பதிவு செய்த நாள் :
இந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர் : இந்தியா - சிங்கப்பூர் இடையே, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படை தளவாடங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இரு தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது உட்பட, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா,சிங்கப்பூர்,8 ஒப்பந்தங்கள்,கையெழுத்து,பிரதமர்,நரேந்திர மோடி,மோடி


பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர், லீ செய்ன் லுாங் உடன், நேற்று பேச்சு நடத்தினர். இரு நாட்டு தலைவர்களும், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.

பின், இந்த சந்திப்பு குறித்து, பத்திரிகையாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா - சிங்கப்பூர் இடையேயான உறவு, பல காலமாக வலுவாக வளர்ந்து நிற்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.

ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேச உள்ளனர். இந்த ஒப்பந்தம், 2004ல் கையெழுத்தானது. அதன் பின், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில், முதலீடு செய்துள்ள நாடுகளில், சிங்கப்பூர் இரண்டாம் இடம் வகிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே, ராணுவம் மற்றும் கடற்படை தளவாடங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளோம். இணையம் வழியே தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'இணைந்து செயல்பட்டால் சிறப்பான எதிர்காலம்' :


''இந்தியா - சீனா நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட்டால், ஆசியா மற்றும் உலக நாடுகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அரசு முறை பயணமாக, சிங்கப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

Advertisement

இந்தியாவும், சீனாவும், பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதிலும், எல்லையில் அமைதியை கடைபிடிப்பதிலும், பக்குவமாக செயல்படுகின்றன. இரு நாடுகளும் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட்டால், ஆசியா மற்றும் உலக நாடுகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.

இந்திய - பசிபிக் பிராந்தியம், தனிப்பட்ட நபர்களின் பகுதி இல்லை. அங்கு அமைதி நிலவவே, இந்தியா விரும்புகிறது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், எந்த பிரச்னை ஏற்பட்டாலும், பேச்சு மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. இந்த பகுதியில், பொதுவான விதிகள் உருவாக்கப்பட வேண்டும். வெளிப்படையான மற்றும் நிலையான சர்வதேச வர்த்தகத்தை இந்தியா விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
02-ஜூன்-201822:23:42 IST Report Abuse

