பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு: சகாயம் வேதனை

Added : மே 27, 2018 | கருத்துகள் (5)
Advertisement
துப்பாக்கிச்சூடு, சகாயம், வேதனை

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வெளியிட்ட வீடியோ: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். 2 நாட்களாக ஏற்பட்ட மனவேதனை மனவலி சொல்ல முடியாதவை. எண்ணி பார்க்கிறேன், என் தமிழ் சமூகத்தில் இளம் பிள்ளைகள், 17வயது, 22 வயது என்று இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டிய பள்ளைகள், துப்பாக்கிச்சூட்டில் சம்பவத்தில் பலியாகியிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கிறாரகள் என்பதை அறிந்து என் வேதனை எல்லையில்லா அளவு அதிகரித்துள்ளது.அடிப்படையில், நான் சுதந்திர நாட்டு குடிமகன், இந்நாட்டின் சக மக்களின் சோகத்திலும் துயரத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு . அந்த அடிப்படையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் இறந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் வேதனை கொண்டுள்ளேன். என்னை பொறுத்தவரை தமிழ் சமூகத்தினுடைய அறம் சார்ந்த நியாயமான முன்னெடுப்புகளுக்கு என் தார்மீக ஆதரவு உண்டு என தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சகாயம் வருத்தம்

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniyan - chennai,இந்தியா
27-மே-201821:09:27 IST Report Abuse
Iniyan இவன் ஒரு கிறிஸ்தவ கை கூலி
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
27-மே-201817:32:38 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) ஆலையின் குடியிருப்புக்குள் பெண்களும் குழந்தைகளும் இருக்கும்போதே வீட்டிற்கு தீ வைத்தார்கள் அப்போது உங்கள் வருத்தம் எங்கே போனது ? ஆட்சியர் அலுவலகத்தில் 200 பேர் இருக்கும் போது கல்லெறி தீ வாய்ப்பு செய்தார்களே அதுக்கே என்ன பதில் ? துப்பாக்கி சூடு நடக்கவில்லையெனில் அவர்கள் அவ்வளவு பெரும் நரபலி தான் குறைந்தது 200 பேர் இறந்திருப்பார்கள் . கல்லெறிதலால் காயம் பட்ட காவலர்கள் கை கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா ?
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
27-மே-201816:37:28 IST Report Abuse
நெல்லை மணி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அவர்களே, நீங்கள் மிகுந்த மனவேதனை, மனவலி அடைந்தால்மட்டும் போதாது. சக மக்களின் சோகத்திலும் துயரத்திலும் பங்கெடுக்க வேண்டிய கடமை இருந்தால் மட்டும் போதாது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டில் இறந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் வேதனை கொண்டால் மட்டும் போதாது. நீங்கள் ஒரு சாதாரண குடிமகன் அல்ல. உங்களை போன்ற நேர்மையானவர்கள் மக்களின் நலம் விரும்புவர்கள் அரசியலுக்கு வந்து அதிகாரம் பெற்று நல்லாட்சி நடத்தவேண்டும். நீங்கள் இளம் தலைமுறையான மாணவர்களிடம் பேசி மாணவர் அற வழியில் புரட்சியை ஏற்படுத்தி ஒரு புதிய தமிழகத்தை உருவாக்கலாம். அதற்கு எல்லாருமே உங்களுக்கு ஆதரவு. நீங்கள் காமராஜரை போன்று பொற்கால ஆட்சியை ஏற்படுத்தலாம். மற்றபடி நீங்கள் நீங்கள் மிகுந்த மனவேதனை, மனவலி அடைவதனால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை, உங்கள் ஆரோக்கியம் தான் கெடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X