சீன வகுப்பில் நுழைந்த செயற்கை நுண்ணறிவு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சீன வகுப்பில் நுழைந்த செயற்கை நுண்ணறிவு!

Added : மே 31, 2018
Advertisement

வகுப்பறையில் மாணவ - மாணவியர் எப்படி ஆசிரியரை கவனிக்கின்றனர்; அவர்கள் எழுதும் கட்டுரைகளை எப்படி மதிப்பிடுவது... இதற்கெல்லாம் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பயன் படுத்த திட்டமிட்டுள்ளது சீன அரசு.
தற்போது, 60 ஆயிரம் சீனப் பள்ளிகளில் மாணவர்களை எழுதும் கட்டுரைகளை, செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் திருத்தி மதிப்பெண் போட ஆரம்பித்துள்ளன. அவை போடும் மதிப்பெண்கள், ஆசிரியர் தரும் மதிப்பெண்களோடு, 92 சதவீதம் ஒத்துப் போகிறது என, சீன நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல, வகுப்பில் மாணவர்கள் எப்படி உட்கார்ந்திருக்கின்றனர், அவர்களது உடல் தோரணை, முக பாவங்கள் ஆகியவற்றை ஒரு கேமரா, 30 வினாடிகளுக்கு ஒருமுறை படமெடுக்க, அதை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அலசி, மாணவர்களுக்கு ஆசிரியர் நடத்துவது பிடித்திருக்கிறதா; பாடத்தில் ஈடுபாடு இருக்கிறதா என்பதையெல்லாம் துல்லியமாக சொல்லி விடுகிறது.
சீனாவின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக செயற்கை நுண்ணறிவை அரசு பரிசோதனை முறையில் தற்போது பயன்படுத்தி வருகிறது. இதில் கிடைக்கும் பலன்களை வைத்து நாடெங்கும் பயன்படுத்த உத்தேசித்துள்ளது அரசு. மாணவர்களின் வருகைப் பதிவை அதிகரிக்கவும், நன்னடத்தையை உறுதி செய்யவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X