வரதட்சணையை அறியும் கால்குலேட்டருக்கு தடை?| Dinamalar

வரதட்சணையை அறியும் கால்குலேட்டருக்கு தடை?

Added : ஜூன் 01, 2018 | கருத்துகள் (23)
Share
  வரதட்சணை கால்குலேட்டர், அமைச்சர் மேனகா ,அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வரதட்சணை கால்குலேட்டர் இணையதளம் , வரதட்சணை, கால்குலேட்டர், மேனகா கடிதம், 
Dowry Calculator, Minister Maneka, Manekha Letter, Minister Ravi Shankar Prasad, Dowry Calculator website, Dowry, Calculator,

புதுடில்லி மணமகனின் தகுதிக்கேற்ப தர வேண்டிய வரதட்சணை குறித்து அறிய, 'வரதட்சணை கால்குலேட்டர்' என்ற பெயரில் துவங்கப்பட்ட இணையதளத்துக்கு தடை விதிக்கும்படி, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா கடிதம் எழுதியுள்ளார்.சமீபத்தில், வரதட்சணை கால்குலேட்டர் என்ற இணையதளத்தில், மணமகனின் வயது, ஜாதி, கல்வித் தகுதி, தொழில், வருமானம், நிறம், உயரம் மற்றும் மணமகனின் தந்தையின் தொழில் குறித்த விபரங்களை பதிவு செய்தால், பெண் வீட்டார் தர வேண்டிய வரதட்சணை தொகையை தெரிந்து கொள்ளலாம் என்ற தகவல் பரவியது.இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மேனகாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்துக்கு, மேனகா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:நம் நாட்டில் வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம். வரதட்சணை கால்குலேட்டர் என்ற பெயரில், சட்டவிரோதமாக புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள செயல்பாடு தொடர்ந்தால், வரதட்சணை வாங்குவதை ஊக்குவிப்பது போலாகும்.எனவே, இந்த இணைய தளத்துக்கு உடனடியாக தடை விதித்து, அதை உருவாக்கியவர்கள் மற்றும் செயல்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X