பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கறுப்பு பணம் பற்றி தகவல் தந்தால் ரூ.5 கோடி பரிசு

புதுடில்லி : 'கறுப்பு பணம் குறித்து தகவல் அளிப்போருக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்பு பணம்,black money,தகவல் தந்தால்,ரூ.5 கோடி,பரிசு,

'பினாமி சொத்துகள் பற்றி விபரம் அளிப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் வரை

பரிசளிக்கப்படும்' எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன்மானம்:


கறுப்பு பணத்தை ஒழிக்கவும், பண பதுக்கலில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களின் சொத்துகளை முடக்கவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 'பினாமி சொத்து வைத்திருப்போர் குறித்த தகவல் அளிப்போருக்கு, ஒரு கோடி ரூபாய்

Advertisement

வரை சன்மானம் வழங்கப்படும்' என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

பினாமிகளின் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்தோர், அவர்கள் குவித்த சொத்துகள் உள்ளிட்ட விபரங்களை, வருமான வரித்துறை இணை அல்லது கூடுதல் கமிஷனர்களிடம் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு :


அதே போல், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்கள், வெளிநாடுகளில் வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகள் பற்றிய தகவல் அளிப்போருக்கு, ஐந்து கோடி ரூபாய் வரை சன்மானம் வழங்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-201822:15:59 IST Report Abuse

Pugazh V@elakkumanan - Naifaru, அட..தீர்ப்பெல்லாம் எழுதறீங்க எந்த கோர்ட்டில் ஜட்ஜா இருக்கீங்க? எந்த லா காலேஜில் படிச்சீங்க. திருட்டு குடும்பம் னு ரெண்டு மாமாங்கமா.... பிதற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்....தக்காளி ஒரு ஒரே ஒரு ஆதாரம் கூட எவர்கிட்டயுமா இல்ல? இருக்காது...ஏனெனில் இதெல்லாமே பொய்க் குற்றச்சாட்டு தானே

Rate this:
Dhanakumar - ca,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-201820:35:30 IST Report Abuse

Dhanakumarஇப்போது பட்டுக்கோட்டையார் இருந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார் திட்டம் போடு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டமும் கூட சேர்ந்தே திருடுது திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Rate this:
JIGMONEY - Chennai,இந்தியா
02-ஜூன்-201817:29:40 IST Report Abuse

JIGMONEYYesterday i saw a news in satelite TV that govt offering 50 lacs for black money information. But now it is said 5 crore. Which is true?

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X