பதிவு செய்த நாள் :
புராண கால கூகுள் நாரதர்:
உ.பி., துணை முதல்வர்

மதுரா:''மஹாபாரத காலத்திலேயே பத்திரிகை துறை துவங்கிவிட்டது. இந்த காலத்து கூகுள் போல், புராண காலத்திலேயே, அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்து இருந்து, அதை பரிமாற்றம் செய்தவர், நாரதர்,'' என, உ.பி., துணை முதல்வர், தினேஷ் சர்மா பேசினார்.

புராண, கால, கூகுள் ,நாரதர்,உ.பி., துணை முதல்வர் ,பேச்சு


உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.

மஹாபாரதம்


மதுராவில் நேற்று நடந்த, ஹிந்தி பத்திரிகை தின விழாவில், பா.ஜ.,வை சேர்ந்த, துணை முதல்வர் தினேஷ் சர்மா பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பத்திரிகை துறையின் துவக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவு கின்றன. ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொரு கருத்தைமுன்வைக்கின்றனர். உண்மையில், மஹாபாரத காலத்திலேயே, பத்திரிகை துறை துவங்கிவிட்டது.

மஹாபாரத போரின் போது, பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே போர்க்களத்தில் நடந்த சண்டை காட்சிகளை, ஹஸ்தினாபுர அரண்மனை யில் இருந்தபடி, கண்பார்வையற்ற திருதுராஷ்டிர னுக்கு, சஞ்ஜயன் விளக்கினான்.பறவைக் கண் பார்வையுடன் சஞ்ஜயன் செயல்பட்டதை, 'லைவ் டெலிகாஸ்ட்' என்றே கூற வேண்டும். எனவே, மஹாபாரத காலத்திலேயே, பத்திரிகை துறை துவங்கிவிட்டது.

விரல் நுனி


அதே போல், மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், கூகுளில் கிடைப்பது போல், புராண

Advertisement

காலத்தில், நாரதரின் வாயிலாக அனைத்து தகவல்களும் கிடைத்தன.அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்த நாரதர், அவற்றை, பிறருக்கு நொடிப் பொழுதில் பகிர்வதில் வல்லவர். அவரை, புராண கால கூகுள் என்றே கூறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே, பா.ஜ., தலைவர்கள் சிலர், அறிவியல் கண்டுபிடிப்புகளை, புராண காலத் துடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், தினேஷ் சர்மாவின் பேச்சும், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridharan - chennai,இந்தியா
08-ஜூன்-201811:47:10 IST Report Abuse

sridharanஇதில் சல சலப்புக்கு என்ன அவசியம் ஒப்பீடு பிடித்துஇருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் இக்னோர் செய்யுங்கள்

Rate this:
r.thiyagarajan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூன்-201823:18:49 IST Report Abuse

r.thiyagarajanWell comparison and well said....

Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
01-ஜூன்-201820:35:58 IST Report Abuse

தமிழ்வேள்பொறுத்திருந்து பாருங்கள்..இந்திய பெண்கள், திரவுபதி போல 5 கணவர்கள் [மனத்துக்குள் ஒன்று-கணக்கு தனி- கர்ணன்], குந்திமாதிரி, நியோகத்தில் பிள்ளை பெறுதல், மகாபாரதத்தில் சொன்னது போல பிராமணர்களிடத்தில் மட்டுமே நியோகத்துக்கு கனெக்ஷன் வைத்துக்கொள்வது போன்ற அனைத்தையும் சட்டபூர்வமாக்குவோம்- என்றும் இந்த பிஜேபி முட்டாள்கள் பேசுவார்கள்...இந்தியாவை மீண்டும் காட்டுமிராண்டி காலத்துக்கு கொண்டுசெல்லாமல் விடமாட்டார்கள்...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X