Sheriஎப்படியோ சிங்கப்பூர் குட்டி சுவர் ஆகாமல் இருந்தால் போதும்

Rate this:
mohankumar - Trichy,இந்தியா
02-ஜூன்-201821:27:06 IST Report Abuse

mohankumarமோடி அங்கே போயாகிறார் இங்கே போயாகிறார் என் கூவுவார்களே வயிற்றெரிச்சல் தான் . அவர் மேலே என்ன ஊழல் குறையும் சொல்ல முடியாததால் இதெல்லாம் இந்தோனேஷியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி... எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம். இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியா வின் கஸ்டடியில் வர இருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியாசீனா இடையே நடைபெ ற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் என்றே இதை சொல்லலாம். மூன்று புறமும் கடல் சூழ்ந்துள்ள இந்தியாவுக்கு கடல் பாதுகாப்பை அளிக்கும் ஒரு மிகப்பெரிய ராணுவ டிவிசனை இந்திய ராணுவம் அந்தமான் தீவுகளில்தான் வைத்துள்ளது. இது எப்பொழுது உருவானது என்றால் 2001 வாஜ்பாய் ஆட்சியின் பொழுது உருவானது சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அப்போதைய பிஜேபி அரசு இந்தியபெருங்கட லி ல் உள்ள அந்தமான் தீவுகளில் ராணுவ டிவிசனை உருவாக்கியது. இங்கு விமானப்படை தரைப்படை கடற்படை என்று முப்படைகளும் இருக்கிறது.குறைந்தது 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அந்தமானில் உள்ள ராணுவ டிவிசனில் இருக்கிறார்கள். இவர்களுடைய முக்கிய நோக்கமே தென் சீனக்கடலில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெருங்கடலில் நுழையும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதுதான். அந்தமானில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்தியாவை ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.ஏனென்றால் 2004 டிசம்பரில் சுனாமி இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவை தாக்கிய பொழுது அதில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய பகுதி அந்தமான் தான்..அப்பொழுது வெளிநாடுகள் எல் லாம் அந்தமானை நோக்கி உதவ ஓடி வந்தன. ஆனால் இந்தியாவோ பதறிக் கொண்டு நோ தேங்க்ஸ் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இந்தியா ஜகா வாங்கியது..இதை வைத்து உலக மீடியாக்கள் இந்தியா அந்தமானில் அணு ஆயுதங்களுடன் கூடிய மிகப் பெரிய படைத் தளம் வைத்துள்ளது.இது உலகின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு அந்தமானில் யாரையும் நுழைய விடவில்லை என்று எழுதித் தள்ளின. எது எப்படியோ இருந்து விட்டு போகட்டும்.இந்தியாவின் மிகப் பெரிய அணு ஆயுதங்களுடன் கூடிய படைப்பிரிவு அந்தமானில் உள்ளது.உருவாக்கியது நம்முடைய வாஜ்பாய் அரசு என்கிற அளவில் நாம் மார் தட்டிக்கொள்வோம். இந்தியாவின் அந்தமான் படைப்பிரிவை வாஜ்பாய் அரசு பெரியளவில் உருவாக்கியதற்கு முக்கிய காரணமே 1994 ல் சீனா கோகோ தீவுகளை லீசுக்கு எடுதத்தால் தான் உண்டானது. அந்தமானுக்கு வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொ லைவில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான கோகோ தீவை சீனா தன் கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அங்கு தன்னுடைய கடற்படை கப்பல்களை வைத்து இருக்கிறது.இந்த கோகோ தீவு இந்திய பாதுகாப்புக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்த ல் உள்ள பகுதியாகும். ஏனெனில் வங்காள விரிகுடா வில் இருக்கும் இந்த கோகோ தீவில் இருந்து இந்தி யாவின் கிழக்கு துறைமுகங்களான சென்னை விசாகப்பட்டினம் கொல்கொத்தா துறைமுகங்களை சீன கடறபடையினால் தாக்க முடியும். இதற்கு பதிலடியாகத்தான் வாஜ்பாய் அரசு 2001 ல் அந்தமானில் மிகப்பெரிய ராணுவ கேந்திரத்தை அமைத்தது.. பதிலுக்கு சீனாவும் கோகோ தீவில் நிறைய உளவு பார்க்கும் கண்காணிப்பு மையங்க ளை நிறுவி .இந்திய கப்பல் படையின் நடமாட்டத் தை கவனித்து வரு கிறது, கோகோ தீவில் இருந்து சீனா நீர்மூழ்கிகளை இந்திய கடல் பகுதிக்குள் அனு ப்பி வேவு பார்த்து வருகிறது. இந்த கோகோ தீவை மியான்மருக்கு கொடுத்ததே நேருதான் என்று வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கர்ஜிக்க காங்கிரஸ் கூடாரம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடம் 1998 ல் மல்லுக்கு நின்றதை மறந்து விடக் கூடாது.உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ல் சுதந்திரம் வாங்கிய பர்மாவுக்கு நேரு நினைத்திருந்தால் கோகோ தீவுகளை பர்மாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து இருக்கலாம் என்பதே உண்மையாகும். 2001 ல் பிஜேபி ஆட்சியில் இந்தியா அந்தமானில் மிகப் பெரிய ராணுவ பிரிவை உருவாக்கியது என்றால் 2011 ல் காங்கிரஸ் ஆட்சியில் கோகோ தீவில் சீனா விமான தளத்தை உருவாக்கி அந்தமானில் உள்ள இந்திய ராணுவ டிவிசனுக்கு இதோ பாருங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம் என்று கெத்து காட்டி வந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 2014 ல் மே இறுதியில் மோடி பதவி ஏற்றார். ஜூன் ஆரம்பத்தில் அந்தமானுக்கும் கோகோ தீவுக்கும் இடையில் இருக்கும் இந்திய தீவான நார்கண்டம் தீவில் இந்தியா மிகப் பெரிய ராடார் ஸ்டேஷனை அமைக்க மோடி அரசு உத்தரவிட்டது என்றால் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் மோடி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்படி கோகோ தீவில் இருந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனா கடற்படைக்கு செக் வைக்க வேண்டுமென்றால் அந்தமானுக்கு முன்பே சீன கப்பல்களை இந்தியா கண்காணிக்க வேண்டும். இதற்கு மோடி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்தோனேசியாவின் ஜபாங் துறைமுகம்.இந்த துறைமுகம் அந்தமானுக்கு தென் கிழக்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது. இது தாங்க ஜபாங் துறைமுகத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயின்ட்..சீனாவின் தென் சீனக்கடலி ல் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவின் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைந்து சீனாவில் உற்பத்தியாகும் 80% பொரு ட்களை மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல் பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் போரின் பொழுது சீனாவின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் இந்தியா செய்யும் முதல் காரியம் என்னவென்றால் இந்திய ப்.பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் சீன கப்பல்களைதான் குறி வைக்கும். அதுவும் மலாக்கா நீரிணைப்பைதான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபிக் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கிலோ மீட்டர் நீளமான இந்த மலாக்கா நீரிணைப்பிற்கு இந்த பெயர் வரக் காரணமானவர் யார் தெரியுமா?. மகாராஜா பரமேஸ்வரா என்கிற சிங்கப்பூரை ஆண்ட ஒரு இந்து மன்னர்தான் காரணம். இந்த நீரிணைப்புதான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல்லப் படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங் கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த மலாக்கா வழியே ஆண்டுதோறும் 80,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் மலாக்கா நீரினைப்பின் வழியாக வந்து போய் கொண்டு இருக்கிறது. மலாக்கா நீரிணை வழியாக செல்லும் கப்பல் களை இது எந்த நாட்டுக்கு போகிறது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் அதில் பாதிக்கும் மேல் சீனாவின் பெயரை சொல்லிக் கொண்டே இந்து மஹா சமுத்திரத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.ஆக இந்திய பெருங்கடல் இந்தியாவை விட சீனாவைத்தான் அதிகளவில் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கியமான இடம்.40 கிலோ மீட்டர் அகலமே கொண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீனப்போர்கப் பல்கள் இந்தியப் பெருங்கடலி ல் நுழையும் முன்பே ஜபாங் துறைமுகத்தில் காத்திருக்கும் இந்திய வான் படை கடற்படைகளால் கண்காணிக்கப்படும். இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரிணைப்பின் வழியாகவும் இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் போர்க் கப்பல்கள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரிணைப்புக்கு நேர் கீழே இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது. ஆனால் அப்படி வந்தாலும் ஜபாங் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை சீன கடற்படையை எதிர் கொள்ள முடியும்.அந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான துறைமுகம் தான் ஜபாங்.அதாவது இந்தியாவை பாதுகாக்கும் அந்தமான் ராணுவ டிவிசனையே பாதுக்காக்கும் இடத்தில் இருக்கிறது ஜபாங்.துறைமுகம். பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணத்தில் ஜபாங் உடன்படிக்கையில் துறைமுக மேம்பாடு மிலிட்டரி பேஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹாஸ்பிட்டல் என்று இந்தியாவின் பங்களிப்பு இறுதியானதும் சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் மோடியை திட்டி எழுதியுள்ளது. நாங்கள் இது வரை நேர்வழியிலேயே செல்கிறோம். ஆனால் இந்தியா எதிர் திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இது தொடருமானால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று வழக்கம் போல எச்சரித்து உள்ளது. இந்தியாவின் மேற்கு கடல் எல்லையான அரபி கடலை கண்காணிக்க ஈரானின் சாபாஹர் துறைமுகத் தையும் ஓமனின் டம் துறைமுகத்தையும் இந்தியாவின் கஸ்டடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி இப்பொழுது கிழக்கு கடல் எல்லையையும் வளைக்கும் விதமாக இந்தோனேஷியாவின் ஜபாங் துறைமுகத்தை இந்தியாவின் நேரடி கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டார். இதுவரை இந்தியாவோடு பெரிய அளவில் எந்த ஒப்புந்தமும் செய்து கொள்ளாமல் இருந்த இந்தோனேசி யா மோடியின் முதல் விசிட்டிலேயே சரண்டராகி ஒரு துறைமுகத்தையே இந்தியாவுக்கு மிலிட்டரி நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக் கொள்ள அனுமதி அளித்து இந்தோனேசியா என்கிற தன்னுடைய பெயரை இந்தியா நேஷன் ஆக்கி கொண்டது.

