"இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" - இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

Added : மே 24, 2018 | |
Advertisement
ஈஷா விவசாய இயக்கம் சார்பாக தெற்கு மண்டல விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, மதுரை துவரிமானில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் 16.05.18 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை
"இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" - இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக தெற்கு மண்டல விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி, மதுரை துவரிமானில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் 16.05.18 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறைகள், அவற்றை எவ்விதம் பயன்படுத்துவது, பயிற்களுக்கு அவற்றை பயன்படுத்துவதினால் ஏற்படும் நன்மைகள் போன்றவை விவசாயிகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. பண்ணையில் கிடைக்கும் பொருட்களைக் பயன்படுத்தி விவசாயிகளே இந்த இடுபொருட்களைத் தயாரித்துக் கொள்ள முடியும், இதனால் உரச்செலவுகள் இல்லாததினால் விவசாயியின் நிகர வருமானம் அதிகரிக்கும்.

அதிக உரச்செலவுகளினால் துன்பப்பட்டு இரசாயன விவசாயத்திற்கு மாற்று தேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இந்த பயிற்சி பலனுள்ளதான அமையும். இப்பயிற்சியை பெறும் விவசாயிகள் பொருளாதார வளம் மேம்படும். இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் மண் வளம் அதிகரிப்பதோடு நஞ்சில்லாத உணவுப் பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கன ஜீவாமிர்தம், பத்து இலை கஷாயம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம், புளித்தமோர் கரைசல், மூங்கில் E.M, பழ E.M, மீன் அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும் களப்பயிற்சியும் அளிக்கப் படுகிறது. இந்த இடுபொருட்களில் அடி உரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சி விரட்டி போன்றவை அடங்கும்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாக இத்தகைய பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மாதத்திற்கு 2 முதல் 3 பயிற்சிகள் வீதம் இதுவரை 23 பயிற்சிகள் நடைபெற்றுள்ளது, இப்பயிற்சிகளின் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை இடுபொருட்களை தயாரிக்க பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சியைத் தவிர பயிர்வாரியான பயிற்சிகளையும், பூச்சிகள், கால்நடைகள் குறித்த சிறப்புப் பயிற்சிகளையும் ஈஷா விவசாய இயக்கம் அளித்து வருகிறது.
மேலும் தொடர்புக்கு : 8903816461

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X