அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., கூட்டணி, கட்சிகள,ஓட்டம்!

சட்டசபை புறக்கணிப்பு என்ற முடிவை விரும்பாத, தி.மு.க., கூட்டணி கட்சிகள்,
ஓட்டம் பிடிக்க துவங்கி உள்ளன. அறிவாலயத்தில் நடந்த, மாதிரி சட்டசபையில் பங்கேற்ற, காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள்,
மறுநாளே, சட்டசபைக்கு வருகை தந்து, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
டில்லி மேலிடத்தில் இருந்து வந்த, திடீர் உத்தரவால், விலகல் அறிவிப்பை வெளியிட,
காங்கிரஸ் தயாராகி வருவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், மே, 29ல் துவங்கியது. அன்று, சபையில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சட்டசபையை புறக்கணிக்கிறோம்' என்றார். அவர் தலைமையில்,
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சபையிலிருந்து வெளியேறினர்.

முதல்வர் பேசிய பின், காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 'எங்கள் கேள்விகளுக்கு, முதல்வர் உரிய பதில் தரவில்லை' என புகார் கூறி, வெளிநடப்பு செய்தனர். முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., அபூபக்கரும், சபையில் பேச வாய்ப்பு அளிக்காததை கண்டித்து, வெளிநடப்பு செய்தார்.மறுநாள், தி.மு.க., சார்பில், சென்னை, அறிவாலயத்தில், மாதிரி சட்டசபை கூட்டம் நடந்தது. கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, நடிகர் கருணாசும் பங்கேற்றார். அதனால், தி.மு.க.,வை பின்பற்றி, அதன் கூட்டணி கட்சிகளும், சட்டசபையை புறக்கணிக் கும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில், காங்., மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். சட்டசபைக்கு வந்ததன் வாயிலாக,

தி.மு.க.,வின் சட்டசபை புறக்கணிப்பு முடிவிலிருந்து விலகுவதை, தி.மு.க., தலைமைக்குஉணர்த்தி உள்ளன.

இது, கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காங்., மேலிடத்திலிருந்து வந்த உத்தரவை தொடர்ந்தே, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்கு வந்ததாக கூறப்படுகிறது.அதை உறுதிப்படுத்தும் வகையில், காங்., கொறடா விஜயதாரணியின் பேச்சு அமைந்தது. அவர் சட்டசபையில் பேசுகையில், ''துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, வெளிநடப்பு செய்தோம்.
''கூட்டணி கட்சி என்ற முறையில், தி.மு.க.,நடத்திய, மாதிரி சட்டசபை கூட்டத்தில், ஒரு நாள் பங்கேற்றோம். அதன்பின், மக்கள் கடமையாற்ற, சட்டசபைக்கு வந்து விட்டோம்,'' என்றார்.

இதை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி வரவேற்றனர். அத்துடன், 'தி.மு.க., வினரையும் வரச் சொல்லுங்கள்' என்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''காங்., - எம்.எல்.ஏ.,க்கள், மனம் திருந்தி சட்டசபைக்கு வந்தது போல,'' எனக்கூற, விஜயதாரணி குறுக்கிட்டு, ''மனம் திருந்தி அல்ல, மனமுவந்து,'' என்றார்.அதை பன்னீர்செல்வம் ஏற்று, ''காங்கிரசார் மனமுவந்து வந்தது போல, தி.மு.க.,வினர் வரட்டும்; நாங்கள் தடுக்கவில்லை,'' என்றார்.

ஸ்டாலினை குற்றம் சாட்டி, முதல்வர் பேசிய போது, முஸ்லிம் லீக்

எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்தார். காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அமைதி காத்தனர். காங்., சார்பில் பேசிய, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் எம்.எல்.ஏ., காளிமுத்து பேசும் போது, 'எங்கள் மாவட்ட அமைச்சருக்கு தெரியும்' என கூறியது, அ.தி.மு.க.,வினரையே திகைக்க வைத்தது.

சபாநாயகரும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பேச, தாராளமாக வாய்ப்பு வழங்கினார். காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார், ஆளும் கட்சியினர் பக்கம் வந்து, அமைச்சர்களை சந்தித்து பேசி, தொகுதி பிரச்னைகள் தொடர்பாக, பல மனுக்களை கொடுத்தார். விஜயதாரணியும் முன்வரிசையில் அமர்ந்து, அமைச்சர்களுடன் சகஜமாக உரையாடினார். தி.மு.க.,வினர் இல்லாததால், ஆளும் கட்சியினர் முக்கியத்துவம் அளிப்பது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் உதவியுடன், சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிக்க, ஆளும் கட்சியும் முடிவு செய்துள்ளது.

