சீக்கிய போலீசுக்கு அதிகாரிகள் பாராட்டு

Updated : மே 26, 2018 | Added : மே 25, 2018 | கருத்துகள் (7)
Advertisement
Sikh police,  SI Gagandeep Singh,Uttarakhand attack,சீக்கிய போலீஸ்,  உத்தரகண்ட் தாக்குதல், முஸ்லிம் இளைஞர், சீக்கிய மதம், எஸ்ஐ ககன்தீப் சிங், கோவில் தாக்குதல், சீக்கிய போலீஸ் அதிகாரி ,  Muslim youth, Sikhism, temple attack,Sikh police officer,

டேராடூன்,: உத்தரகண்ட் மாநிலத்தில், தாக்குதல் நடத்த திரண்ட கும்பலிடம் இருந்து, முஸ்லிம் இளைஞரை, சீக்கிய மதத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி காப்பாற்றிய சம்பவம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, திரிவேந்திர சிங் யாதவ் முதல்வராக உள்ளார்.இம்மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில், ஹிந்து பெண்ணை, முஸ்லிம் இளைஞர் ஒருவர் சந்திக்க திட்டமிட்டார்; இது, உள்ளூர்வாசிகளுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்க நினைத்த உள்ளூர்வாசிகள், கோவிலில் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த, சீக்கிய மதத்தை சேர்ந்த, எஸ்.ஐ., ககன்தீப் சிங், கோவிலுக்கு விரைந்தார்.அப்போது, முஸ்லிம் இளைஞரை, அங்கு திரண்டிருந்த கும்பல் அடிக்க பாய்ந்தது. அந்த கும்பலிடம் இருந்து இளைஞரை மீட்ட ககன் தீப் சிங், அவர் மீது அடிபடாமல் தடுத்தார். இதனால், ககன் தீப் சிங் மீது, சரமாரி அடி விழுந்தது; பின், கும்பல் கலைந்து சென்றது.இந்த வீடியோ, சமூக தளத்தில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.முஸ்லிம் இளைஞரை, கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ககன் தீப் சிங்கிற்கு, போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். ககன் தீப் சிங்கிற்கு, 2,500 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. கோவிலில் தாக்குதல் நடத்திய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
26-மே-201814:11:31 IST Report Abuse
C.Elumalai கடவுள் இருக்கின்றான் அவன் சிங் போன்றோர் மனதில்.
Rate this:
Share this comment
Cancel
26-மே-201812:25:01 IST Report Abuse
VIJAIANCHANDRAKUMAR Just reverse the scenario a HINDU boy goes to meet a Muslim gal at their religious place, both police and boy would have been slaughtered!!!!
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்என்பதுஎன்பெயர் தலை வணங்குகிறேன் சகோதரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X