Rate this:
aniyayathuku nallavan - madurai,இந்தியா
02-ஜூன்-201817:34:35 IST Report Abuse

aniyayathuku nallavanCan check on Petrol price -following countries have higher petrol price than India But they never blame their government .... All prices in INR (Pl google if u have doubt PLR) China 80.90 Morocco 81.19 Canada 81.68 Senegal 83.84 Madagascar 84.00 Bahamas 85.73 Cuba 86.15 Jamaica 86.86 Bulgaria 87.26 Chile 88.63 Japan 89.31 Turkey 91.95 Poland 94.36 Zimbabwe 94.57 Yemen 95.01 Romania 98.47 Hungary 99.27 South Korea 100.56 Jordan 100.68 Czech Rep 100.75 Serbia 101.57 Austria 101.59 Mauritius 102.85 Cyprus 103.76 Spain 106.16 Slovakia 109.77 Uruguay 110.06 New Zealand 110.90 Switzerland 110.98 Singapore 111.62 Ireland 114.58 Germany 115.46 UK 116.34 Belgium 118.83 Finland 124.44 France 125.25 Sweden 126.47 Portugal 126.53 Israel 127.43 Italy 128.77 Greece 130.70 Monaco 131.74 Denmark 131.99 Netherlands 133.50 Norway 139.85 Hong Kong 144.23 Iceland 144.52 Modi effect all around the world??? .... Stop blaming....

Rate this:
S.Kumar - chennai,இந்தியா
03-ஜூன்-201813:13:02 IST Report Abuse

S.Kumarஹலோ நல்லவரே நீங்க சொன்ன அந்த நாடுகளின் பண மதிப்பு என்ன ? அவர்களின் வருமானம் என்ன ? அதையும் கொஞ்சம் பார்த்துட்டு யோசிச்சு கருத்தை போடுங்கள் ...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X