அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
TN Jallianwala Bagh ,Sterile protest, Opposition leader Stalin, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, Thirunavukkarasar, Thoothukudi riots, Sterlite plant,Thoothukudi 144 ban imposed, law and order problem, Thoothukudi shootout, Thoothukudi protest, Thoothukudi sterile plant,Vaiko,

தடை உத்தரவை மீறி, துாத்துக்குடி சென்ற அரசியல் கட்சியினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் களான, ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது, அரசின் அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இப் பிரச்னையில், மேலும் குழப்பம் விளைவிப்போர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அரசியல் கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கவும், அரசு உறுதி பூண்டுள்ளது.

TN Jallianwala Bagh ,Sterile protest, Opposition leader Stalin, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, Thirunavukkarasar, Thoothukudi riots, Sterlite plant,Thoothukudi 144 ban imposed, law and order problem, Thoothukudi shootout, Thoothukudi protest, Thoothukudi sterile plant,Vaiko,


துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, போராட்டம் நடந்து வந்ததால், அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது. மே, 22ம் தேதி, தடையை மீறி ஊர்வலம் சென்றவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் இறந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ., செயலர் பாலகிருஷ்ணன், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மையம் தலைவர் கமல், த.மா.கா., தலைவர் வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், லட்சிய தி.மு.க., தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர், துாத்துக்குடி சென்றனர். மருத்துவ மனையில், சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, ஆறுதல் கூறினர்.

அங்கு, 144 தடையுத்தரவு அமலில் உள்ள நிலையில், அதை மீறி, அதிக நபர்களுடன்

மருத்துவமனைக்கு சென்றதால், அவர்கள் மீது, போலீஸ் தடை சட்டத்தின் சில பிரிவுகளின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தை, கலவர பூமியாக மாற்றியதில், சிறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள், சிலருக்கு பங்கு உள்ளது. அத்தகைய நபர்களின் பட்டியலை, மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளது.

அதன் அடிப்படையில், அப்பாவி மக்களை, தங்கள் சுய லாபத்திற்காக துாண்டி விடும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், வரும், 30ம் தேதி வரை, துாத்துக்குடியில் தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மக்களை துாண்டி விடும் தலைவர் களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இச்சம்பவத்தை பயன் படுத்தி, அரசியல் ஆதாயம் தேட, அரசியல் கட்சிகள் முற்படுவதாகவும், சில இயக்கங்கள் மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள், தங்களுடைய சுயநலத்திற்காக, வன்முறையை துாண்டி விட்டதாகவும், முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தகைய கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடிக்கவும், அரசு உறுதி பூண்டுள்ளது. அத்துடன், துாத்துக்குடியில் அமைதி ஏற்படுத்த வும், அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அங்கு கண்காணிப்பாளர் களாக சென்றுள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் டேவிதார், ககன்தீப்சிங் பேடி ஆகியோர், நேற்று,வணிகர் சங்கப் பிரதிநிதிகள்,

Advertisement

பாதிரியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து பேசினர். மூன்று நாட்களாக, நகரில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இன்று, கடைகளை திறக்க, அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே, விரைவில் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

போலீசார் கடும் எச்சரிக்கை!


'சமூக வலைதளங்களில், வன்முறையை துாண்டும் வகையில், பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, சமூக வலைதளங் களில், முதல்வர், டி.ஜி.பி., உள்ளிட்டோரை ஆபாசமாக திட்டி, 'வீடியோ' வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலரின் பேச்சு, வன்முறையை துாண்டும் விதமாக உள்ளது. அத்தகைய நபர்களை, 'சைபர் கிரைம்' போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:துாத்துக்குடியில், இயல்பு நிலை திரும்ப, பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ள, சமூக விரோதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துாத்துக்குடி தவிர, பிற மாவட்டங்களில் உள்ள, சமூக விரோதி கள், சமூக வலைதளங்களில், வெவ்வேறு பெயர்களில் கணக்கு துவங்கி, மாநிலம் முழுவதும், வன்முறையை துாண்டும் வகையில், பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. 'இது போன்ற விஷமத் தனமான செயலில் ஈடுபட வேண்டாம்' என, எச்சரிக்கை விடுத்துள்ளோம். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (90)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
26-மே-201800:01:51 IST Report Abuse

Nivasஇங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் காரணமே அவங்க தான...

Rate this:
Karunan - udumalpet,இந்தியா
25-மே-201819:03:00 IST Report Abuse

Karunanஇத்தனை நாள் போராட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை எதனால் சுட நேர்ந்தது என்பதை எத்தனை பேர் யோசித்திருப்பீர்கள் ?வன்முறை ரௌடிகளை போராட்டக்காரர்கள் என்று சொன்னால் அது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகாதா ...வன்முறை கட்டுக்கடங்காமல் போனபின்தான் துரத்தப்பட்ட காவல்துறை சுட நேர்ந்தது ...வன்முறை கும்பல்தான் போலிஸுக்கு தெரியுமேயொழிய அப்பாவிகளுக்கு வன்முறை கும்பலில் என்ன வேலை ...தொலைக்காட்சியில் பார்த்தபோது கும்பலின் வெறியாட்டத்தை போலீஸ் என்ன செய்தாவது ஒடுக்கவேண்டும் என்று தோன்றியது ...எல்லா கட்சிக்காரனும் தொழிட்சாலை அதிபரிடம் காசு வாங்கியவர்கள்தான் ...அதிலும் திமுகவினர் ஏகபோகமாக முரட்டு பக்தன் குடும்பம் மூலமாக வாங்கியவர்கள்தான் ...இவர்கள் எல்லோருமே வேஷம் போடுகிறார்கள் ...படிக்காத அரைகுறைகள் இவர்கள் பின்னால் போய் அடிவாங்கியும் கொலை செய்யப்பட்டும் கிடக்க பிண அரசியல் நடக்கிறது

Rate this:
JANANI - chennai,இந்தியா
25-மே-201816:49:01 IST Report Abuse

JANANIசிந்திக்க தெரியாமலே திமுக செய்யும்  அரசியல் வலையில் சிக்கித்தவிக்கும், மக்கள் அநியாயமாக தூண்டப்பட்டுள்ளார்கள் அனுதாபத்திற்குப் பதிலாக,சலிப்புதான் மேலிடுகிறது. இதுவா அமைதியைக்காக்கும் கலாசாரம்

Rate this:
மேலும் 87 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X