பொது செய்தி

தமிழ்நாடு

வெயிலின் தாக்கம் நாளை வரை நீடிக்கும்

Added : ஜூன் 01, 2018 | கருத்துகள் (2)
Advertisement
வெயில்,தாக்கம்,நீடிக்கும்

சென்னை : 'சென்னை உள்ளிட்ட, வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில், நாளை வரை வெயிலின் தீவிரம் தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கோடை வெயிலின் தாக்கம், தென் மாவட்டங்களில் குறைந்திருந்தாலும், மத்திய உள் மாவட்டங்களிலும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும், தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில், ஒரு வாரத்திற்கு முன் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, படிப்படியாக நகர்ந்து, வடகிழக்கு மாவட்டங்களை நோக்கிச் சென்றது. அதனால், வங்கக்கடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால், ஈரப்பதம் மிகுந்த காற்று வீசுவது குறைந்து, நிலப்பகுதியின் வெப்பம் அதிகரித்துள்ளது.

எனவே, மூன்று நாட்களாக, சென்னையில் வெயில் வாட்டுகிறது. 42 டிகிரி செல்ஷியசிற்கு மேல், வெயில் கொளுத்துவதால் பகலில், பொதுமக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல், அவதிக்குள்ளாகி உள்ளனர். நேற்றும், வெயிலின் கடுமை குறையவில்லை. சென்னை நுங்கம்பாக்கத்தில், 38; விமான நிலையத்தில், 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவானது.

இந்நிலையில்,வெயிலின் தாக்கம், இன்னும் இரண்டு நாட்களுக்கு, அதாவது, நாளை வரை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. குறிப்பாக, வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின், வடக்கு கடலோர பகுதிகளில், நாளை முதல் இடியுடன் கூடிய திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
01-ஜூன்-201807:52:53 IST Report Abuse
Srinivasan Kannaiya பஞ்சபூதங்களை பொறுத்தவரை அவற்றின் செயல்களை மனிதன் அறுதியிட்டு சொல்லமுடியாது..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-ஜூன்-201807:07:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெயிலின் தாக்கம் நாளை வரை நீடிக்கும், அப்படியே பழகி போயிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X