அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 மருத்துவமனை,கடைசியாக,ஜெ., பேசியது,என்ன?

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அனுமதிக் கப்பட்டிருந்த போது, அவர் கடைசி யாக பேசிய, 'ஆடியோ' பதிவு, விசாரணை கமிஷனில், நேற்று வெளியிடப்பட்டது. மருத்துவமனை யில், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டபோது, அதை அறியக்கூடிய கருவியில், பதிவு செய்யும்படி, டாக்டரிடம் பேசிய பேச்சு, அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, அவருக்கு தேவையான அன்றாட உணவுகள் குறித்து, அவர் கைப்பட எழுதிய உணவுக் குறிப்பும் வெளியாகி உள்ளது.

 மருத்துவமனை,கடைசியாக,ஜெ., பேசியது,என்ன?

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று சசிகலாவின் உறவினரான, டாக்டர் சிவகுமாரிடம், சசிகலாவின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.அப்போது அவர், மருத்துவமனையில் இருந்தபோது, ஜெ., கடைசியாக பேசியது எனக்கூறி, 33 மற்றும், 39 வினாடிகள் ஓடக்கூடிய, ஆடியோ பதிவு அடங்கிய, 'பென் டிரைவை' கமிஷனில் தாக்கல் செய்தார்.


இது தொடர்பான விசாரணையில், சிவகுமார் கூறியுள்ளதாவது:


ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்படும் போது, அதிக சத்தம் வந்துள்ளது. இது குறித்து, சிகிச்சை அளித்த டாக்டர்கள், 'சத்தம் வரும்போது கூறுங்கள்' என, அவரிடம் தெரிவித்துள்ளனர்.


எனவே, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது, அந்த சத்தத்தை பதிவு செய்யும்படி, என்னிடம்கூறினார். அதை ஏற்று, அந்த

ஆடியோவை பதிவு செய்தேன்.இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.முதல் ஆடியோவில், ஜெ.,க்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. அப்போது, 'சத்தம் கேக்குதா' என, கேட்க, அதற்கு, டாக்டர் சிவகுமார், 'இப்போது இல்லை' என, பதில் அளிக்கிறார். உடனே ஜெயலலிதா, 'இருந்த போது கூப்பிட் டேன். அப்போது எடுக்க முடிய வில்லை என கூறினீர்கள். நீங்களும் சரியில்லை. எடுக்க முடியவில்லை என்றால் விடுங்கள்; ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப் போகுது' என்கிறார்.


இரண்டாவது ஆடியோவில், 'நல்லா வருது சத்தம்... விய் விய் என்று. தியேட்டரில் முன் வரிசையில் அமர்ந்து, விசில் அடிப்பது போல் சத்தம் வருது' என, ஜெயலலிதா, 'கமென்ட்' அடிக்கிறார். அதன்பின், 'ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்குமா' என, ஜெயலலிதா கேட்கிறார். அதற்கு பெண் டாக்டர் ஒருவர், '140/80 இருக்கு' எனக்கூற, உடனே ஜெ., 'இட்ஸ் ஓகே பார் மீ... நார்மல்' என, கூறுகிறார். அதாவது, 'இது எனக்கு நார்மல் அளவு தான்' என்கிறார்.


'இந்த ஆடியோவை பதிவுசெய்த மறுநாள், ஜெ., க்கு நினைவு தப்பியுள்ளது. நினைவு திரும்பிய பின், அவருக்கு தொண்டையில் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 'இதனால், அவரால் பேச முடியவில்லை. தொண்டையிலிருந்த குழாய் அகற்றப்பட்ட பின், அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இறக்கும் வரை பேசவில்லை' என, கமிஷனில், டாக்டர் சிவகுமார் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.


உணவு அட்டவணைஜெயலலிதா, 2015ம் ஆண்டிலிருந்து, தினசரி தான் சாப்பிடும் உணவு மற்றும் மாத்திரை விபரங்களை, தன் கைப்பட எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. நேற்று டாக்டர் சிவகுமார், ஜெ., எழுதியது எனக்கூறி, 98 பக்கங்கள் உடைய நோட்டை, விசாரணை கமிஷனில், தாக்கல் செய்தார்.


