பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தல் முடிவுகள்:
பா.ஜ.,வுக்கு பின்னடைவு

புதுடில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில், காலியாக இருந்த, 10 சட்டசபை மற்றும் நான்கு லோக்சபா தொகுதிகளில் நடந்த இடை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், மூன்று சட்டசபை தொகுதிகளில், காங்கிரசும், ஆறு தொகுதிகளில் மாநில கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ., ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல்,முடிவுகள், பா.ஜ., பின்னடைவு


பீஹார், ஜார்க்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், மேகாலயா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், காலியாக இருந்த சட்டசபை தொகுதிகளில், சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், காங்கிரஸ், நான்கு இடங்களிலும், மாநில கட்சிகள், ஆறு இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மாநில கட்சிகளில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, இரண்டு இடங்கள்; திரிணமுல் காங்., --- சமாஜ் வாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சி நடக்கும்,

உ. பி., மாநிலம் கைரானா லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளரை எதிர்த்து, ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளர் போட்டியிட்டார். இவரை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்., உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

இதையடுத்து, ஒட்டு மொத்த எதிர்க் கட்சிகளின் ஆதரவை பெற்ற, ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளர், இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையி லான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கும், மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில், பா.ஜ.,வேட்பாளர் வெற்றி பெற்றார். இதே மாநிலத்தில் உள்ள, பந்தாரா - கோண்டியா லோக்சபா இடை தேர்தலில், சரத் பவாரின், தேசியவாத காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடந்த லோக்சபா இடைத் தேர்தலில், பா.ஜ., கூட்டணி கட்சியான, என்.டி.பி.பி., வேட்பாளர் வெற்றி பெற்றுஉள்ளார். இந்த மாநிலத்தில், என்.டி.பி.பி., கட்சியை சேர்ந்த, நெய்ப்பியூ ரியோ முதல்வராக உள்ளார்.சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தல்களில், மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. லோக்சபா இடைத் தேர்தலில் நடந்த, நான்கு தொகுதிகளில், பா.ஜ., ஒரு இடத்திலும், அதன் கூட்டணி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளின் மூலம், பல மாநிலங் களில், தேசிய கட்சிகளை விட, மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. சில மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பொது வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்து உள்ளன. இதே நிலை தொடர்ந்தால், 2019

Advertisement

லோக்சபா தேர்தலில் பெரும் தலைவலியை ஏற்படுத்துமோ என, பா.ஜ., - காங்., தலைவர்கள் கவலையடைந்துள்ளனர்.

முன்னோட்டம் அல்ல!


'இடைத் தேர்தல் முடிவுகள், மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்காது' என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார் போல், நேற்று வெளியான இடைத்தேர்தல் முடிவுகளில் பா.ஜ., தோல்வி யடைந்து மாநில கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே கூறியதாவது: இடைத் தேர்தல் முடிவுகளை மத்திய அரசு மீதான விமர்சன மாக பார்க்க கூடாது. குறிப்பிட்ட தொகுதியில் நிலவும் நிறை, குறைகளை பொறுத்து அந்த தொகுதி வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர். எனவே இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து, மத்திய அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எடை போட முடியாது. இந்த தேர்தல் முடிவுகளை, 2019 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

தாக்கம் எதிரொலிக்கும்!



இடைத்தேர்தல் முடிவுகள், பா.ஜ., அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. உ.பி., மாநிலத்திலும், மத்தியிலும் ஆளும், பா.ஜ.,வினர், அராஜக போக்கை கடைபிடிக்கின்றனர். மக்கள் விரோத சக்திக்கு, வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். 2019 லோக்சபா தேர்தலில், இதன்தாக்கம் எதிரொலிக்கும்.
-அகிலேஷ் யாதவ் உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
02-ஜூன்-201801:30:20 IST Report Abuse

kadhiravan////////இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஏற்கனவே கூறியதாவது: இடைத் தேர்தல் முடிவுகளை மத்திய அரசு மீதான விமர்சன மாக பார்க்க கூடாது. குறிப்பிட்ட தொகுதியில் நிலவும் நிறை, குறைகளை பொறுத்து அந்த தொகுதி வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர். எனவே இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து, மத்திய அரசு மீதான மக்கள் நம்பிக்கையை எடை போட முடியாது. இந்த தேர்தல் முடிவுகளை, 2019 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்./////// ச்சி..,இந்தப்பழம் புளிக்கும் புரிகிறது அமிட்ஷா உங்களது பயம்.., இந்த முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வந்திருந்தால் உங்கள் அலப்பறை தாங்க முடியாது. என்ன இருந்தாலும்..,EVM இல் கோல்மால் பண்ணினாலும்..,இனி எதிர்கட்சிகளை வெல்வது கடினம்தான்...,

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-ஜூன்-201820:08:06 IST Report Abuse

Pugazh Vசாதாரணமாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் , ஆனால் இப்போது தோல்வி.

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
01-ஜூன்-201815:04:10 IST Report Abuse

Sridhar Rengarajanஇதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. இடைத்தேர்தல் என்று வரும்போது பாஜகவுக்கு எதிராக ஒரு அணியாக திரண்டு எதிர்க்கிறார்கள். உதாரணத்துக்கு உபி யை எடுத்துக்கொண்டால் அங்கு பாஜகவை எதிர்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், மற்றும் நம்ம சீமான், வேல்முருகன், தினகரன், திருமா மாதிரி துண்டுதுக்கடா கட்சிகள் கூட ஓரணியாக திரண்டு வெற்றி பெரும். ஆனால் பொது தேர்தலில் அது அப்படியே எதிர்மறையாக திரும்பும். பாஜகவின் யோகி ஆதித்யாவை எதிர்த்து முலாயம் சிங் யாதவையோ அல்லது மாயாவதியையோ அல்லது காங்கிரஸோ முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் அதோடு ஆட்டம் க்ளோஸ். அதன்பிறகு யோகி ஆதித்யாவை முதல்வர் ஆக்கும் பொறுப்பை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இஸ்லாமியர்களோ கிருஸ்தவர்களோ பாஜக வுக்கு எந்தக்காலத்திலும் வாக்களிப்பதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே வாக்களிக்கும் பாஜக வேற மாதிரி. 1988 லிருந்து அதன் வாக்கு சதவிகிதம் ஏறிக்கொண்டே வருகிறது, அது ஒருக்காலும் குறையாது. மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் காங்கிரஸ், கட்சி எக்ஸ்பைரி ஆகிவிட்டது. இனி அது எழ வாய்ப்பே இல்லை. கம்யூனிஸ்ட் கதிதான் காங்கிரசுக்கும்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X