எனது மே எதிர்பார்ப்பு : திகில் நடிகை நின்ஷி| Dinamalar

எனது 'மே' எதிர்பார்ப்பு : திகில் நடிகை நின்ஷி

Added : மே 27, 2018 | |
காற்றில் அலைந்து புரளும் கார்மேக கூந்தல், வெண்ணிலவை வெறுக்க வைக்கும் வெளிச்ச முகம், வவ்வால் கவ்வும் கொவ்வைப்பழமாய் இதழ்கள் எனஇளைஞர்களை படுத்தி எடுக்கும் பிரம்மனின் ஸ்பெஷல் படைப்பு இளம் நடிகை நின்ஷி. திண்டுக்கல்லில் 'மே 27' என்ற திகில் படப்பிடிப்பில் பிசியாக இருந்த கேரள பைங்கிளி, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தது:* சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்சொந்த ஊர்
எனது 'மே' எதிர்பார்ப்பு : திகில் நடிகை நின்ஷி

காற்றில் அலைந்து புரளும் கார்மேக கூந்தல், வெண்ணிலவை வெறுக்க வைக்கும் வெளிச்ச முகம், வவ்வால் கவ்வும் கொவ்வைப்பழமாய் இதழ்கள் எனஇளைஞர்களை படுத்தி எடுக்கும் பிரம்மனின் ஸ்பெஷல் படைப்பு இளம் நடிகை நின்ஷி. திண்டுக்கல்லில் 'மே 27' என்ற திகில் படப்பிடிப்பில் பிசியாக இருந்த கேரள பைங்கிளி, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தது:

* சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்சொந்த ஊர் திருவனந்தபுரம். தந்தை சேவியர் டாக்ஸி டிரைவர். அம்மா, ஒரு தங்கை உண்டு. சிறுவயதிலேயே 'டிவி'யை பார்த்து டான்ஸ் ஆடுவேன். அதை பார்த்தவர்கள் சிறப்பாக ஆடுவதாகவும் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் துாபமிட்டனர். அது சினிமா தாகத்தை ஏற்படுத்தியது. 10 வயதில் 'இலங்கியா மூவீஸ்' மலையாள படத்தில் நடித்தேன். அதன்பின் 'டிவி' தொடர்களில் வாய்ப்பு வந்தது.

* நடித்தவைமலையாளத்தில் வளப்பூட்டுகள், இளநீர்காவு, விளக்குமரம்... தமிழில் லுாசி 666, வெறியாட்டம்' படங்களின் கதாநயாகி நான். சமீபத்தில் 'பரிகாரம்' படப்பிடிப்பு முடிந்துள்ளது. மலையாளத்தில் 'டிவி' சீரியல்களில் நடிக்கிறேன்.

* பாராட்டுகள்கதைக்கேற்ப அந்த கேரக்டராகவே மாறிவிடுவதாக கூறுகின்றனர். திருவனந்தபுரத்தில் ஜவுளி கடைக்குள் சென்ற போது பெண் ஒருவர், நாற்காலியை துாக்கி என்னை தாக்க வந்தார். ஏன் என விசாரித்த போது... நான் 'டிவி' சீரியலில் நடித்த வில்லி கேரக்டரை மனதில் வைத்து என்னை கெட்டவளாக கருதி தாக்க வந்ததாக கூறினார். இதுவே என் நடிப்பு, தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு சான்று.

* பொழுது போக்குதுாங்கும் நேரம் தவிர சமூக வலைத்தளங்களில் இருப்பேன். தமிழ், மலையாளத்தில் 90 சதவீத இயக்குனர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகம் ஆகிவிட்டேன். எங்கு ஷூட்டிங் சென்றாலும் நேரில் அறியாத, சமூக வலைதள நண்பர்கள் இருப்பார்கள்.

* தமிழ் சினிமா தமிழ் சினிமாவில், நடிகர்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். அதிக படங்கள் நடிக்க விரும்புகிறேன்.

* கவர்ந்தவர்கள்தமிழ் ஹீரோ விஜய் ஸ்டைல், ரொமான்ஸ் பிடிக்கும். அவருடன் நடிக்க வாய்ப்பு வரும் என காத்திருக்கிறேன். எனது ரோல் மாடல் நடிகை நயன்தாரா. எந்த கேரக்டரிலும் அசத்துகிறார். அவரது ஸ்டைல், பேஷன் எல்லாம் வித்தியாசமா இருக்கும்.

* கிளாமர் ஓவர் கிளாமராக நடிக்கவே மாட்டேன். அதேசமயம் நல்ல கதாபாத்திரத்திற்கு கிளாமர் ரோல் தேவையென்றால் தயங்க மாட்டேன். ஆபாசம் என்பது நம் பார்வையில்தானே உள்ளது.

* லட்சியம்சினிமா நடிப்புடன், கல்லுாரி படிப்பையும் தொடர வேண்டும், என்பதுதான்.

இவரை showmax2@gmail.comல் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X