மலேஷியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் நரேந்திர மோடி சந்திப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
சந்திப்பு!
மலேஷியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி...
தலைவர்களுடன் தொழில், வர்த்தகம் பேச்சு

கோலாலம்பூர்: அரசு முறைப் பயணமாக, மலேஷியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர், மஹாதிர் முகமதுவை சந்தித்து பேசினார். இரு நாடுகளிடையிலான, தொழில், வர்த்தகம், கல்வி, சுற்றுலா, கலாசாரம் குறித்து, தலைவர்கள் இருவரும் பேச்சு நடத்தினர். அதன் பின் சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள புதிய கண்டுபிடிப்பு களுக்கான கண்காட்சியை பார்வையிட்டார். அந்நாட்டு அதிபரை சந்தித்து, இன்று பேச்சு நடத்தவுள்ளார்.

 மலேஷியா, சிங்கப்பூர், பிரதமர், நரேந்திர மோடி,சந்திப்பு


தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து நேற்று, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் சென்றார். அங்கு அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, மலேஷிய பிரதமர், மஹாதிர் முகமதுவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மலேஷியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், 92 வயதாகும் மஹாதிர், வெற்றி பெற்று, அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

மோடி - மஹாதிர் இடையே நடந்த பேச்சின் போது, இரு நாட்டு பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுற்றுலா, கலாசாரம், தொழில், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக, வெளியுறவுஅமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மூத்த அரசியல் தலைவரை சந்தித்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக,

பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில்கருத்து பதிவிட்டுள்ளார். மலேஷிய பயணத்தை முடித்து, நேற்று சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள, 'மெரீனா பே சாண்ட்ஸ்' என்ற இடத்தில், 'இன்ஸ்ப்ரீன்யூர் - 2.0' என்ற பெயரில் நடக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியை பார்வையிட்டார். இதில், இந்தியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த, 30 நிறுவனங்கள் பங்கேற்றன.

மருத்துவம், 'ரோபோட்டிக்ஸ்' உட்பட பல்வேறு துறைகளின் அரிய வகை கண்டுபிடிப்புகள், இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிங்கப்பூர் பிரதமர், லீ செய்ன் லுாங் மற்றும் அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஈஸ்வரன் ஆகியோரும், நேற்று மோடியுடன் சேர்ந்து, இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா - சிங்கப்பூர் இடையிலான உறவை, மேலும் பலப் படுத்த, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். தொழில், வர்த்தகத்தில், இந்தியாவின் சிறந்த நண்பனாக விளங்கும் சிங்கப்பூருக்கு வருகை தந்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாட்டு பாதுகாப்பு, தொழில், வர்த்தகம், கலாசாரம், சுற்றுலா உள்ளிட்டவற்றில், அதிக கவனம் செலுத்தப்படும். ஏசியான் நாடுகளுடன், இந்தியா, நல்ல முறையி லான உறவை பேணுவதில், சிங்கப்பூர் சிறப்புடன் செயல்படுகிறது.

இந்தியாவில், எளிதில் தொழில் துவங்கும் வகை யில், பல்வேறு சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. தேவையற்ற பல சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. எளிதில் தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, 42 இடத்திற்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு அவர்பேசினார்.

'டிஜிட்டல் பேமென்ட் ஆப்' அறிமுகம்


சிங்கப்பூரில், புதிய டிஜிட்டல் பேமென்ட் ஆப்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.

Advertisement

ரூபே, பிம் மற்றும் எஸ்.பி.ஐ., ஆப்களின் மூலம், அந்நாட்டில் மிக எளிய முறையில் பண பரிவர்த்தனை செய்யும் வகையில், இந்த ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில், எஸ்.பி.ஐ., வங்கியின், ஆறு கிளைகள் உள்ளன. பல இடங்களில் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இங்கு, எஸ்.பி.ஐ., பேமென்ட் ஆப் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம், இங்கு வரும் இந்திய சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, சிங்கப்பூர் வாழ் இந்தியர்களும் பலன் அடைவர்.

அதே போல், பிம் மற்றும் ரூபே ஆப்களை பயன்படுத்தி, இங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில், டிஜிட்டல் பேமென்ட் செய்து, பொருள் வாங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சிங்கப்பூர் நாட்டின் எலக்ட்ரானிக் டிரான்ஸ்பர் நெட்வொர்க் சிஸ்டத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மலருக்கு மோடி பெயர்!

பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் அதிபர், ஹலிமா யாகூப்பை, இன்று சந்திக்கிறார்; இரு நாட்டு உறவுகள் குறித்து, இருவரும் பேச உள்ளனர். அதன் பின், பல்வேறு நிகழ்ச்சிகளில், மோடி பங்கேற்கிறார். இன்று நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு மலருக்கு, பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்படவுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
01-ஜூன்-201810:42:46 IST Report Abuse

Hari RajModiji , Welcome to Malaysia

Rate this:
சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா
01-ஜூன்-201809:41:35 IST Report Abuse

சுப்ரமணியன்உரையாடலின் போது இந்திய தேசிய மொழியான இந்திக்கான முக்கியத்துவத்தை தெரியப்படுத்தவேண்டும், அதற்குரிய இடத்தை வலியுறுத்தி பெறவேண்டும்.

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
01-ஜூன்-201809:12:58 IST Report Abuse

balakrishnanசிங்கப்பூருக்கே தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள் தான், அந்த நாட்டில் ஏற்பட்ட இந்த அளவுக்கான வளர்ச்சியில் மோடிக்கு முக்கிய பங்குண்டு, அதனால் தான் அங்கு விளைந்த ஒரு தாவரத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது , எதிர்காலத்தில் உலகத்துக்கே மோடி அவர்கள் பிரதமராக வாய்ப்பு பிரகாசமாக இருக்கு, உலகமே காவிமயமாகும் நேரம் நெருங்கிவிட்டது, இப்படி இனி கதைகள் ஏராளம் வந்துகொண்டே இருக்கும்

Rate this:
iniyan - chennai,இந்தியா
01-ஜூன்-201814:50:57 IST Report Abuse

iniyanநீங்கள் மோடியை எதிர்ப்பது என்பதையே பிரதானமாக கொண்டுவிட்டிர்கள்....

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X