ஆண்-பெண் தன்மைகளைக்கடந்து செல்வது ஏன் அவசியம்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

ஆண்-பெண் தன்மைகளைக்கடந்து செல்வது ஏன் அவசியம்?

Added : மே 24, 2018 | கருத்துகள் (1)
ஆண்-பெண் தன்மைகளைக்கடந்து செல்வது ஏன் அவசியம்?

நம் அனுபவங்களின் அடிப்படையாக முதுகுத்தண்டில் பாயும் நாடி'களால் மனிதஉள்நிலையில் உண்டாகும் மாற்றங்களின் விளைவுகளை விளக்குகிறது இந்தப் பதிவு! வைராக்கியா எனும் நிலையைஅடைவது குறித்தும் அதன் மகத்துவங்கள் குறித்தும் இதில் சத்குரு உணர்த்துகிறார்!

கேள்வியாளர்:நமது அனுபவத்தின் தன்மையை முதுகுத்தண்டுதான் நிர்ணயம் செய்கிறது என்றுநீங்கள் பேசினீர்கள். அதைப்பற்றி மேலும் சற்றுவிரிவாகக் கூற முடியுமா, சத்குரு?

சத்குரு: முதுகுத்தண்டிற்கு உள்பக்கமாக, அதன் இரு பக்கங்களிலும், உடலின் எல்லா நரம்புகளும் கடந்து செல்வதற்கென, கால்வாய்க் குழாய் போன்ற இரண்டு துளைகள்உள்ளன. இடது பக்கப்பாதை ஈடா என்றும், வலது பக்கப்பாதை பிங்களா என்றும் அழைக்கப்படுகிறது.

பிராணமயகோசம் அல்லது சக்திஉடலில், 72,000 நாடிகள்உள்ளன. நாடிகள், இந்தஉடலமைப்பில், பாதைகள்அல்லது கால்வாய்களாக செயல்படுகின்றன.இருப்பினும், இந்தஉடலை வெட்டினால், அவற்றைநீங்கள் பார்க்க முடியாது.ஆனால், உங்களது விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, சக்தியின் ஓட்டம் குறித்து நீங்கள்உணர்வீர்கள்.அப்போது, சக்தியானது, தற்செயலாகஅங்குமிங்கும் இலக்கின்றிநகராமல் குறிப்பிட்ட பாதைகளில்தான் நகர்கிறது என்பதைஅறிவீர்கள்.சக்தியானது 72,000 வெவ்வேறுவழிகளில் நகர்கிறது.இந்த 72,000 வழிகள்அல்லது நாடிகள்ஈடா, பிங்களா மற்றும் சுஷ§ம்னா ஆகிய மூன்று அடிப்படை நாடிகளிலிருந்தே கிளை விடுகின்றன.

ஈடா மற்றும் பிங்களா ஆகியஇரண்டும் வாழ்வின் இரண்டு பரிமாணங்களாக இருக்கும் பெண்தன்மை மற்றும் ஆண்தன்மை ஆகியவற்றின் குறியீடாக இருக்கின்றன. இது பாலின வேறுபாடு பற்றியோ அல்லது ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பது பற்றியோ அல்ல. மனிதஇயல்பில் தென்படும் சில குணாதிசயங்களைப் பற்றியது.இயற்கையில் சில குணங்கள் ஆண் தன்மை என்றும் சில குணங்கள் பெண் தன்மை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு ஆணாக இருக்கலாம்.ஆனால் உங்களது ஈடா குறிப்பிடும்படியாக இருந்தால், உங்களுக்குள் பெண்தன்மை ஆதிக்கத்தில் இருக்கக்கூடும்.அதே போல, நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கலாம்.ஆனால் உங்களது பிங்களா குறிப்பிடும்படியாக இருந்தால் உங்களுக்குள் ஆண்தன்மையானது ஆதிக்கத்தில் இருக்கக்கூடும்.நீங்கள் தோற்றத்தில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை என்றுகூறும்போது, ஆண் தன்மையின் குறியீடானபிங்களா காரணரீதியானபரிமாணத்தையும் பெண்தன்மையின் குறியீடானஈடா மனதின் உள்ளுணர்வு தொடர்பானபரிமாணத்தையும் குறிக்கிறது.

