பொது செய்தி

இந்தியா

புது கட்சி துவக்கினார் மாஜி கால்பந்து வீரர் பூட்டியா

Updated : மே 31, 2018 | Added : மே 31, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 புது கட்சி துவக்கினார் மாஜி கால்பந்து வீரர் பூட்டியா

காங்டாங்க்: இந்திய அணி முன்னாள் கால்பந்து வீரர் பாய்சங்க் பூட்டியா அரசியல்கட்சி துவக்கியுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் கால்பந்து இந்திய அணிவீரர் பாய்சங்க் பூட்டியா,41, இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வென்று பெருமை சேர்த்தவர். நேற்று தலைநகர் காங்டாங்கில் ஹம்ரோ சிக்கிம் கட்சி என்ற புதிய கட்சியை துவக்கி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதில் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஆர்.பி.சுபா உள்ளிட்ட பூட்டியா ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பூட்டியா அளித்த பேட்டி, வளர்ச்சி அடையாத மாநிலமாக சிக்கிம் உள்ளது. மாநில ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாயக கட்சி பெயரில் மட்டும் தான் ஜனநாயகம் உள்ளது.ஆனால் முதல்வர் பவன்குமார் சாம்ப்ளின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சி நடத்துகிறார். சிக்கிமில் 32 நீர்மின்சார நிலையங்கள் இருந்தும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கவில்லை. மாறாக பக்கத்துநாடான வங்கதேசத்திற்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வரும் சட்டசபை தேர்தலில் எனது கட்சி ஆட்சி அமைத்தால் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
01-ஜூன்-201813:01:29 IST Report Abuse
makkal neethi நடிகர்கள் மார்க்கெட் குறைந்தால் அரசியலுக்கு வருவது போல இனி விளையாட்டு வீரர்களும் இது போல் வரவேண்டும் என்பதற்கான தொடக்கம் ...வழ்வாதாரம் நோக்கி புத்தியே அரசியல் கட்சிகள் காட்சிகள் படையெடுப்பு
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஜூன்-201811:59:46 IST Report Abuse
Pasupathi Subbian கால்பந்து விளையாட்டில் வேகம் முக்கியம். ஆனால் அரசியலில் பொறுமை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஜூன்-201807:59:58 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல் என்ற சதுரங்கத்தில் பாய்சங்க் பூட்டியா காலால் உதைத்து காய்களை நகர்த்தபார்க்கிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X