அதில், 2016 ஆக., 2ல், 97 மற்றும், 98ம் பக்கம்

Advertisement

எழுதியிருந்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், அவரது எடை, 106.5 கிலோ என, குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று காலை, 4:55 மணிக்கு, தண்ணீர் அருந்தி உள்ளார். காலை, 5:00 மணிக்கு, ரத்த அழுத்த அளவு, 175, 190 என, இருந்துள்ளது. காலை உணவாக, 5:05 மணியிலிருந்து, 5:35 மணி வரை, ஒன்றரை இட்லி, நான்கு துண்டு ரொட்டி, 400 மி.லி., காபி, 230 மி.லி., இளநீர் எடுத்துள்ளார்.


காலை, 5:45 மணியில் இருந்து, 8:00 மணி வரை, 200 மி.லி., 'கிரீன் டீ' மற்றும், காலை, 8:55 மணிக்கு, ஒரு ஆப்பிள்; 9:40 மணிக்கு, 120 மி.லி., காபி, ஐந்து பிஸ்கட்; 11:35 மணிக்கு, ஒரு கப் பாசுமதி அரிசி சாதம்; பகல், 2:00 மணியிலிருந்து, 2:35 மணி வரை, மதிய உணவாக, ஒன்றரை கப் பாசுமதி அரிசி சாதம், ஒரு கப் தயிர், அரை கப் முலாம் பழம் சாப்பிட்டுள்ளார்.


பகல், 2:45 மணிக்கு, 50 மில்லி கிராம் மாத்திரை. 5:45க்கு, 200 மி.லி., காபி அருந்தி உள்ளார்.
மாலை, 6:30லிருந்து, 7:15 மணி வரை, இரவு உணவாக, உலர் பழங்கள், இட்லி உப்புமா, ஒரு தோசை, இரண்டு ரொட்டி துண்டு, 200 மி.லி., பால் மற்றும் மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டு உள்ளார்.இவ்விபரங்கள், அதில் இடம் பெற்றுள்ளன.


டாக்டர் சிவகுமார், 'பல்டி'


விசாரணை கமிஷனில், டாக்டர் சிவகுமார், ஜெ., பாதுகாப்பு அதிகாரியாக இருந்த, கூடுதல் எஸ்.பி., வீரபெருமாள், ஜெ., உதவியாளர் பூங்குன்றன், ராஜ்பவனில் உதவிப் பிரிவு அலுவலராக இருந்த சீனிவாசன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் ஆகியோர், நேற்று குறுக்கு விசாரணைக்காக ஆஜராகினர்.


சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன், கமிஷன் சார்பில், வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகினர். விசாரணைக்கு வந்தவர்களில், பூங்குன்றன், ராமலிங்கம் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை. மற்ற நான்கு பேரிடமும், விசாரணை நடந்தது.


ஏற்கனவே, டாக்டர் சிவகுமார் வாக்குமூலம் அளித்தபோது, 'ஜெயலலிதாவை பார்க்க வந்த, அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ், அவரை பார்த்து கை அசைத்தார். 'ஆனால், ஜெ., கவனிக்கவில்லை' என கூறியதாக, தகவல் வெளியானது. நேற்றைய குறுக்கு விசாரணை யின் போது, 'அதை நான் பார்க்கவில்லை' என, தெரிவித்துள்ளார்.


குறுக்கு விசாரணை குறித்து, வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் கூறியதாவது: பூங்குன்றன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம், குறுக்கு விசாரணை செய்ய வில்லை.ஏற்கனவே சாட்சியமாக பதிவு செய்யப்பட்ட, ஆவணங்கள் வழங்கப்படாத தால், குறுக்கு விசாரணை செய்ய இயல வில்லை. அவர்களிடம், ஜூன், 2ல் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாளிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது, மருத்துவமனை யில், ஜெ.,வுக்கு, 'ஸ்கேன்' எடுக்க, அவரை அழைத்துச் சென்றபோது, அமைச்சர்கள் பார்த்ததாக கூறினார். விசாரணை முடிந்து, இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் வந்து, அதை மறுத்தார். இதற்கு, நாங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
27-மே-201816:51:26 IST Report Abuse

jaganதன் வினை தன்னை சுடும் ...இட ஒதுகேடு வோட்டு வாங்கி குடுத்தது ஆனாக்க இவர்கள் வளர்த்த திறமையின்மை உயிரை வாங்கிவிட்டது.. பாவம் ...MBC OBC BC ...இந்த கோட்டாவுல வந்ததுங்களுக்கு என்ன தெரியும் (லஞ்சம் வாங்குவதை தவிர )