இதை வேறுவிதமாகப் பார்ப்பதென்றால், இந்தஇரண்டு அம்சங்களையும் சூரியன் என்றும் சந்திரன் என்றும் குறியீடு செய்யலாம்.அதாவது பிங்களா வெளிமுகமாகவும் ஆண் தன்மையை ஒத்து இருப்பதால் சூரியன் என்றும் ஈடா பிரதிபலிப்பதாகவும், உள்வாங்கும் தன்மையுடனும் பெண் தன்மையை ஒத்து இருப்பதால் சந்திரன் என்றும் குறிக்கப்படுகிறது.ஆண் தன்மையும் பெண் தன்மையும் வாழ்வின் இரண்டு பாதிகளாக உள்ளன. ஒன்றில்லாமல் மற்றது நிகழ முடியாது.அனைத்து சக்தியும் இந்த முறையில்தான் செயல்படுகின்றன.மின்சாரம் என்பது நேர்மின்னோட்டம் மற்றும் எதிர்மின்னோட்டம் இரண்டும் இணைந்தது.ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று அதிக முக்கியத்துவமானது என்று எவரும் கூறமுடியாது. வாழ்வின் இந்தஇரண்டு அம்சங்களான ஆண்தன்மை மற்றும் பெண் தன்மை, ஈடா மற்றும் பிங்களா என்றஇரண்டு வழித்தடங்களாகக் குறிக்கப்படுகிறது.

இந்தியக் கலாச்சாரத்தில், இரண்டு பாரம்பரியங்கள் வளர்ச்சி அடைந்தன.அவைசூரியன் மற்றும் சந்திரனுடன் தனித்தனியேஅடையாளம் கொண்டு வளர்ந்தன.அதன்படி சிலர் சூரியவம்சத்தினர் என்றும் மற்றும் சிலர் சந்திரவம்சத்தினர் என்றும் குறிக்கப்பட்டனர்.ஆன்மீக செயல்முறை, சமூக செயல்முறை, அரசியல் செயல்முறை மற்றும் பொருளாதார செயல்முறைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த அமைப்பும் இந்தஇரண்டு பரிமாணங்களை அடித்தளமாகக் கொண்டே வளர்ச்சி பெற்றது.இன்றைக்கும்கூட அது வெளிப்படுகிறது.ஆனால் அப்படிக் குறிப்பிட்டு அடையாளம் காண முடியாமல் இருக்கிறது.

இவைகள் பூமியின் இருவித பரிமாணங்களின் செயல்பாடாக இருக்கின்றன.சிலர் தங்களுக்குள் சந்திரனை மையமாகக் கொண்டு இயங்குகிறார்கள், சிலர் சூரியனைதங்களுக்குள் மையமாகக் கொண்டு இயங்குகிறார்கள்.ஆனால் இரண்டுமே பிரச்சனைதான்.மிகச் சிலமனிதர்கள்இரண்டையும் சமமாகப்பயன்படுத்தி இயங்குகிறார்கள்; அவர்கள்தான் இந்தப் பூமியின் தீர்வாகஉள்ளனர்.

