பொது செய்தி

இந்தியா

வாய் பேசா பெண் கீதாவை திருமணம் செய்ய 50 பேர் போட்டா போட்டி

Added : மே 24, 2018 | கருத்துகள் (31)
Share
Advertisement
கீதா திருமணம், வெளியுறவு அமைச்சகம் , அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பேஸ்புக் சமூக வலைதளம் , காது கேளாத- வாய் பேச முடியாத இளம் பெண் கீதா, 
Geeta married, Foreign Ministry, Minister Sushma Swaraj, Facebook social network,

இந்துார்: பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண், கீதாவை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்த, 50 பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 பேரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி, வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தன், 9 வயதில், பெற்றோரை பிரிந்து, ரயில் ஏறி, லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்து, 'கீதா' என்று பெயரிட்டு வளர்த்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த கீதா, மத்திய வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், பெறோரை தேடி வருகிறார்.

தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, காது கேளாத, வாய் பேசாத சிறுமியருக்கான ஆதரவு இல்லத்தில் தங்கிஉள்ளார்.பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.

இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கீதாவை திருமணம் செய்ய, 50 பேர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டோர் விபரங்களை, இந்துார் நகர நிர்வாகத்துக்கு அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், அவர்கள் அனைவரையும், கீதா சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளது. அவர்களில், தான் விரும்பும் ஆணுடன், கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
25-மே-201811:47:28 IST Report Abuse
THINAKAREN KARAMANI அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் இந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய ஏற்ப்பாடு செய்யும் நல்ல உள்ளங்களை குற்றம் குறை சொல்லாமல் நல்லதே நடக்கும் என்ற மனநிலையோடு அந்த பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்து நல்லபடியாக திருமணம் நடந்து நல்மணவாழ்க்கை அமைந்திட வாழ்த்துவோம். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-மே-201813:53:10 IST Report Abuse
Pugazh V இவரை திருமணம் செய்பவருக்கு இலவச வீடு மட்டுமல்ல , சமையல் வாயு கனெக்ஷன், அரசு வேலை, தாலிப் பொன் பாத்திரங்கள் எல்லாம் இலவசம் என்று அரசு அறிவித்ததை ஏனோ செய்தியில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இலவசங்கள் கொடுத்து பொன்னையும் குடுத்தா...இதையே பிற கட்சிகள் செய்தால் அது பேர் மக்களை பிச்சைக்காரன் ஆக்குவது.
Rate this:
Kumz - trichy,இந்தியா
30-மே-201803:32:06 IST Report Abuse
Kumz மூர்க்கா உனக்கு ஏன் இந்த கேடுகெட்ட புத்தி...
Rate this:
Cancel
ஆன்மீகச் சிந்தனைகள் - tiruchirapalli,இந்தியா
24-மே-201813:03:12 IST Report Abuse
ஆன்மீகச் சிந்தனைகள் இதுவும் ஒருவகை வரதட்சணை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X