அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எதற்கெடுத்தாலும்,போராட்டம்,நடத்தினால்,தமிழகம்... 'சுடுகாடாகும்!'

''எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால், தமிழகம் சுடுகாடாகும்,'' என, துாத்துக்குடி கலவரம் குறித்து, நடிகர் ரஜினி ஆவேசமாக தெரிவித்தார். மேலும், அந்த போராட்டத் தில், போலீசார் மீது கை வைத்தது, சமூக விரோதிகள் தான் என்றும், பிரச்னையை துவக்கியதும், அவர்கள் தான் என்றும், பளிச்சென அவர் குற்றம் சாட்டினார். சமூக விரோதிகளிடம் இருந்து, தமிழக மக்கள் ஜாக்கிரதை யாக இருக்குமாறும், அவர் அறிவுரை கூறினார்.
துாத்துக்குடி மாவட்டத்தில், 'ஸ்டெர்லைட்' ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில், கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நடிகர் ரஜினி, நேற்று துாத்துக்குடி சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து, ஆறுதல் கூறினார். இதுவே, அரசியல் கட்சி துவக்கப் போவதாக கூறி உள்ள ரஜினியின்,
நேரடியான முதல் மக்கள் சந்திப்பாகும்.

ரத்தக்கறை


தூத்துக்குடியில், ரஜினி அளித்த பேட்டி: பாதிக்கப் பட்ட எல்லாரையும் பார்த்தேன். நிறைய பேர், பயந்து போயுள்ளனர்; சோகத்தில் இருக்கின்றனர். நல்ல பிரச்னைக்காக மக்கள், 100 நாள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை, கலெக்டர் அலுவலகத்தை எரித்தவர்கள், சாதாரண மக்கள் கிடையாது. விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள், வேலை தான் இது. போராட்டம் நடத்தும்போது, மக்கள் ஜாக்கிரதை
யாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில், சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர். புனித போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தாலும், ரத்தக் கறையுடன் முடிந்து உள்ளது. அரசு, இரும்புக் கரம் கொண்டு,சமூக விரோதிகளை அடக்க வேண்டும். இந்த விஷயத் தில், ஜெயலலி தாவை பாராட்டுவேன். அவர், சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார்.

இப்போது இருக்கும் அரசு கூட, இந்த விஷயத்தில், அவரை பின்பற்றி, அடக்கி வைக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்திற்கு ஆபத்து.

'ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக திறக்க மாட்டோம். பூட்டு போட் டாச்சு' என்று, அரசு கூறுகிறது. இனி, நீதி மன்றத்திற்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்றால், அவர்கள், மனிதர்களே கிடையாது. தமிழகத்தில், அடிக்கடி போராட்டம் நடக்கிறது. சிலர் நல்லதுக்காக போராடுகின்றனர்; சிலர் போராட்டத்தை ஊக்கு விக்கின்றனர். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.போராட்டம் நடந்தால், தமிழகத்தில், எந்த தொழில் முதலீடும் வராது; வேலைவாய்ப்பும் கிடைக்காது. இளைஞர் களும் கஷ்டப்படுவர். ஏற்கனவே, தண்ணீர் கிடையாது; விவசாயம் பாதிக்கப்படுகிறது.

சமூக விரோதிகள், போராட்டத்திற்குள் நுழைந்ததை கணிக்க தவறியது, உளவுத் துறையின் தவறு. அனைத்திலும், அரசியல் செய்கின்றனர்.மக்கள், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு, ஒன்றும் தெரியாது என்று நினைக் கின்றனர்; மக்களுக்கு எல்லாம் தெரியும்.நேரம் வரும்போது, அவர்கள் நியாயத்தை

வெளிக்காட்டுவர். சுட்டது குறித்து, குழப்பமாக உள்ளது. இது மாதிரி நடக்கும் என்று, போலீசும் எதிர்பார்க்கவில்லை. போலீசார் மீது, கை வைப்பவர்களை, எப்போதும் விடக் கூடாது.

போலீஸ் இல்லை எனில், ஏழு கோடி மக்களை யார் காப்பாற்றுவர்? பொது சொத்துகளை சேதப்படுத்து பவர்களை பிடித்து, நாளிதழ்கள் மற்றும், 'டிவி'யில் வெளியிட வேண்டும்.எல்லாவற்றிற்கும், 'ராஜினாமா, ராஜினாமா' என்று கேட்டால் எப்படி... அந்த அரசியலை, நான் கையாள விரும்ப வில்லை. உயிர், பலியா னது உண்மை தான். அதற்காக, ராஜினாமா கோர முடியாது. 100 நாட்கள் போராட்டம் நடந்தும், அரசு அலட்சிய மாக இருந்து உள்ளது. அரசு உஷாராக இருக்க வேண்டும்.இது, ஒரு பெரிய பாடம். இறந்து போனவர்கள் குடும்பத் திற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு


சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத் தில் அளித்த பேட்டி: துாத்துக்குடி போராட்டத் தில், கடைசியில் சமூக விரோதிகள் புகுந்து தான், அதை கெடுத்தனர்.ஜல்லிக் கட்டு போராட்டத் தில்,

கடைசி நாளில், எப்படி சமூக விரோதிகள் கெடுத்தனரோ, அதே போல், துாத்துக்குடியில் கெடுத்தனர். அங்குள்ள மக்கள், அப்பாவிகள். போலீசை அடித்தது, சமூகவிரோதிகள் தான். கலெக்டர் அலுவலகத்தை அடித்ததும், குடியிருப்பு பகுதிகளை எரித்ததும், அவர்கள் தான்.

இது, எப்படி தெரியும் என்று, கேட்க வேண்டாம்; எனக்கு தெரியும். சமூக விரோதிகள் மீது, சீக்கிரம் நடவடிக்கை எடுத்து, அடையாளம் காட்ட வேண்டும். இந்த பிரச்னை ஏற்பட்டதே, போலீசாரை அடித்த பின் தான். சமூக விரோதிகள் தான், போலீசை அடித்தனர்; அப்போது தான், பிரச்னை துவங்கியது. போலீசாரை அடிப்பதை, எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
மக்கள், எதற்கு எடுத்தாலும், 'போராட்டம் போராட்டம்' என போய் விட்டால், தமிழகம்
சுடுகாடாக ஆகிவிடும். இவ்வாறு அவர், ஆவேசமாக கூறினார்.

தமிழிசை வரவேற்பு


'சமூக அக்கறையோடு, நடிகர் ரஜினி கூறியதை வரவேற்கிறேன்' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு: சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், சட்டசபையை வெளியே நடத்தி கொண்டி ருக்கிறார். முதல்வர் பதவி இறங்க வேண்டும் என்ற நெறியை விட, தான் முதல்வராக வேண்டும் என்ற வெறியே, இதில், அதிகமாக வெளிப் படுகிறது. தி.மு.க., நடத்தும் மாதிரி சட்டசபை, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்.பொது மக்களின் போராட்டத்தில், சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான், வரம்பு மீறி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டங்கள் எச்சரிக்கை யோடு நடக்க வேண்டும் என்ற நிலையை, சமூக அக் கறையோடு, ரஜினி எடுத்து சொன்னதைவரவேற்கிறேன். உண்மை நிலையை, விமர்சனங் களையும் மீறி, எடுத்து சொல்வதே சரி. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (259)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
06-ஜூன்-201810:23:05 IST Report Abuse

Mohan Sundarrajaraointha kelviyai arasidam vaikka vendum. sirithum perithumaana ellaa vishayathirkum poraattam seythuthaan pera vendumaa?

Rate this:
Sundaresan Ramamoorthy - mumbai,இந்தியா
01-ஜூன்-201814:19:21 IST Report Abuse

Sundaresan Ramamoorthyரஜனி சொன்னதில் என்ன தப்பு என்று சில பேர் குதிக்கிறார்கள் என்று புரியவில்லை. துப்பாக்கி சூடு பட்டு துர்வசமாக இறந்து போனவர்கள் சமூக விரோதிகள் என்று அவர் எங்கே கூறினார். சமூக விரோதிக்களினால் ஏற்பட்ட கலவரத்தில் அப்பாவி மக்கள் சுடப்பட்டார்கள் என்று கூறியதை திருத்தி பேசினால் அது உண்மைக்கு புறம்பானது. ரஜனி எப்பேர்பட்டவர் , எங்கிருந்து வந்தவர் , நடிகனா , தமிழரா, கன்னடக்கரரே அல்லது மராட்டியாரா என்பது முக்கியமில்லை. அவர் ஒரு இந்திய பிரஜை . யார் வேண்டுமானாலும் இந்திய சட்டப்படி அரசியலுக்கு வர உரிமை உண்டு. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவருக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். ஆனால் கீழ்த்தரமாக விமர்சிப்பது தமிழரின் பண்பாடு இல்லை என்பது மக்களின் கருத்து. அதை மதிக்க எல்லோரும் கற்று கொள்ளவேண்டும்.

Rate this:
malik - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-201813:33:03 IST Report Abuse

malikஇந்து பெயரில் ஒளிந்து கொண்டு,இந்து மத அடையாளங்களை திருடிக்கொண்டு, வெகுஜன போராட்டம் என்கிற ஜனநாயக போர்வைக்குள் ஒளிந்து கொண்டு கலவரத்தை தூண்ட நினைக்கும் ஒவ்வொருவனும் பயங்கரவாதிதான்.

Rate this:
மேலும் 256 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X