இடைத்தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் அதிக வெற்றி

Updated : மே 31, 2018 | Added : மே 31, 2018 | கருத்துகள் (167)
Advertisement
இடைத்தேர்தல், பா.ஜ., கர்நாடகா, காங்.,

புதுடில்லி : நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக இருந்த 10 சட்டசபை தொகுதிகள், 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.தொகுதியில் சட்டசபை தேர்தலும் கடந்த வாரம் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.


சட்டசபையை பிடித்த மாநில கட்சிகள் :10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் மற்றும் கர்நாடகா மாநிலம் ஆர்.ஆர்.தொகுதி சட்டசபை தேர்தலையும் சேர்த்து, காங்., 4 இடங்களிலும், பா.ஜ., இரு இடத்திலும், மற்ற இடங்களில் மாநில கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.
கர்நாடக மாநிலம் ஆர். ஆர்.தொகுதியில் காங்., வேட்பாளர் முனிரத்னா 41,162 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது.


லோக்சபா தொகுதிகள்உத்தரகாண்ட் தாராலி தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. உ.பி., மாநிலம் கைரானா லோக்சபா தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் கட்சியும், உ.பி., நூர்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.


கர்நாடகா:

கர்நாடகாவில் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன. காங்.,கிற்கு ஏற்கனவே உள்ள 78 இடங்களுடன், இப்போதைய ஒரு சீட்டையும் சேர்த்து 79 எம்எல்ஏக்கள் ஆகி உள்ளனர்.


பீகாரில் நடந்தது என்ன:

கர்நாடகாவைப் போலவே, பீகாரிலும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்தது. பாஜவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பதற்காக, லாலுவை காங்., ஆதரித்தது. மாயாவதியும் மறைமுகமாக லாலுவை ஆதரித்தார்.

உ.பி.,யை எடுத்துக்கொண்டால், கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் வெற்றி பெற்றதில் ஆச்சரியம் இல்லை. காரணம், பாஜவை தோற்கடிப்பதற்காக ரா.லோ.த., வேட்பாளரை லாலு, மாயாவதி, முலாயம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆதரித்தனர். இதுவே, இக்கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முக்கிய காரணம்.மேலும் கைரானா தொகுதியில் 80.74 சதவீதம் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஓட்டுகளும் பாஜவுக்கு எதிராக இருந்திருக்கலாம்.. இதுவும் பாஜ தோல்விக்கு ஒரு காரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேகாலயாவில் காங்., ஆட்சி?


60 இடங்கள் கொண்ட மேகாலயாவில், புதிய வெற்றியையும் சேர்த்து, அதன் பலம் 21 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் பெரிய கட்சியாக காங்., உயர்ந்துள்ளது. இதனால் கர்நாடகாவைப் போல, இங்கும் ஆட்சி அமைக்க காங்., முயற்சி செய்யும் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தொகுதிகள் :
கைரானா (உ.பி.,) - ராஷ்டிரிய லோக்தள் (பா.ஜ.,விடம் இருந்தது)பல்கர் (மகாராஷ்டிரா)- பா.ஜ., (பா.ஜ.,விடம் இருந்தது)பந்தாரா -கோண்டியா (மகாராஷ்டிரா) - தேசியவாத காங்., (பா.ஜ.,விடம் இருந்தது)நாகாலாந்து - தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (நாகா மக்கள் முற்போக்கு கட்சி)
சட்டசபை தொகுதிகள் :

நூர்பூர் (உ.பி.,) - சமாஜ்வாதி (பா.ஜ.,விடம் இருந்தது)பலஸ் கடேகன் (மகாராஷ்டிரா) - காங்கிரஸ் (காங்., இடம் இருந்தது)ஜோகிகட் (பீகார்) - ராஷ்டிரிய ஜனதா தளம் (ஐக்கிய ஜனதா தளமிடம் இருந்தது)செங்கானுர் (கேரளா) - மார்க்சிஸ்ட் கம்யூ (மார்க்சிஸ்ட் கம்யூ)ஷாகோட் (பஞ்சாப்) - காங்., (சிரோன்மனி அகாலி தளம்)சில்லி (ஜார்கண்ட்) - ஜார்கண்ட் முக்தி மோச்சா (ஜார்கண்ட் முக்திமோச்சா)கோமியா (ஜார்கண்ட்) - ஜார்கண்ட் முக்தி மோச்சா (ஜார்கண்ட் முக்திமோச்சா)ராஜராஜேஸ்வரி நகர் (கர்நாடகா) - காங்., (காங்.,)மெகஸ்தலா (மேற்கு வங்கம்) - திரிணாமுல் காங்., (திரிணாமுல் காங்.,)அம்பதி (மேகாலயா) - காங்., (காங்.,)தாரலி (உத்தரகாண்ட்) - பா.ஜ., (பா.ஜ.,)

Advertisement
வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
06-ஜூன்-201806:33:16 IST Report Abuse
Ramasami Venkatesan இது என்னவோ பெரிய சாதனை போலே காங்கிரஸுக்கு காட்டப்படுகிறது. கர்நாடகாவில் இதே காங்கிரஸ் 122 சீட்கள் பெற்றிருந்த மாநிலத்தில் 78 ஆக குறைந்ததற்கு வெட்கப்பட அல்லவா வேண்டும். அதுவும் இன்னொரு வெட்க்கக்கேடு வெறும் 37 சீட்கள் பெற்ற ஜ த (எஸ் ) டன் கூட்டணி வைத்தது. எப்படி இருந்த கட்சி இப்படிப்பட்ட அவல நிலைக்கு தள்ளப்பட்டதற்கு யார் காரணம். பாவம் காங்கிரஸ் 50 / 60 வருடங்களுக்கு ஆட்சி செய்த தங்கள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது என்று இறுமாப்புடன் செயல்பட்டதற்கு கிடைத்த தண்டனை. திருந்தினால் மக்களிடம் மன்னிப்பு உண்டு இல்லையேல் ............ அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
vns - Delhi,இந்தியா
01-ஜூன்-201800:27:01 IST Report Abuse
vns NEW DELHI: India's GDP grew at the fastest pace in seven quarters at 7.7 per cent in January-March, retaining the fastest growing major economy tag on robust performance by manufacturing and service sectors as well as good farm output.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
31-மே-201821:15:58 IST Report Abuse
Siva நாசமா போங்கடா .. உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டீர்களா.. இந்தியா நாட்டில் உள்ள அத்தனை தொழிற்சாலை உள்ள தொழிற்சங்க தலைவர்கள் என்ற தறுதலைகள் பல லட்சம்.. இவனுக்கு கொடுக்கும் ஓசி சம்பளம்.. பல ஆயிரம் கோடி.. யார் கேட்பது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X