'கபளீகரமாகும்' அரசாங்க சொத்து... கரன்சியில், 'குளித்து' அதிகாரிகள், 'கெத்து'

Added : மே 29, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோடை விடுமுறைக்கு ஏராளமான 'குட்டீஸ்' வீட்டுக்கு வந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் ஜாலியா ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.''என்னக்கா, பேப்பர்ல விசேஷமா ஏதாவது இருக்கா...'' என கேட்டபடி, ஸ்கூட்டரில் வந்திறங்கினாள் மித்ரா.''துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை பத்திதான், எல்லா பேப்பர்லயும்
'கபளீகரமாகும்' அரசாங்க சொத்து... கரன்சியில், 'குளித்து' அதிகாரிகள், 'கெத்து'

கோடை விடுமுறைக்கு ஏராளமான 'குட்டீஸ்' வீட்டுக்கு வந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் ஜாலியா ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.''என்னக்கா, பேப்பர்ல விசேஷமா ஏதாவது இருக்கா...'' என கேட்டபடி, ஸ்கூட்டரில் வந்திறங்கினாள் மித்ரா.''துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை பத்திதான், எல்லா பேப்பர்லயும் எழுதிக்கிட்டு இருக்காங்க... அரசாங்கத்துக்கு எதிரா, நம்மூர்ல போராடுற அமைப்புகள பத்தி, உளவுத்துறைக்காரங்க விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க. எத்தனை அமைப்பு இருக்கு; நிர்வாகிங்க யாரு; நிதியுதவி செய்றது யாருன்னு விசாரிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.''ஐ.பி.எல்., பாத்திங்களா... எதிர்பார்த்த மாதிரி ஜெயிச்சுக் காட்டிட்டாங்கள்ல,'' என, குதுாகலித்தாள் மித்ரா.''ஆமாப்பா... நானும் பார்த்தேன். சுவாரஸ்யம் இல்லாமப் போச்சுப்பா... எப்பவும், கடைசி ஓவர்ல... 'திரில்'லா ஜெயிப்பாங்க. இந்த தடவை சப்புன்னு முடிஞ்சிருச்சு,'' என்றாள் சித்ரா.''உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்களா... அதுக்கான அறிகுறியே தெரியலையே,'' என, கேள்வியை ஆரம்பித்தாள் மித்ரா.''அதுக்கான வாய்ப்பே, இப்போதைக்கு இல்ல. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால, அதிகாரிகள் வட்டாரத்துல கரன்சி மழை பொழியுது. எங்கெல்லாம் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்புல இருக்குங்கிறத கண்டுபிடிக்கிறாங்க. அதை மீட்கறதுக்கு பதிலா, பல 'ல'கரம் பேரம் பேசி, முடிச்சிடுறாங்க. கிருஷ்ணா காலனி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடுன்னு, பல இடங்கள்ல மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, தனியார்ட்ட சிக்கியிருக்கு. கரன்சி வாங்கிட்டு, அதிகாரிங்க கண்டுக்காம இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''கார்ப்பரேஷன்ல, ஒரு அதிகாரி கூட நேர்மையா இல்லயாக்கா,'' என்றாள் மித்ரா.''எல்லா பொறுப்பிலும், 'பொறுப்பு' அதிகாரிங்கதான் இருக்காங்க... தெற்கிலும், மேற்கிலும் அதிகார மையங்களா இருக்கற, அந்த ரெண்டு பேரோடு வீட்டுக்குப் போயி, தவமிருக்காங்க. அவுங்கதான், நம்மூரு அதிகாரிங்கள ஆட்டிப் படைக்கிறாங்க.''