புல்லட் ரயில் திட்ட பணிகளில்... தொய்வு! : நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் Dinamalar
பதிவு செய்த நாள் :
தொய்வு!
புல்லட் ரயில் திட்ட பணிகளில்...
நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்

பால்கர்: ஆமதாபாத் - மும்பை, புல்லட் ரயில் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், அதற்காக நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்ட பணிகளில்... தொய்வு! : நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த, 73 கிராமங்களை சேர்ந்த, பழங்குடியின மக்கள், தங்கள் நிலங்களை ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட, தால் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், ஆமதாபாத் - மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை இடையே, 508 கி.மீ., நீள வழித்தடத்தில், புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியா - ஜப்பான் நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. புல்லட் ரயில் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், 2022ல் பணிகளை முடிக்கும் வகையில், ரயில்வே அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த திட்டத்திற்காக, குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒப்புக்கொண்டாலும், அதை ஏற்க, கிராமவாசிகள் மறுப்பு

எதிர்ப்பு :

இதற்கிடையே, மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள, பழங்குடியினத்தை சேர்ந்த, 73 கிராம மக்கள், புல்லட் ரயில் திட்டத்திற்காக, தங்கள் நிலத்தை அரசுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால், அந்த மக்களுடன், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். சந்தை விலையை விட, ஐந்து மடங்கு அதிக தொகை அளிக்க, அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க, அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.பழங்குடியினர் எப்படியும், 50 கிராம மக்களை சம்மதிக்க வைத்துவிடலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ள போதும், மீதமுள்ள, 23 கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், புல்லட் ரயில் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.இது தொடர்பாக, கள ஆய்வு நடத்த சென்ற ரயில்வே அதிகாரிகளை, கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தாங்கள் வசிக்கும், விவசாயம் செய்யும் நிலத்தை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என, ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் திடீர் எதிர்ப்பால், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக பணம் தருவதாக கூறியும், நிலத்தை ஒப்படைக்க, கிராம மக்கள் மறுப்பதால், சிக்கல் நீடிக்கிறது.

தாமதம் :

பால்கர் மாவட்டத்தை சேர்ந்த, கிராமமக்களின் திடீர் போராட்டத்தால், பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் முடிப்பதில், தாமதம் ஏற்படலாம் என, அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Advertisement

ரூ.98 ஆயிரம் கோடி! :

மொத்தம், 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பு, ஆண்டுக்கு, 0.1 சதவீத வட்டியில், 88 ஆயிரம் ரூபாய் கடன் உதவி செய்கிறது.கடன் தொகை வழங்கப்பட்டு, 15 ஆண்டு கழித்தே, கடனை திரும்ப செலுத்துவதற்கான முதல் தவணை துவங்கும். 50 ஆண்டுகளில், இந்த தொகையை திரும்ப செலுத்த, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

508 கி.மீ., துாரம்! :

மஹாராஷ்டிரா மாநிலத்தில், புல்லட் ரயில், மிக நீண்ட துாரம் பயணிக்கும், பால்கர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 508 கி.மீ., நீள ரயில் பாதையில், 12 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. மஹாராஷ்டிராவில், 154 கி.மீ., துாரத்தை கடந்து, புல்லட் ரயில், குஜராத்திற்கு நுழைகிறது. இதனால், மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளில், நிலம் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில், 38 கி.மீ., துாரமும், பால்கர் மாவட்டத்தில், 110 கி.மீ., துாரமும் புல்லட் ரயில் பயணிக்கிறது.

Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
03-ஜூன்-201821:32:43 IST Report Abuse

Poongavoor RaghupathyWhich is more important for our Nation. BULLET TRAIN OR FARMERS LIFE. This Bullet train proposal is like cats copying Tiger for their skin lines. Let us not forget India is a poor Agricultural Country. If The wheels of ploughing stops the Bullet train wheels can not run. Already farmers are suffering and the Govt wants Bullet trains at the cost of Farmers daily bread. For rich people there many flights and this bullet trains are not a must to travel from Ahmedabad to Mumbai.. Let us copy developed Countries for the welfare of Citizens and not ask citizens to sacrifice their livelihood. LET GOD SAVE INDIA AND ITS PEOPLE.

Rate this:
rmr - chennai,இந்தியா
03-ஜூன்-201821:02:49 IST Report Abuse

rmrமுதல இந்த மோடி அரசு இருக்கும் ரயில்களை ஒழுங்கா 150 to 200 km வேகத்தில் ஓடுவதற்கு செய்யலாம் அதாற்கு பெரிய செலவு ஆகாது ரயில் நிலையத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம் , டிக்கெட் இல்லாம பயனும் செய்யும் வட இந்தியர்களை கட்டுப்படுத்த வேண்டும் நம்மிடம் இருக்கும் ரயில்வேயை முதலில் மேம்படுத்த வேண்டும் . நதி நீரை இணைத்தால் இந்தியாவே பயன் பெரும் அதை பற்றி ஒரு திட்டமும் இல்லை , வெறும் விளம்பர அரசு

Rate this:
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
03-ஜூன்-201820:15:15 IST Report Abuse

Welcome Back to 1900ADif u all have time please visit the ongoing new L & T bye pass road from kazhakottam to karode in kerala and from there to kottaram in kk dist.if not possible google map search it.completely shaved the evergreen mountains.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X