அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு: 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு: 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு

Added : மே 24, 2018 | கருத்துகள் (44)
Share
TN Jallianwala Bagh , Sterlite protest, , Tuticorin riots, அமைதி ஏற்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் , துாத்துக்குடி மாவட்டம், போக்குவரத்து துறை கூடுதல் செயலர் டேவிதார், வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி , முதல்வர் பழனிசாமி ,  சைலேஷ் யாதவ், கலெக்டர் வெங்கடேஷ், எஸ்பி மகேந்திரன் , தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை,ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,
Appointment of IAS Officers for Peace, Additional District Secretary of the Department of Transport, Duttar, Dakar, Chief Secretary of Agriculture Kaganatheep Singh Bedi,
Chief Minister palanisamy, Shailesh Yadav, Collector Venkatesh, SP Mahendran, Thoothukudi riots, Sterlite plant, Sterlite struggle, Thoothukudi shootings, Thoothukudi struggle, Thoothukudi Sterlite plant,

சென்னை : துாத்துக்குடி மாவட்டத்தில், அமைதியை நிலைநாட்ட, கண்காணிப்பு அலுவலர்களாக, இரண்டு மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் நடந்த, அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும், மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், போக்குவரத்து துறை கூடுதல் செயலர் டேவிதார், வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரை, கண்காணிப்பு அலுவலர்களாக, முதல்வர் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டார்.

இருவரும், நேற்று துாத்துக்குடி சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு கூடுதல், டி.ஜி.பி., விஜயகுமார், தென் மண்டல காவல் துறைத் தலைவர் சைலேஷ் யாதவ், கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி., மகேந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன், ஆய்வுக்கூட்டம் நடத்தி, உரிய அறிவுரைகளை வழங்கினர்.

பின், ககன்தீப்சிங் பேடி, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ , தென் மண்டல, டி.ஐ.ஜி., பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி உத்தரவிட்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X