ஒருத்தரு அரசு விழாக்களுக்கு வர மாட்டாரு; இன்னொருத்தரு விழா நடக்குற இடத்துல ஒரு 'ரவுண்டு' அடிச்சு 'கெத்து' காட்டுறாரு,'' என்றாள் சித்ரா.புதுசாக வாங்கியிருந்த எல்.இ.டி., 'டிவி'யை மித்ரா, 'ஆன்' செய்தாள். உள்ளூர் சேனலில், சத்யராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.''அக்கா, இந்த படத்துல வர்ற கேரக்டர், நம்மூரு அரசியல்வாதிகள் ரொம்ப பேருக்கு கனகச்சிதமா பொருந்தும் போலிருக்கே,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்க ஆசியோடு, புதுசா 'தாபா' ஆரம்பிச்சிருக்காங்களாமே...'' எனக் கேட்டாள்.''அதுவா... காளப்பட்டியில இருந்து ஒன்றரை கி.மீ., துாரத்துல, நாலு 'தாபா' ஓட்டல் ஆரம்பிச்சிருக்காங்க. 'நாமெல்லாம் தமிழர்'ன்னு சொல்றவங்க ஒரு ஓட்டலும், மீதியை ஆளுங்கட்சிக்காரங்களும் நடத்துறாங்க. கோயில்பாளையம் 'லிமிட்'டுக்குள்ள வருது. கடைக்கு ரூ.25 ஆயிரம் மாமூல் 'பிக்ஸ்' பண்ணி இருக்காங்க.''எல்லை மாறி வந்து, யார் கை நீட்டினாலும், மறுக்காம, கரன்சியை அள்ளி விடுறாங்க. அந்தளவுக்கு மதுபானம் ஆறா ஓடுது. பாட்டிலுக்கு, அம்பது ரூபா கூடுதலா வச்சு விக்கிறாங்க. சரக்கு ஒரிஜினலா, போலியான்னு தெரியலை... சம்பளம் 'லேட்'டானாலும், மாமூல் கரெக்டா வர்றதுனால, போலீஸ்காரங்க கண்டுகறதில்ல,'' என்றாள் சித்ரா.''கிராமத்து மக்களும், விவசாயிகளும் அரசாங்கத்து மேல ரொம்ப கோபத்துல இருக்காங்களாமே,'' என்றாள் மித்ரா.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட்டுறவு தேர்தல் நடந்துச்சுல்ல... இன்னும் இயக்குனர்களை தேர்வு செய்யாம இருக்காங்க... அதனால, விவசாயிகளுக்கு பயிர் கடன், மக்களுக்கு நகை கடன், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியலை.''இயக்குனர்களோ அல்லது ஸ்பெஷல் ஆபீசரோ கையெழுத்து போட்டாதான், கூட்டுறவு வங்கியில இருந்து, பணம் கொடுக்க முடியும். ரெண்டு வாரமா, கூட்டுறவு வங்கிகள்ல எந்த வேலையும் நடக்குறதில்ல. கிராமத்து ஜனங்க கொந்தளிப்புல இருக்காங்க,'' என்றாள் சித்ரா.''அதான், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிக்கு, கையெழுத்து போடுற அதிகாரம் கொடுத்திருக்காங்களே... அப்புறமென்ன,'' என்ற மித்ராவிடம், ''அவரோட கையெழுத்து, தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாதாம்... அதனால, சிக்கல் அதிகமாகிக்கிட்டே போகுது,'' என்றாள் சித்ரா.''அரசாங்க அலுவலகத்துல, இடைத்தரகர் ராஜ்ஜியம் ரொம்பவே அதிகமாகிச்சுக்கா,'' என, புலம்பினாள் மித்ரா.''நானும் கேள்விப் பட்டேன். பேரூர் வி.ஏ.ஓ., ஆபீசுல தண்டல்காரர் இடத்துல நாட்டாமையா இருந்த 'குண்டு' ஆசாமிய விரட்டி விட்டுட்டாங்க. அவரு, தாலுகா ஆபீசுல தஞ்சம் புகுந்துட்டாரு.''