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
27-மே-201816:50:15 IST Report Abuse

Endrum Indianகாட்சி 1 : இந்த வீடியோ எனக்கு வாட்ஸ் அப்பில் 8 மாதம் முன்பே வந்து விட்டது. இதில் உள்ள குறைபாடுகள் 1 ) அது அப்பல்லோ தானா (ஜன்னல் வழியாக பார்த்தால் அந்த மரம் நிச்சயமாக அப்பல்லோவில் இல்லை) 2 ) இது இப்போது தான் எடுத்ததா இல்லை ஐந்து ஆறு வருடம் முன்பாக எடுக்கப்பட்டதா??? 3 ) இது ஜெயலலிதா தானா (ஏன் இவ்வளவு அசிங்கமாக இருக்கின்றாள் ஜெயா) 4 ) பாதுகாப்பு கருதி அப்பல்லோவில் சி சி டி வி ஏ இல்லாத போது இது எவருடைய அனுமதியுடன் எடுக்கப்பட்டது. அவர் யாருடன் பேசுகின்றார். இந்த வீடியோ எடுத்தது யார். 5 ) அவருடைய வாயசைவும் ஆடியோவும் ஒத்துபோகவில்லை? இது எப்போது மார்ப்ஹிங் செய்யப்பட்டது. 6 ) இவ்வளவு பழைய வீடியோவை இப்போது ஒளி பரப்புவதன் மூலம் என்ன? தூத்துக்குடி 13 பேர் இறப்பை நீர்த்துபோகச்செய்வதற்கா? 7 ) ஆறுமுகசாமிக்கு என்ன அதிகாரம் உள்ளது இந்த மாதிரி full report கொடுப்பதற்கு முன்னால் இப்படி அரைகுறையாக சங்கதிகளை லீக் செய்ய.எனக்கே இவ்வளவு சந்தேகம் என்றால் இந்த விடியோவை ஆய்ந்து அறிந்து அரிந்து பார்த்தால் எல்லாம் ஓட்டை ஓட்டையாகத்தெரிகின்றது. காட்சி 2 : என்ன ஒரு கேவலமான வாழ்க்கை ஜெயாவின் வாழ்க்கை. அவர் கைப்பட அவர் எழுதுவாராம் 8 .25 க்கு இட்லி 8 .40 . க்கு காபி என்று அப்படியே நடக்குமாம். ஒருக்காலும் ஜெயா ஒரு முதல்வர் இதை எழுதியிருக்க முடியாது. சாதாரண மக்கள் கூட தன்னிடம் சமையல்காரர்/காரி யை கூப்பிட்டு 8 .25 க்கு எனக்கு இட்லி வேணும், 8 .40 க்கு எனக்கு காபி வேண்டும் தெரிஞ்சுக்கோ என்று சொல்வார்கள் அப்படி எழுத வேண்டும் என்றால் தனது P.A வை கூப்பிட்டு இதெல்லாம் டைப் அடிச்சு சமையல் ரூமிலே வை என்று சொல்வார்கள். ஜெயா டிவியில் எவ்வளவோ தடவை ஜெயா டீச்சர் மாதிரி ரிப்போர்ட்டின் ஒவ்வொரு வரியாக படித்து திருத்துவதை காண்பித்தார்களே. வீடியோ Fake, இந்த ஜெயா எழுதிய பேப்பர் Fake.

Rate this:
jagan - Chennai,இந்தியா
27-மே-201816:35:59 IST Report Abuse

jaganடாக்ட்டருங்க எல்லாம் இட ஒதுக்கீடு கேஸுங்க அதான் ட்ரீட்மெண்ட் இவ்ளோ மட்டமா இருந்திருக்கு ...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X