அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக காங்.,தலைவர் விரைவில் மாற்றம்?

Added : மே 31, 2018 | கருத்துகள் (56)
Advertisement
காங்கிரஸ், தலைவர், திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற, கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக, டில்லி காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கூறியதாவது: தமிழக காங்கிரஸ் நிலைமை குறித்து, சமீபத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'மாற்று கட்சியில் இருந்து, காங்கிரசுக்கு வந்தவர்களை, மாவட்ட தலைவர்களாக திருநாவுக்கரசர் நியமித்துள்ளார். இது, பாரம்பரிய காங்கிரஸ் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. 'அவர்களை, மாவட்ட தலைவர் பதவியில் நியமித்தது தவறு; அவர்களை நீக்குவதுடன்,தமிழக தலைவரையும் மாற்றினால் தான், நிலைமை மாறும்' என்று, சிதம்பரம் கூறிஉள்ளார். அதற்கு, ராகுல், 'நீங்களே தலைவராக இருங்கள்' என்று, சிதம்பரத்திடம் கூறியுள்ளார்.

ஆனால், தனக்கு வயதாகி விட்டதால், அந்த பொறுப்பை ஏற்க முடியாது' என்று, சிதம்பரம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, சிதம்பரத்தின் ஆலோசனையின்படி, இளங்கோவனை, சில தினங்களுக்கு முன், ராகுல் அழைத்து, நேரில் பேசியுள்ளார்.தற்போது, சோனியாவின் சிகிச்சைக்காக,அமெரிக்கா சென்றுள்ள ராகுல், மீண்டும், டில்லி திரும்பியதும், தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வார். இளங்கோவன், மீண்டும் காங்கிரஸ் தலைவராக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய அளவில், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, மூன்றாவது அணி அமைக்க, தி.மு.க., காய் நகர்த்துகிறது. அதற்கு, 'செக்' வைக்க ராகுல் நினைப்பதால், தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்படுவது உறுதி என்று, தமிழக காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
01-ஜூன்-201801:39:56 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நிலையற்ற தன்மை ஒன்றே இங்கு நிரந்தரம்...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
31-மே-201816:57:41 IST Report Abuse
Cheran Perumal சிதம்பரமே கா கா தே கா வுக்கு போயிட்டு வந்தவர்தான். இவருக்கு திருநாவை பற்றி சொல்ல என்ன அருகதை இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
31-மே-201815:59:02 IST Report Abuse
Poongavoor Raghupathy Mr.Chidambaram who is from Tamilnadu and a long time politician is not seen or heard of improving Congress Party's popularity in Tamilnadu. Chidambaram enjoyed the high level posts in Congress Govt and blamed Sonia when Congress had lost the last elections.Now Chidambaram got between the devil and deep sea with charges in Courts. Does this not show the real attitude of this Senior Congressman.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X