பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியது

Updated : மே 25, 2018 | Added : மே 25, 2018 | கருத்துகள் (27)
Advertisement
Sterile protest,Tuticorin firing,Government buses,தூத்துக்குடி, ஸ்டெர்லைட், இயல்பு நிலை, அரசு பஸ்கள் , தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி 144 தடை உத்தரவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஸ்டெர்லைட் போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,
Thoothukudi, Sterlite, Normal status, Thoothukudi riots, Sterlite plant,Tuticorin 144 ban imposed, law and order problem,  Tuticorin protest, Tuticorin sterile plant,

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியாயினர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு இயல்புநிலையை கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வணிகர்களுடன் அரசு பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். கடைகளை திறக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.


கடைகள் திறப்பு

இதை ஏற்று, நேற்று மாலையில் வ.உ.சி., சந்தை திறக்கப்பட்டது. காய்கறி வரத்து குறைவாக இருந்ததால், ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. இதனால், விலை அதிகளவில் இருந்தது. இன்று சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து காய்கறி வந்துள்ளதால், இயல்பான விலையில் விற்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதியளவு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


போலீஸ் பாதுகாப்பு

நகரில், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. அண்ணாநகரின் 12 தெருக்களிலும், கிரேஸ்புரம், மட்டக்கடை, போல்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


நீட்டிப்பு

பதற்றம் நிலவுவதால், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


பஸ்கள் இயக்கம்

இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து 60 பஸ்கள் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிமனையில் இருந்து 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. போலீஸ் பாதுகாப்புடன் நெல்லைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களுக்கு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அதிகாரிகளும் போலீசாரும் அரசு பஸ்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தின் வணிகப்பகுதியான ஏரலுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓரளவு பயணிகளும் பயணம் மேற்கொள்கின்றனர்.


கைது


இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 12 பேரை வடபாகம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதான 65 பேர் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 68 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
skv - Bangalore,இந்தியா
26-மே-201803:17:43 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பொதுஜங்களே ப்ளீஸ் மதவெறியணுக்களை உங்க பேட்டைலே நுழையவே விடாதீங்க செத்தா அவனுள் லே எவனும் இல்லீங்க அமைதியா நடந்த போராட்டங்களே நுழைந்து வெறியாட்டம் ஆடினவள் நீங்களே கண்டுபிடிக்கவும் தக்க தணடனையும் தாருங்கள் அடிக்கும் அடிலே அவன் திருந்தவேண்டும் மதமாற்ற துடிக்கும் பேய்களை வெரட்டுங்க உங்களெனுக்கே தெரியும் புதியவன் யாரு உள்ளுர்வாசி எவனென்னரு பேதம் காண ,எவனாயிருந்தாலும் எந்தக்கட்ச்சியின் தூதுவனா இருந்தாலும் அடிச்சு உதைங்க
Rate this:
Share this comment
Cancel
Nivas - Detroit,யூ.எஸ்.ஏ
26-மே-201801:45:12 IST Report Abuse
Nivas மிக்க மகிழ்ச்சி... தயவு செய்து இதை சைமன், பாரதி ராஜா, கோட்டமன் , அமீர், திருமுருகன் காந்தி, வைகோ, வேல் முருகன், சத்யராஜ், SP உதயகுமார், திருமாவலவன், ஸ்டாலின், தமிமுன் அன்சாரி, தணிகை அரசு, கருணாஸ் போன்றோர் இடம் கூறவேண்டாம்.. மீண்டும் இதனை எப்படி கலவர பூமியாக மாற்றுவது என்று சிந்தித்து... மீண்டும் கலவர பூமியாக மாற்றிவிடுவார்...
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-மே-201819:20:11 IST Report Abuse
மலரின் மகள் எது எப்படியோ நடந்தவைகள் துக்கமாகவே இருக்கட்டும். இனி எந்த துயர் சம்பவமும் நடக்க வேண்டாம். ஆலை மண்ணோடு போகட்டும் உயிர்கள் பிழைத்திருக்கட்டும். அய்யனார் சாமியும் கருப்ப சாமியும் அருள் புரியட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X