சரியா நாலு மணியாச்சுன்னா... அவரை பார்க்கலாம். இவர்ட்ட வேலைய ஒப்படைச்சா, கனகச்சிதமா முடிச்சுக் கொடுப்பாராம். அந்தளவுக்கு பெரிய அதிகாரிகளோடு நல்ல நட்போடு இருக்காரு...'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் சரி... கார்ப்பரேசன்ல வேலை எடுக்குறவங்கள கட்டாயப்படுத்தி, ஒரு 'பர்சன்ட்' கமிஷன் கேக்குறாங்களாமே...'' என இழுத்தாள் மித்ரா.''அதுவா, புதுசா சங்க கட்டடம் கட்டப் போறாங்களாம். அதுக்கு, வேலை எடுக்குற 'கான்ட்ராக்ட்'காரங்க, ஒரு 'பர்சன்ட்' கொடுக்கணும்னு உத்தரவு போட்டுருக்காங்க. அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பங்கு கொடுக்கறதுபோக, சங்கத்துக்கும் கொடுக்க வேண்டி இருக்கறதுனால, 'கான்ட்ராக்டர்'கள்ல சிலர் புலம்பிக்கிட்டு இருக்காங்க...''''ஏற்கனவே... அவுங்க செய்யற வேலை தரமில்லாம இருக்கு... கமிஷன் கூடிக்கிட்டே போச்சுன்னா... இனி வேலையே செய்யாம, காசு எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கே...'' என்றாள் மித்ரா.''ஆமாப்பா... எந்த வேலையா இருந்தாலும், அதிகார மையத்துல இருந்து உத்தரவு வரணும்; இல்லேன்னா, எதுவும் நடக்காது,'' என, பொடி வைத்தாள் சித்ரா.''அப்படியா...'' என, எதுவும் தெரியாததுபோல், வாயை பிளந்தாள் மித்ரா.''என்ன... தெரியாதது போல கேக்குற... அனுமதியற்ற மனைகள முறைப்படுத்த, ஏகப்பட்ட விண்ணப்பம் வந்துருக்கு; பணமும் கட்டிட்டாங்க; உத்தரவும் 'ரெடி'யா இருக்கு. ஆனா, கொடுக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, மேலிடத்துல இருந்து இன்னும் 'சிக்னல்' வரலைன்னு சொல்றாங்க... ''''எனக்கு ஒரு போலீஸ் மேட்டர் தெரியும், சொல்லட்டா,'' என, பொடி வைத்தாள் மித்ரா.''பீளமேடு விவகாரம்தானே; ஊருக்கே தெரியுமே. 'ஜீவ'னுள்ள அந்த போலீஸ் அதிகாரி பன் மால் ரோட்டுல இருக்கிற அபார்ட்மென்டுல, ஒரு 'லேடி'யோடு 'டிஸ்கஸ்' பண்ணியிருக்காரு. சிக்காம இருக்கறதுக்காக, 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' பையனை கூட்டிட்டு போயிருக்காரு. அந்த பையனை, பைக் பக்கத்துல நிக்க வச்சிட்டு, இவரு மட்டும் வீட்டுக்கு போயிருக்காரு.''இந்த விஷயம் அவரோட மனைவிக்கு தெரிஞ்சு போச்சு. ஸ்டேஷனுக்கு வந்து தாளிச்சிட்டாங்க... ஸ்டேஷன்ல இருந்தவங்க, சமாதானப்படுத்தி, வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க,'' என, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், ''அந்த அதிகாரிய பத்தி நெறைய்யா கேள்விப்பட்டு இருக்கேன். அவரு... அந்த விஷயத்துல ரொம்ப 'வீக்'. இப்ப மாட்டிக்கிட்டார்,'' என, கிண்டலடித்தாள் மித்ரா.''எஜூகேசன் மேட்டர் ஏதுமில்லையா,'' என, சித்ரா கொக்கி போட, ''இந்த வருஷம் கார்ப்பரேசன் ஸ்கூல்ல தேர்ச்சி சதவீதம் ரொம்ப குறைஞ்சிடுச்சு. விசாரிச்சதுக்கு, பி.டி.ஏ., ஆசிரியர்கள் பாடம் நடத்துனதுனால, தேர்ச்சி குறைச்சிடுச்சுன்னு விளக்கம் சொல்லி இருக்காங்க.''