எப்போதும் நீங்கள் பார்ப்பீர்கள், மிகவும் “நல்ல” மனிதர்கள்எண்ணற்றபிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டே செல்வார்கள். மிகவும் நல்ல ஒரு பெண்ணும், மிகவும் நல்ல ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டால் எவ்வளவு பிரச்சனைகளை அவர்கள் உருவாக்குகிறார்கள்!அதன் காரணம் இதுதான்.அவர்கள்இரண்டு வெவ்வேறு பரிமாணங்களிலிருந்து இயங்கிக்கொண்டு, அதே நேரத்தில் ஒரு புள்ளியில் சந்திக்க முயற்சிக்கின்றனர், அது அப்படி நடக்காது.ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டே ஓடுவது போலத்தான் அது இருக்குமே தவிரஇணைந்து செல்வதாக இருக்காது.முடிவற்ற சச்சரவும், உரசலும்தான் அங்கேநிகழும்.எத்தனைதடவைஅவர்கள்உட்கார்ந்து அதைஅலசிஆராய முற்பட்டிருப்பார்கள்?“நமக்குள் ஏன் உறவுமுறை இப்படி இருக்கிறது, நமக்குள் என்னதான் பிரச்சனை?நமக்குள் எந்தப்பிரச்சனையும் இல்லையே, நாம் இருவருமே நல்லவர்கள், மகத்தானவர்கள்தான். பிறகு ஏன் நமக்குள் பிரச்சனைஎழுகிறது?”இவ்வளவு கேள்விகள் மிஞ்சினாலும் அங்கே தர்க்கரீதியானகாரணங்கள் எதுவுமே காண முடியவில்லை. ஆனாலும் பிரச்சனை இருக்கிறது.

ஒரு கணவனும், மனைவியும் இதற்கான தேர்ந்த உதாரணம் என்றாலும், இத்தகைய பிரச்சனை கணவன், மனைவிக்கு இடையில் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லா இடங்களிலும், அனைவருக்கும் இடையிலும், வெவ்வேறு அளவுகளில், பலவிதங்களில் இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டு அம்சங்களையும் சமமாகக் கையாள்பவர்கள்மட்டுமே, தங்களுக்குள் உள்ள சூரியன் மற்றும் சந்திரனின் தன்மைகளை சமமான அளவில் கையாள்பவர்கள்மட்டுமே தீர்வுக்கான வழியாக இருப்பார்கள்.மற்றவர்கள் அனைவரும் பிரச்சனைகளைத்தான் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள்ஒன்றும் தவறானவர்கள் இல்லை. அவர்கள் மிகவும் நல்லவர்கள்தான், ஆனால் அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள்.இரண்டு தீயவர்கள்தான் சண்டையிட்டுக் கொள்வதாகநீங்கள்நினைத்துவிடாதீர்கள்.இங்கேஎப்போதும் இரண்டு நல்லமனிதர்கள்தான் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.எந்த அளவுக்கு அதிகமாக, அவர்கள்தங்களை நல்லவர்களாக நினைக்கிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமாக சச்சரவு செய்கிறார்கள், இல்லையா?

பெரும்பாலும் மனிதர்கள்ஈடா மற்றும் பிங்களாவிலேயே வாழ்ந்து முடிந்து விடுகின்றனர்.சுஷ¨ம்னா என்கிற மையப்பகுதியானது, மனிதஉடற்கூற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஅம்சம்.சக்திகள் சுஷ¨ம்னாவிற்குள் நகரும்போதுதான், உண்மையில் வாழ்க்கை தொடங்குகிறது, ஆனால் பெரும்பான்மையானோருக்கு அது சுஷ¨ம்னாவிற்குள் அசைவற்றநிலையிலேயே இருக்கிறது.

அடிப்படையில், சுஷ¨ம்னா எந்தத் தன்மையும் அற்றது.அதற்கேஉரித்தான குணாதிசயம் எதுவும் இல்லை. அது வெற்றுவெளி போன்றது.ஒரு வெற்றிடம் இருந்தால், நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் உருவாக்க முடியும்.ளுங்கள்சக்திநிலைகள் சுஷ¨ம்னாவிற்குள் நகர்ந்துவிட்டால், நீங்கள் வைராக்யா நிலையை எட்டிவிட்டீர்கள்என்றுகூறுகிறோம். “ராகா” என்றால் நிறம் என்பது பொருள். “வைராக்யா” என்றால் நிறமற்றது.சிங்கள்கண்ணாடி போலாகிவிட்டீர்கள்என்பது பொருள். நீங்கள்ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடியாகிவிட்டால், உங்களுக்குப் பின்னால் சிவப்பு நிறம் இருந்தால், நீங்களும் சிவப்பாகமாறுகிறீர்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பது நீலம் என்றால், நீங்களும் நீலமாகிவிடுகிறீர்கள்.நீங்கள்பாரபட்சமற்றவர். நீங்கள் எங்கிருந்தாலும் அதன் ஒரு பாகமாகவேமாறிவிடுகிறீர்கள். ஆனாலும் எதுவும் உங்களிடம் தேங்கியிருக்காது.நீங்கள் சிவப்பு மனிதர்களுடன் இருந்தால், நீங்கள் முழுமையானசிவப்பானவர் ஆக முடியும். ஏனென்றால் நீங்கள் ஊடுருவத்தக்க கண்ணாடியாக இருக்கிறீர்கள்.ஆனால் சிவப்புத்தன்மை, உங்கள் மீது ஒரு கணம் கூட தொடர்ந்து படிந்திருக்காது.

