பதிவு செய்த நாள் :
அமைதி திரும்ப ஒத்துழைப்பு
ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

'பதற்றம் நீங்கி, அமைதி திரும்புவதற்கு, துாத்துக்குடி நகர மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Rajnath Singh,ராஜ்நாத் சிங்,தூத்துக்குடி,கலவரம்,வேண்டுகோள்

அறிக்கை :


மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், துாத்துக்குடி சம்பவம் தொடர்பாக, டுவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழகத்தின், துாத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில், விலை மதிப்பில்லா உயிரிழப்புகள் நிகழ்ந்தது, மிகுந்த வேதனை அளிக்கிறது. அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து, விரிவான அறிக்கையை, தமிழக அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன். துாத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பதற்றம் நீங்கி, அமைதியையும், சகஜமான சூழ்நிலையையும் ஏற்படுத்த வேண்டும்; அதற்கு, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பாய்ச்சல் :


காங்கிரஸ் மூத்த தலைவரான, அபிஷேக் சிங்வி, நேற்று டில்லியில் கூறியதாவது: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலை, ஏற்கனவே மஹாராஷ்டிராவில் அமைய இருந்தது. அங்குள்ள விவசாயிகள் விரட்டியடித்ததால், ஆலையை அமைக்க முடியவில்லை.

மற்றொரு மாநிலத்தில, தங்கள் ஆலையை அமைக்க முடியாமல் திணறிய ஸ்டெர்லைட்

Advertisement

நிறுவனத்திற்கு, தமிழகத்தில் அமைய அனுமதியளித்தது யார்... அவர்கள் தான், இதில் உண்மை குற்றவாளிகள். ஒருவராவது சாக வேண்டுமென, போலீசார் கூறுவது, வீடியோவில் பதிவாகியுள்ளது; இது, முழுக்க முழுக்க அப்பட்டமான விதிமீறல்.

தற்போதைய அ.தி.மு.க., அரசை, டிஸ்மிஸ் செய்யலாம். அதற்கான தகுதி, அதற்கு உண்டு. ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து, பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை; பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசாமல், பிரதமர் மவுனம் காப்பது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-மே-201800:09:18 IST Report Abuse

Mani . V"பதற்றம் நீங்கி, அமைதி திரும்புவதற்கு, துாத்துக்குடி நகர மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையேல் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தி படு கொலை செய்ய வேண்டி வரும்".

Rate this:
umarfarook - dindigul,இந்தியா
25-மே-201812:14:31 IST Report Abuse

umarfarookஇன்டர்நெட்டை தடை செய்துவிட்டு ட்விட்டர்ல பதிவு போடுகிறார் தூத்துக்குடி மக்களுக்காக

Rate this:
govind - KL,மலேஷியா
25-மே-201811:15:53 IST Report Abuse

govindபாஸ்கரா ஏன் வணிகர் சிதம்பர்ன்னு சொல்லி வணிகரை இழுக்கிற

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X