உ.பி., அரசு மருத்துவமனையில் தெரு நாய்கள்

Added : மே 28, 2018 | கருத்துகள் (43)
Advertisement
Dogs,Hospital Ward,UP,Uttar Pradesh,உத்தரபிரதேசம்

ஹர்தோய் : உ.பி.,யில், அரசு மருத்துவமனையின், 'வார்டு'களில், தெரு நாய்கள் சுற்றித் திரிவது, நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.,யில், பல மாவட்டங்களில், சுகாதாரத் துறையினரின் அலட்சியம் காரணமாக, அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் வார்டுகளில், தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக, நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.

வார்டுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள படுக்கைகளின் அடியில், நாய்கள் படுத்து கிடப்பதும், நோயாளிகளின் உணவுகளை தின்பதும் வாடிக்கையாகி விட்டதாக, அவர்கள் குற்றம்சாட்டினர். இது, நோயாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி, மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் அளித்தால், 'நீங்களே அந்த நாய்களை துரத்தி விடவேண்டியது தானே... எங்களிடம் ஏன் புகார் அளிக்கிறீர்கள்' என பதிலளிப்பதாக, நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Iyer - Austin,இந்தியா
29-மே-201800:36:46 IST Report Abuse
Hari Iyer ஐயா தெரு நாய்கள் பல் மடங்கு பெருகி விட்டன. அவற்றை கொல்ல முடியாமல் காந்தியின் சட்டம் தடுக்கின்றது. நாய் கடித்தால் ஊசி போட பணம் இல்லை. அவர் போட்ட சட்டம் அவருக்கு தேனாக இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
28-மே-201817:21:31 IST Report Abuse
Raj Pu பிஜேபி ஆட்சி செய்தால் நாடு முழுவதும் இது போல வளர்ச்சி பெறலாம்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
28-மே-201817:04:37 IST Report Abuse
Endrum Indian கேரளாவில் பல இடங்களில் தெரு நாய் பலரை கடித்து, காயப்படுத்தி, சிலரை குதறி எடுத்திருக்கிறது, அதை கருத்தில் கொண்டு தெரு நாயை ஒழிக்கப்போகும் போது இந்த விலங்கு ஆர்வலர்கள் வீதியில் வந்து தெரு நாய்க்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்று போராட்டம் செய்தனர் - செய்தி. "விலங்கு ஆர்வலர்களின் இடை விடாத முயற்சியால், அவர்கள் உதவியினால்" தெரு நாய்கள் இப்போ எல்லா இடத்திலும் சுதந்திரமாக பல்கிப்பெருகி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X