அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'சமூக நீதி; சமமான நீதி'
ரஜினி கட்சிக்கு கொள்கை தயார்

ஓட்டு வங்கிக்காக, ஜாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம், அங்கீகாரம் கிடைக்கும் வகையில், 'சமூக நீதி, சமமான நீதி' என்ற கோஷத்தை முன்னிலைப் படுத்தி, கட்சிக் கொள்கைகளை ஏற்படுத்த, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். தன் அரசியல் ஆலோசனை குழுவுடன், அதுபற்றியும், விவாதித்து வருகிறார்.

 'சமூக நீதி; ,சமமான நீதி',ரஜினி,கட்சிக்கு ,கொள்கை,தயார்


ரஜினி, தன் போயஸ் கார்டன் இல்லத்தில், அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர்களையும், அரசியல் விமர்சகர்களையும், அரசியல் அறிஞர்களையும் சந்தித்து, நடப்பு அரசியல், எதிர்கால கட்சி பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.அதேநேரத்தில், மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் வகையில், மாநில - மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகி களையும் சந்தித்து, அவர்களிடம் கலந்துரை யாடி, அவர்கள் செயல்படுத்தக் கூடிய, நல்ல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.


முத்திரைஇது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி யில், முக்குலத்தோர், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் ஆகிய, இரு சமுதாயத்திற்கு முக்கிய இடம் உண்டு. தி.மு.க., விற்கு, குறிப்பிட்ட ஜாதி ஆதரவு என்ற, முத்திரை கிடையாது. அதேசமயம், சிறுபான்மையினர் ஓட்டுகள்,

தி.மு.க.,வின் அசைக்க முடியாத ஓட்டு வங்கியாக உள்ளன. ஒரு காலத்தில், வன்னியர் ஓட்டுகள், தி.மு.க., வெற்றிக்கு கை கொடுத்தது என்றாலும், பா.ம.க., தோன்றிய பின், வன்னியர் சமுதாய ஓட்டுகள், தி.மு.க.,விற்கு குறைந்து விட்டன.


பாபா படம் விவகாரம் தொடர்பாக, பா.ம.க.,விற்கும், ரஜினிக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, 2004 லோக்சபா தேர்தலில், பா.ம.க.,வேட்பாளர்களை எதிர்த்து, ரஜினி பிரசாரம் செய்தார்.அதில், பா.ம.க., வெற்றி பெற்றது. அதன்பின், 2009 லோக்சபா, 2011 சட்டசபை, 2014 லோக்சபா, 2016 சட்டசபை தேர்தல் களில், தொடர் தோல்வியை, பா.ம.க., சந்தித்து வருகிறது. இந்த தோல்வி குறித்தும், ரஜினி விவாதித்துள்ளார்.


பா.ம.க.,வுக்கு ஏற்பட்ட தோல்வியால், குறிப்பிட்ட ஜாதி ஆதரவு இருந்தாலும், வெற்றி பெற முடியாது என்பதை, ரஜினி உணர்ந்துள்ளார்.எனவே, தன் ரசிகர் மன்றத்திற்கு, எந்தெந்த ஜாதியினரின் ஆதரவு அதிகம் என்பது குறித்தும் அலசியுள்ளார். அப்போது, நாயுடு, ரெட்டியார், சவுராஷ்டிரா போன்ற, பிற மொழி பேசும் மக்களின் ஆதரவும், ரஜினிக்கு இருப்பது தெரிய வந்தது.


அதேபோல், ஜெயலலிதா மறைவுக்கு பின், கவுண்டர் சமுதாய ஆதரவு, ரஜினி பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. மேலும், யாதவர், உடையார், விஸ்வகர்மா போன்ற சமுதாயத்தைச் சேர்ந்த ரசிகர்களும் கணிசமாக உள்ளனர் என்பதால், அந்த ஜாதி ஓட்டுகளும், ரஜினிக்கு பலத்தை கொடுக்கும். சமீபத்தில், சென்னை, போயஸ் கார்டன் வீட்டில் நடந்த மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில், ரஜினி, சில கேள்விகளை மாநில நிர்வாகிகளிடம் கேட்டார்.அதாவது, 'ஜெயலலிதா மறைந்த பின், பெண்களை கவரக்கூடிய பெண் தலைவர்கள் யார் இருக்கின்றனர்' என, கேட்டுள்ளார்.


அப்போது, கனிமொழி பெயரை, சிலர் கூறியுள்ளனர். அவர்களிடம், தமிழிசையை பற்றி விசாரித்துள்ளார்,

Advertisement

ரஜினி. 'பிரதமர் மோடிக்கு காணப்படும் செல்வாக்கு தான், அவருக்கு சாதகமாக இருக்கிறது' என, பதில் கூறியுள்ளனர்.


ஆலோசனைபின், மகளிர் அணி நிர்வாகிகளிடம், 'பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்; ரஜினி மக்கள் மன்றத்தில், அதிக மான பெண் உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர். அவர்களையும், மகளிர் அணியில் இணைத்து, நீங்கள் வழிநடத்த வேண்டும்' என, ரஜினி ஆலோசனை வழங்கியுள்ளார்.


இதையடுத்து, தன் அரசியல் அறிஞர் குழு விடம், சில விஷயங்களை ரஜினி கூறி உள்ளார்.'எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி ஓட்டுகளை வளைக்கும் நோக்கத்தில், நம் செயல்பாடுகள் இருக்க வேண்டாம். சமூக நீதி; சமமான நீதி என்ற கொள்கையின் அடிப்படை யில், அனைத்து ஜாதிகளுக்கும், உரிய அங்கீகாரம், பிரதிநிதித்துவம் சமமாக கிடைக்க வேண்டும்.'நம் ஆட்சி அமைந்த பின், அந்த கொள்கைகளை வென்றெடுப்போம். கட்சி துவக்கிய பின்,அந்த கொள்கைகளை நோக்கியே பயணிப்போம்' என, கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
27-மே-201816:15:41 IST Report Abuse

mindum vasanthamநாடாளுமன்ற தேர்தல் என்பது இன்னும் ஒரு வருடம் தான் .........

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
27-மே-201816:12:47 IST Report Abuse

Endrum Indianகட்சி கொள்கையே பினாத்தலாக இருக்கே. இதே தான் நமது Indian Constitution ல் இருக்கின்றது. அனால் உண்மையில் நடப்பது என்ன. அரசியல்வாதிகள், நடிக/நடிகையர்கள், பணக்காரர்கள் என்றால் அது தனி வழி அதுவே சாதாரணன் என்றால் அவனை பிடித்து உலுக்கும். ரஜினி நீ ஹீரோ சினிமாவில்? ஆனால் எப்படி? டைரெக்டர் டேக் 1 கொஞ்சம் கையை இப்படி உயர்த்திடுங்கள் அப்படியே செய்வாய் நீயும். அப்போ காமெராமான் அதை நன்றாக பிலிம் எடுத்தவுடன் அந்த காட்சி முடிந்தது. அது ஒரு மாய உலகம். அதில் நடப்பது முன்கூட்டியே பிளான் செய்தபடி நடக்கின்றது. இந்த நிஜ உலகில் நீயும் ஒரு சாதாரணன் தான் அதை புரிந்து கொள்ளாத நீ எப்படி ஆன்மீக அரசியல் செய்ய முடியுமோ.

Rate this:
JIGMONEY - Chennai,இந்தியா
27-மே-201814:14:14 IST Report Abuse

JIGMONEYLet them dance. Dr.K.K. JIGMONEY.COM

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X