அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு: முதல்வர் விளக்கம்

Added : மே 24, 2018 | கருத்துகள் (181)
Share
Advertisement
TN Jallianwala Bagh ,Sterlite protest, CM Palanisamy,ஸ்டெர்லைட் போராட்டம், முதல்வர் பழனிசாமி, சமூக விரோதிகள் , தற்காப்புக்காக துப்பாக்கி சூடு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் , தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம்,  தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  தூத்துக்குடி போராட்டம்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,முதல்வர் விளக்கம்
Chief Minister Palanisamy, social enemies, shoot for self defense, Pollution Control Board, Tuticorin riot, Sterlite plant, Tuticorin 144 ban imposed, law and order problem, sterile struggle, Tuticorin shoot, Tuticorin struggle, Tuticorin sterile plant,

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


பொய் செய்தி

சென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் வெளியேறி விட்டார். சிறிது நேரத்தில், டிவியில் என்னை முதல்வர் பார்க்க சென்றதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்தி வந்தது. கூட்டம் முடிந்த பிறகு, என்னை சந்திக்க வேண்டும் என சொல்லியிருந்தால், எனது அறைக்கு வந்து மனு வாங்கியிருப்பேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முதல்வர் விளக்கம்

வேண்டுமேன்றே, நாடகம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நான் கூட்டத்தில் இருக்கும் போது அறை முன் அமர்ந்து கொண்டு தவறான செய்தியை பரப்பியுள்ளார். பத்திரிகை பரபரப்பு செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் அவ்வாறு செய்துள்ளார். முதல்வர் பார்க்கவில்லை என்ற செய்தி உண்மைக்கு பறம்பானது


மக்கள் கோரிக்கை ஏற்பு

2013ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களிடமிருந்து புகார் வந்ததை தொடர்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்க தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு நடந்து வருகிறது. ஆலையை தொடர்ந்து இயக்க, நிர்வாகம் மாசு கட்டப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தது. இதனை அரசு நிராகரித்து விட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி,ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வை மதித்து, 2013ல் ஆலையை மூட ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதனை அரசு எடுத்து வருகிறது.


தூண்டுதல்

14 முறை மாவட்ட கலெக்டர், சார் ஆட்சியாளரும், போராட்டக்காரர்களை அழைத்து அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கியுள்ளனர். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் விளம்பரம் செய்துள்ளார். இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது. மக்களின் கோரிக்கை சட்டத்திற்கு உட்பட்டு அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்த முறை எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் மற்றும் சமூக விரோதிககள் பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த போராட்டத்தை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.உயிரிழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.


மோசமான சூழ்நிலை

மக்கள் உணர்வுககு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அஞ்கு எந்த பொதுக்கூட்டமா, ஆர்ப்பாட்டமோ நடக்ககக்கூடாது. விஷமிகள், கட்சி தலைவர்கள் ,அப்பாவி மககளை பயன்படுத்தி இந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர் என்பதை வேதையுடன் தெரிவித்துகொள்கிறேன்.நேற்று கூட ஸ்டாலின், காயமடைந்தவர்களை சந்தித்துள்ளார்.
அங்கு 144 தடை உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கு அமைதி, இயல்பு நிலை திரும்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது அமைதியாக தான் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை அப்படியில்லை. சிலசமூகவிரோதகிள் ஊடுருவி, அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உண்டாக்கியுள்ளனர்.


தற்காப்புக்காக

போலீசாரை முதலில் தாக்கினர் இதனையடுத்து போலீசார் முதலில், தடியடி, கண்ணீர்புகை குண்டு வீசினர். இதனை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீவைத்து, ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளுக்குள் வாகனங்கள் தீவைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனை நானும் இங்கேயிருந்து பார்த்து கொண்டு இருந்தேன்.ஒருவர் தாக்கும் போது அதனை தடுப்பதும், தற்காத்து கொள்ள அதற்கு பதிலடி கொடுப்பதும் இயற்கை. இதனைதான் போலீசாரும் செய்துள்ளனர்.சில அரசியல் தலைவர்கள், சமூக விரோதிகள் ஊடுருவி தவறான பாதைக்கு அழைத்து சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (181)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,ஆஸ்திரேலியா
25-மே-201810:07:54 IST Report Abuse
manivannan இங்கே பல வித கருத்துக்களையும் பார்க்கும்போது து சூடு பற்றி எது உண்மை என்றே புரியவில்லை. இதிலேயும் சித்து விளையாட்டா ஒருவரும் உண்மையை சொல்ல போவதில்லை. மொத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள். ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிலே அவ்வப்பொழுது பிரச்னை தலை தூக்கும் பொது அதை தட்டி அமரவைக்க வேறு ஒரு பிரச்னையை பெரிது படுத்துகிறாரகள் .இது வரை எவ்வளவோ இம்மாதிரியான நாடகங்கள் பார்த்தாயிற்று .
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
25-மே-201807:07:13 IST Report Abuse
Sahayam அம்மா சாகும் போது நீங்க பண்ணாத கலாட்டாவா?? எத்தனை பேர சுட்டு கொண்டீர்கள். இது பிஜேபி திட்டமிட்டு உங்கள் ஆர்டர் இல்லாமலே நடத்தும் கொலை வெறி ஆட்டம். மனசை தொட்டு சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-மே-201800:08:40 IST Report Abuse
Mani . V காவல்துறையை தன் வசம் வைத்துள்ள பழனிசாமி ஐயா, தற்காப்புக்காக சுடுவது பொதுமக்களின் நெஞ்சை குறிபார்த்தா? அது சரி இறந்தவர்கள் யாரும் சமூக விரோதிகள் இல்லையே? (ஓ, தமிழன் தங்கள் உயிருக்காக அமைதியான வழியில் போராடுவது சமூக விரோத செயலா?). அடுத்து "துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளீர்களே, காவல்துறை மந்திரியான உங்களுக்கே அந்த படுகொலை விபரம் தெரியாது என்றால் வேறு யார்தான் அந்த கும்பலை இயக்கியது? எங்கிருந்து ரிமோட் மூலம் இயக்கப்பட்டது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X