நீங்கள் வைராக்யா நிலையில் இருந்தால் மட்டுமே, வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் காண்பதற்கான தைரியம் கொள்வீர்கள். இது எப்படியென்றால், ஏதாவது ஒரு நிறம் உங்களுடன் மாறாமல் ஒட்டிவிட்டால், அதாவது சிவப்பு நிறம் உங்களுடன் தங்கிவிட்டால், பச்சைநிறத்திற்குள் செல்வதற்கு நீங்கள்எதிரானவர் ஆகிவிடுவீர்கள்.பச்சைநிறம் உங்களோடு ஒட்டிக்கொண்டால், நீலவண்ணத்திற்குள் செல்லநீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். ஆகவேவாழ்வின் ஏதோ ஒரு அம்சம் உங்களுடன் நிலைத்தால், நீங்கள்அடுத்த ஒன்றை எதிர்ப்பீர்கள்.ஏனென்றால், “இது சரி, அது தவறு, இது சரியானது, அது சரியானதல்ல” என்கிற ஒரு பாரபட்சமான போக்கை நீங்களே வளர்த்துக் கொள்வீர்கள்.இது வாழ்வின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேல், சக்திநிலைகள் சுஷூம்னாவிற்குள் நகர்ந்துவிட்டால், நீங்கள் ஒரு புதுவிதமான சமநிலையைஅடைகிறீர்கள். இந்தக் கணத்தில் நீங்கள்ஏதோ ஒரு சமநிலையில் இருக்கலாம்.ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் வெளிச்சூழல் கட்டுக்கடங்காமல் போனால், நீங்களும் கட்டுக்கடங்காமல் அதற்கு எதிர்ச்செயல் செய்வீர்கள்.ஏனென்றால், எதிர்ச்செயல் செய்வது என்பது ஈடா மற்றும் பிங்களாவின் இயல்பாக இருக்கிறது.ஆனால், சக்திநிலைகள் சுஷ§ம்னாவிற்குள் ஒரு முறை நகர்ந்துவிட்டால், நீங்கள்உள்நிலையில் ஒரு சமநிலையைஅடைகிறீர்கள்.அங்கு ஒரு குறிப்பிட்ட வெற்றிடம் உள்ளது; அதற்கு ஒருபோதும் இடையூறு செய்யமுடியாது.அது எப்போதும் எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாகாது; வெளிச்சூழல்களால் தொடப்படவேமுடியாத ஒரு வெற்றுவெளி அது.

உங்களுக்குள் நீங்கள் இந்தஸ்திரமானசூழலை உருவாக்கினால்தான், விழிப்புணர்வின் உச்சங்களை உணரக்கூடிய துணிவும், தகுதியும் பெறுவீர்கள்.வாழ்வின் மற்றபரிமாணங்களை நமக்குள் உணரவேண்டுமென்றால், துன்பம் நேருமோ என்றபயம் விலகவேண்டும். அதற்கான ஒரு ஸ்திரத்தன்மையைஉள்நிலையில் நாம் உருவாக்கவேண்டியது மிகவும் முக்கியமானது.அப்படி நீங்கள் உருவாக்கினால்தான், வாழ்வின் வெவ்வேறுபரிமாணங்களைக் காண்பதற்கான துணிவு கொள்வீர்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X