வரை போலவே மவுனமாக உள்ளார், என்றார்.

ஸ்டாலினுடன் 15 க்கும் மேற்பட்ட கார்களில் கட்சியினர் துாத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு வந்தனர். 8 கார்களை போராட்டக் காரர்கள் துாத்துக்குடி போல்பேட்டை பகுதியில் மறித்து அடித்து நொறுக்கினர். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-201805:38:03 IST Report Abuse

meenakshisundaramஸ்டாலினை விட்டு வைத்ததே பெரிது. குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்ட சென்ற மாவீரன் இனிமேல் காவிரி ஆணையம் அமையும் வரை போராட்டம், இப்போது பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் ,என்று நாளொரு கலவரத்தை வைகோவுடன் சுரந்து தூண்டுவாரா? இவர் சட்டை கிழியாமல் தப்பினார் அதுவே நல்லது.

Rate this:
bal - chennai,இந்தியா
24-மே-201821:14:04 IST Report Abuse

balஇந்த ஆளே கொளுத்த சொல்லிட்டு இப்போ நாடகம்....உள்ளே தூக்கி போடுங்க...இந்த ஆளை

Rate this:
மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
24-மே-201818:55:38 IST Report Abuse

மோகன்இவரு வந்து என்ன ஆணி புடுங்க போறாரு... கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி குளிர்காயிற கூட்டம்.. அடிச்சு விரட்டுங்க.. இனிமேலாவது காசு வாங்காம நேர்மையா ஒட்டு போடணும்.. நம்ம எல்லாரும், நம்மை நாமே சரி செய்துகொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்...

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
24-மே-201821:08:16 IST Report Abuse

SARAVANAN Gஎப்படி ? மறுபடியும் , மாண்புமிகு உங்க அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்கா ?...

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X