அம்பலம்! : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்காக பழிக்குப் பழி : சதி வேலை செய்ய, 'போர்வையாளர்'கள் திட்டம் : உளவுத்துறை ரகசிய தகவலால் போலீசார், 'அலெர்ட்!' Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அம்பலம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்காக பழிக்குப் பழி
சதி வேலை செய்ய, 'போர்வையாளர்'கள் திட்டம்
உளவுத்துறை ரகசிய தகவலால் போலீசார், 'அலெர்ட்!'

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்க, சதித்திட்டம் தீட்டியுள்ள தகவல் அம்பலமாகி உள்ளது.

தூத்துக்குடி, துப்பாக்கிச்சூடு

'ஸ்டெர்லைட்' எதிர்ப்பு போராட்டத்தில், வன்முறையை துாண்டி, கலவரத்தை ஏற்படுத்திய, 'போர்வையாளர்'கள், இந்த சதி திட்டத்தின் பின்னணியில் இருக்கும், அதிர்ச்சி தகவலும், உளவுத்துறை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், போலீசார், உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக போராடியவர்களுடன், சமூக விரோதிகள் ஊடுருவி, வெறியாட்டத்தில் ஈடுபட்டதால், மே, 22ல், போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பழி வாங்க, பயங்கர சதி திட்டம் தீட்டி இருப்பதாக, உளவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சதி திட்டம் :

இது குறித்து, மே, 25ல், சென்னை, டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள உயர் போலீஸ்


அதிகாரிகளுக்கு, ரகசிய அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், குற்ற புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, எஸ்.பி., சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது பற்றி, நெல்லை, டி.ஐ.ஜி., மற்றும் துாத்துக்குடி, எஸ்.பி.,க்கு, அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, குரூஸ்புரத்தைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் மற்றும் சுனாமி நகரைச் சேர்ந்த, சகோதரர்கள் இருவர் ஏற்பாட்டில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பழி வாங்க, பயங்கர சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை மாவட்டம், கூத்தங்குழி, துாத்துக்குடி மாவட்டம், பாத்திமா நகர், திரேஸ்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 60 மீனவர்களுடன், தாளமுத்து நகர், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மொட்டை கோபுரம் கடற்பகுதியில் ஒன்று கூடி, போலீசார் மீது, வெடிகுண்டு வீச திட்டமிட்டுள்ளனர். அதற்காக, கூத்தங்குழியிலிருந்து, நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிவந்துள்ளனர். குரூஸ்புரம் காவலர் குடியிருப்பு, கடற்கரை காவலர் குடியிருப்பு, எஸ்.பி., மற்றும் கலெக்டர் முகாம் அலுவலகங்கள், வடக்கு மற்றும் சென்ட்ரல், தாளமுத்து நகர், தெர்மல் நகர், முத்தையாபுரம் காவல் நிலையங்கள் மீது, வெடிகுண்டுகள் வீச இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Advertisement

அதேபோல், வெளிமாவட்டங்களில் இருந்து, பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள போலீசார், தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபங்களை குறிவைத்தும், அவர்கள் தாக்க இருப்பது தெரிய வருவதால், அதற்கு ஏற்ப, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு :

உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, துாத்துக்குடி போராட்டத்தின் பின்னணியில் உள்ள, 'போர்வையாளர்'கள் மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. பழிவாங்கும் சதிச் செயலை முறியடிக்க, துாத்துக்குடியில் மட்டுமின்றி, அதன் அருகில் உள்ள மாவட்டங்களிலும், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.சதித் திட்டம் தீட்டியுள்ள, போர்வையாளர்களை கண்டறிய, மாநிலம் முழுவதும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
05-ஜூன்-201804:33:47 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ஆங்கிலேயன் ஆண்டபோது நடந்ததுபோல் நடக்குதுங்க இந்த பழிவாங்கல் படலம் தூண்டிய மஹாபாவி சுகமா சோறு துண்ணுண்டுருக்கானுக அப்பாவிகளை என்னாத்துக்கு கொல்லவேண்டும் ஆல்ரெடி பலரை சுட்டானுகளே போராளியா வெறி அடங்கலியா ஏண்டா இப்படி ரத்தக்காட்டேரியா திருயுறீங்க ஈவிரவா நன்னா இருக்கவேண்டும் அப்பாவிகள் சாகவேண்டுமா

Rate this:
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூன்-201800:54:48 IST Report Abuse

.Dr.A.Josephஇந்த செய்தியை படிக்கும் ஒவ்வொரு போலீஸ்காரனும் தினம் தினம் பயந்து சாவான். நிறைந்த அன்புடன்............. டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்

Rate this:
amuthan - karaikudi,இந்தியா
03-ஜூன்-201821:31:01 IST Report Abuse

amuthanஎல்லா இடங்களிலும் ரகசிய சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவர்களது பெற்றோர் மீது வழக்கு போட வேண்டும்.போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் எல்லோரும் அவர்களது ID புரூப் காண்பிக்க வேண்டும்.பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் போராட்ட காரர்களே பொறுப்பு.தேசத்திற்கு எதிராக கோசம் எழுப்ப கூடாது.என்கின்ற வகையில் நிபந்தனைகள் விதிக்கலாம்...

Rate this:
மேலும் 113 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X