இயற்கையை காப்போம்: மோடி அழைப்பு

Updated : மே 27, 2018 | Added : மே 27, 2018 | கருத்துகள் (80)
Share
Advertisement
புதுடில்லி: பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இயற்கையை காக்க அனைவரும் முன் வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.குறைந்தவர்கள் அல்லமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: 254 நாட்கள் பாய்மர படகு மூலம் கடல்வழியாக உலகை சுற்றிவந்த கடற்படை வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். பெண்கள் கடற்படையில் இணைய முன் வரவேண்டும். எவரெஸ்ட்
MannKiBaat,modi, pm,மோடி, இயற்கை, பிரதமர், பிளாஸ்டிக்,

புதுடில்லி: பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இயற்கையை காக்க அனைவரும் முன் வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


குறைந்தவர்கள் அல்ல


யோகா செய்ங்க; வீரம், அன்பு பிறக்கும்: மோடி

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: 254 நாட்கள் பாய்மர படகு மூலம் கடல்வழியாக உலகை சுற்றிவந்த கடற்படை வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். பெண்கள் கடற்படையில் இணைய முன் வரவேண்டும். எவரெஸ்ட் சிகரத்தை அளந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இந்திய பெண்களை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது.


பாரம்பரிய விளையாட்டு

விராத் கோஹ்லி சவால்விட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் பிட்இந்தியா இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். இதில், இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் தகுதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாகசங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விளையாட்டில் இளைஞர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியம். இளைஞர்கள் விளையாட்டு மூலம் தங்களை நிரூபிக்கலாம். பாரம்பரிய விளையாட்டுகள் முக்கியமானவை. இந்த கோடை விடுமுறையில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுங்கள். இதன் மூலம் உள்ளூர் சிந்தனைகள் வெளிவரும்.ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டு துறை உதவும்.


பிளாஸ்டிக் தவிர்ப்பு


பிளாஸ்டிக்கை தவிர்க்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். சுத்தமான சுற்றுப்புறசூழலுக்கு அனைவரும் உறுதிபூண வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம். இயற்கையை காக்க அனைவரும் முன் வர வேண்டும். அனைவரும் மரம் நட வேண்டும். யோகா நமது ஒற்றுமைக்கான அடையாளமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
28-மே-201810:37:52 IST Report Abuse
Sathya Dhara திரு Arumugam Arulkumar - kangayam,இந்தியா அவர்களே.....உங்களால் பதிவு செய்யப்பட திரு மரிதாஸ் அவர்களின் விளக்கத்தினை ஐந்து கோடி நகல்கள் அச்சிட்டு.....தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி வரை விநியோகம் செய்ய வேண்டும். கழக கும்பலின் பொய்யான பிரச்சாரத்தை நம்பி.....சமுதாய நிலையை புரிந்து கொள்ள முடியாத பல கோடி தமிழர்கள் இந்த உண்மைகளை உணர வேண்டும்..அயோ அய்யய்யோ தமிழன் சாகிறான் என்று ஒப்பாரி வைத்து ஒட்டு வேட்டை ஆடுவது இந்த காலம்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-மே-201803:49:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்கவுண்டர் செய்யலாம்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
27-மே-201818:33:30 IST Report Abuse
K.Sugavanam அதான் பெட்ரோல் டீசல் விலை எகிற வைக்கிறாங்களா? பிளாஸ்டிக் உற்பத்திக்கே தடை விதைக்கலாமே.. பயன்பாட்டை கட்டுப்படுத்துவதை விட.. இயற்கையை பாதுகாக்க 14 வழி சாலை? எவ்வளவு மரங்கள் காணாமல் போயினவோ? இங்கு மணிக்கு 180 Km வேகத்தில் ஓடப்போகும் கார்களின் கழிவுப்புகை என்னென்ன செய்யுமோ? பொட்டல்காட்டில் மழை பெய்யுமா?டில்லி மீரட் பயண நேரம் 2 மணி நேரத்திலிருந்துய 45 நிமிடங்களாக குறைக்கப்படும். இது செய்தி..அந்த வேகத்தில் செல்லும் கார்களுக்காக தனிப்பாதை 11000 கோடி ரூபாயை செலவழித்து.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X