பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
யார்...?
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணி...  
வெளிநாட்டு பணம் வருவது நின்றதா?  
விசாரணையை கையிலெடுத்தது உளவு துறை

துாத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து, தடையை மீறி குவியும் நிதியுதவி குறித்த விபரங்களை, மத்திய - மாநில உளவுத் துறை போலீசார், ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

 தூத்துக்குடி, கலவரத்தின், பின்னணி,யார்...? ,வெளிநாட்டு பணம் ,வருவது,நின்றதா?  விசாரணையை கையிலெடுத்தது உளவுத் துறை


துாத்துக்குடி, 'சிப்காட்' வளாகத்தில் உள்ள, 'ஸ்டெர்லைட்' ஆலையில், ஆண்டுக்கு, 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வும், பொதுமக்களுக்கு நோய் ஏற்படுவதாகவும், புகார் எழுந்தது.

தீவிரமடைந்ததுஆலையை மூட வலியுறுத்தி, குமரெட்டியா புரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், 100 நாட்களுக்கு முன், போராட்டத்தை துவக்கினர். சில தன்னார்வ தொண்டு நிறு வனங்களைச் சேர்ந்தவர்கள், போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வெளியில் இருந்து வந்தன. எனவே, போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது.


இந்நிலையில்,சில சமூக விரோத அமைப்புகள்,

'போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம்' எனக்கூறி, போராட்டக் குழுவினருடன் இணைந்தனர். அதன்பின், போராட்டத்தின் தன்மை மாறியது.


அமைதியாக போராட்டத்தை நடத்தலாம் என்றவர் கள், போராட்டக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர். சமூக விரோதிகள், போராட்டத்திற்கு தலைமை தாங்கத் துவங்கினர். போராட்டம் துவங்கி,மே, 22ல், 100வது நாளை எட்டியது. அன்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.


அவர்கள் பேச்சை நம்பி, அப்பாவி மக்களும் சென்றனர். ஆரம்பத்தில், ஊர்வலம் அமைதியாக சென்றது. கலெக்டர் அலுவலகம் அருகே, போலீசார் தடுத்தபோது, சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்; போலீசார் தாக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தை கலைக்க, துப்பாக்கிச் சூடு நடத்த, 13 பேர் இறந்தனர்.


சமீப காலமாக, தமிழகத்தில் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சிறிய அரசியல் கட்சிகளும், தங்களின் சுய லாபத்திற்காக, மக்களை பகடைக் காயாக பயன்படுத்த துவங்கி உள்ளன. போராட்டத்தை துாண்டுவோர், வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுகின்றனர். மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், சமூக விரோத செயல் களில் ஈடுபடும், தன்னார்வ தொண்டுநிறுவனங் களுக்கு வரும் நிதி, தடுத்து நிறுத்தப்பட்டது.

வெட்ட வெளிச்சம்

ஆனால், அந்நிறுவனங்கள், வேறு பெயர்களில், நிதி பெற்று வருகின்றன. அவ்வாறு நிதி பெறு வோரே, பெரும்பாலான இடங்களில், போராட்டங்களை

Advertisement

துாண்டி வருகின்றனர்.மக்கள் தன்னெழுச்சி யாக ஈடுபடும் போராட்டங்களில், அவர்கள் புகுந்து, மக்களை தங்கள் வசப்படுத்தி, போராட்டத்தை திசை திருப்பி, வன்முறையை துாண்டுகின்றனர். இதை, துாத்துக்குடி சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.


இச்சம்பவத்தை தொடர்ந்து, மத்திய - மாநில உளவுத்துறை போலீசார், துாத்துக்குடியில் வன்முறையை துாண்டியவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். அவர்களுக்கு, எங்கிருந்து பணம் வந்தது என்பதை கண்டறியும் பணியும் துவக்கப்பட்டு உள்ளது.


முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தை முன்னின்று நடத்திய சிலர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள, பல நிறுவனங் களிடமிருந்தும், தனி நபர்களிடம் இருந்தும், பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விசாரணை தீவிரமாகும் போது, போராட்டத் தில் கலவரத்தை உண்டு பண்ணியவர்கள் யார் என்பது தெரிய வரும்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joshua - doha,கத்தார்
30-மே-201823:52:06 IST Report Abuse

joshuaவெளிநாட்டு பணம்,?. மக்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்ல, DINAMALAR கூவுவதை எல்லாம் நம்ப . தூத்துக்குடி கலவரத்தின் பின்னணி BJP RSS, இது எல்லோருக்கும் தெரியும், திணைமாலை ஒரு பிஜேபி ஜால்ரா , இதுவும் எல்லோருக்கும் தெரியும்.

Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
29-மே-201804:23:43 IST Report Abuse

Subramaniamமக்களை நாய் போல் சுட்டுக்கொன்ற- போலீஸ் விரோதியை முதலில் விசாரி

Rate this:
M.P.Pillai - CHENNAI,இந்தியா
28-மே-201810:40:18 IST Report Abuse

M.P.Pillaiஒன்று யோசிக்கவேண்டும், 100 வது நாள்போராட்டத்தில் ஏன் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை . அவர்களுக்கு ஏற்கனேவே கலவரம் நடக்கும் என்று தெரிந்து இருக்கிறது . அதனாலேயே தாங்கள் பிஸி ஆக இருக்கிறமாதிரி வெளியில் தெரியணும் என்று சென்னையில் மீட்டிங் வைத்திருந்தாங்க.

Rate this:
Manian - Chennai,இந்தியா
29-மே-201810:39:07 IST Report Abuse

Manianஎப்போவுமே தொண்டன்தான் சாவனுக. அவனுகதானே மூளை சலவை செய்யப்படட முட்டாள்கள். ...

Rate this:
மேலும் 77 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X