இது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால், ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டணி கட்சிகள் பங்கேற்பது, அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், சட்டசபை புறக்கணிப்பு என்ற முடிவை, உறுதியாக

தொடரப் போவதாக, தி.மு.க., தெரிவித்துள்ளது.

தி.மு.க., பின்னால் செல்ல முடியாது!


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நான்குநேரி தொகுதி, எம்.எல்.ஏ., வசந்தகுமார் கூறியதாவது:சென்னை, அறிவாலயத்தில் நடந்த, மாதிரி சட்டசபை கூட்டத் தில், நாங்கள் பங்கேற் றோம்.சட்ட சபை யில், தி.மு.க., - காங்கிரஸ் கட்சியை பற்றி, ஆளுங் கட்சியினர் விமர்சித்ததால், அதற்கு பதில் கொடுக்க, நாங்கள் பங்கேற்றோம்.

நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். தொகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேச வேண்டும். எதிர்க்கட்சிகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது. தேசிய அளவில், நாங்கள் பெரிய கட்சி. எங்களின் அடையாளத்தை, நாங்கள் காட்டியாக வேண்டும்.
சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததும், நாங்களும், அவர்களின் பின்னால் செல்ல முடியாது. எங்களின் கருத்துக்களை பேசி, ஆளுங்கட்சியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுவிட்டு தான், வெளிநடப்பு செய்தோம். இப்போதும், நாங்கள் சட்டசபையில் பங்கேற்பது பற்றி, தி.மு.க.,விடம் தெரிவித்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின், மற்றொரு, எம்.எல்.ஏ., கூறியதாவது:காவிரி போராட்டத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி, துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு போராட்டத்தில் கிடைக்கவில்லை. ரஜினி அளித்த பேட்டி, அவரை துணிச்சலான தலைவராக காட்டியுள்ளது.ரஜினிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்ற தகவல், டில்லி காங்., மேலிடத்திடம், மாநில தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தான், சட்டசபை நிகழ்ச்சியில்,காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவை, டில்லி மேலிடம் பிறப்பித்தது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
01-ஜூன்-201823:23:48 IST Report Abuse

Thulasingam Jayaram Pillaiதிமுகவுடன் சேராமல் இந்த நாய்கள் ஒரு நபராவது சட்டசபைக்கு செல்ல இயலுமா? நன்றிகெட்ட ஜென்மங்கள்

Rate this:
Mannan - Madurai,இந்தியா
01-ஜூன்-201822:18:10 IST Report Abuse

Mannanகாவேரி மற்றும் ஸ்டெர்லிட் விஷயத்தில், கடைகளில் கல்லை விட்டெறிந்ததாலும், ஷட்டரை இறக்கியதாலும் பொதுஜனம் செம காண்டுல இருக்கு. நிலைமையை புரிஞ்சுகிட்டு காங்கிரஸ் கூட கூட்டுபொறியல் வச்சுக்கிட்டு, ரஜினியப்பத்தி வெட்டியா வாய விடாம கொஞ்சம் சமத்தா இருந்தா பேர காப்பாத்திக்கலாம்.

Rate this:
எசகுபிசகா - Panchgani,இந்தியா
01-ஜூன்-201821:12:24 IST Report Abuse

எசகுபிசகாதி மு க என்ற விஷ விருக்ஷத்தை முழுவதுமாக சம்ஹாரம் பண்ணிவிட்டு ஜெயலலிதா போயிருக்கலாம். ஸ்டெர்லிட் பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன என்பது மதில் மேல் பூனையாக ஒரு தெளிவில்லாமல் தான் இருக்கிறது . அந்த ஆலை இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை தெளிவாக இதுவரை அவர்கள் தெரிவிக்கவில்லை. ஏனெனில் ஸ்டெர்லிட் ஆலையை பொறுத்த வரை காங்கிரசின் மாநில நிலையை ( மூடவேண்டும் என்ற ) அதன் மத்திய தலைமை ஏற்காது. இந்த விஷயத்தில் ப ஜ க , காங்கிரஸிடையே ஒரே நிலைப்பாடே உள்ளது. ஸ்டெர்லிட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்க்கும் இந்த இரண்டு தேசிய கட்சிகளுக்கும் நல்ல நட்ப்புண்டு. இரண்டு கட்சிகளுக்குமே தேர்தல் சிலவுக்கு பணம் கொடுத்துள்ளார்கள். ஆக ஸ்டெர்லிட் ஆலையை மூடும் படி வற்புறுத்தும் தி மு க வுடன் காங்கிரசு எத்தனை தூரம் பயணிக்கும் . ஏற்கனவே காசில்லாமல் தவிக்கும் ( ) காங்கிரசுக்கு 2019 தேர்தலுக்கு பணம் தேவை. மேலும் தொழிலில் துறைக்கு நண்பனாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியமும் உள்ளது

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X