தேர்ச்சி குறைவா இருந்தாலும், கார்ப்பரேசன் நடத்துற சில ஸ்கூல்ல சேர்க்கறதுக்கு இன்னமும் முட்டி மோதுறாங்க, பரிந்துரை இல்லாம 'சீட்' கெடைக்கிறது குதிரை கொம்பா இருக்கு. அஞ்சாயிரத்துல இருந்து பத்தாயிரம் வரைக்கும், 'டொனேசன்' வாங்குறாங்க...'' என்றாள் மித்ரா.''ஆனா, எந்த ஸ்கூல் மீது புகார் போனாலும், நடவடிக்கை எடுக்கறதில்லையாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆமாக்கா... புகார் வந்துச்சுன்னா அதையே காரணமா வச்சு 'சீட்' கேட்டு மிரட்டுறாங்க. கொடுக்கலைன்னா புகாரை பெரிசு பண்றாங்க. சமரசமாகிட்டா, ஒண்ணுமில்லாம பண்ணிடுறாங்க,'' என்ற மித்ரா, ''திருச்சி ரோட்டுல இருக்கற, அரசாங்க உதவி பெறும் ஸ்கூலை மூடப் போறாங்களாமே,'' என, இழுத்தாள்.''ஆமாம்... நானும் கேள்விப்பட்டேன். ஸ்கூலை சுத்தி, காம்ப்ளக்ஸ், அபார்ட்மென்ட் பெருகிடுச்சு. நில மதிப்பு தாறுமாறா எகிறிடுச்சு. அதனால, அட்மிஷன் போட வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. கொஞ்ச நாள்ல, கை மாறிடும்னு சொல்றாங்க. டீச்சர்ஸ்களுக்கு பங்கு தர்றதா சொல்லி இருக்கிறதா, பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு 'டிரான்ஸ்பராகி' போகப் போறாங்களாம்,'' என, விளக்கிய சித்ரா, நாளிதழ் ஒன்றில் வந்திருந்த செய்தியை படித்து, ''கோவில் நிலத்தை மீட்டுருக்காங்களாம்,'' என்றாள்.''அதுவா, சலீவன் வீதியில இருக்கற வேணுகோபால சுவாமி கோவிலுக்குச் சொந்தமா, தெலுங்குபாளையம் ரோட்டு, ரெண்டு ஏக்கர் இருக்கு. குத்தகைக்கு எடுத்தவரும், வாரிசுகளும் இறந்துட்டாங்க. இதை தெரிஞ்சுக்கிட்ட ஒருத்தரு, வீடு, கடைன்னு கட்டடம் கட்டி, வருமானம் பார்த்திருக்காரு. கோவில் நிர்வாகியா வந்த பெண் அதிகாரி கண்டுபிடிச்சு, நோட்டீஸ் கொடுத்திருக்காரு. கேட்கலை; இடிச்சு தள்ளிட்டாரு. விஷயம் ஆளுங்கட்சி காரங்கள்ட்ட போயிருக்கு. பேச்சு நடத்தி, சமரசமா போகலாம்னு, அதிகாரியை தேடிக்கிட்டு இருக்காரு. அவரோ, கோடை விடுமுறையை கழிக்க லீவு போட்டுட்டு, குடும்பத்தோடு வெளியூர் போயிட்டார். ஆனா, பெருமாள் சொத்தை கபளீகரம் செய்ய, பெருமாளே துணை போறாருன்னு, கோவில் ஊழியர்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.கோவிலுக்குச் சென்று வந்த சித்ராவின் அம்மா, பிரசாதத்தை கொடுக்க, இருவரும் அதை பயபக்தியுடன் வாங்கி, பூசிக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
29-மே-201803:32:49 IST Report Abuse
Manian சித்திரா- பொது ஜனங்களுக்கு - நாமக்கு எல்லோருக்குமே- சொந்தமானத்தை - மகாராட்ச்சை இடம்னு சொல்லி நாம ஒதுங்கறதாலேதான் அந்த இடத்தை எல்லாம் விக்கிறாங்க. அதோட, போயம்புது ஆபிசருக்கு டெங் எப்போதுமே புலம், அதான் அவருக்கு அந்த லீக்காம். அதை போயி விக்குனு சொல்லலாமா? அதுவும் சரிதான். இயற்கை மரபணு மூலம் செய்யுற வித்தையை தடுக்க நாம யாரு. ஆண்பாடு- பெண்பாடு. அதுவும் சரிதான் மீதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X