பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய மின் திட்டம் பற்றி டில்லியில் 6ல் ஆலோசனை

தமிழக மின் திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க, 6ம் தேதி, டில்லி வரும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு, மத்திய மின்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய மின் திட்டம் பற்றி  டில்லியில் 6ல் ஆலோசனை


மத்திய அரசு, 'தீன்தயாள் உபாத்யாயா, ஒருங்கிணைந்த மின் மேம்பாடு' என்ற, இரு மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தீன்தயாள் திட்டத்தில்

கிராமங்களிலும், ஒருங்கிணைந்த திட்டத்தில் நகரங்களிலும்,தடையில்லாமல், சீராக மின்சாரம் சப்ளை செய்ய, புதிய துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இருதிட்டங்களையும், தமிழகத்தில் மேற்கொள்ள, மத்திய அரசு, 2,485 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பணிகளின் நிலை குறித்து தெரிவிக்க, டில்லிக்கு வரும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு, மத்திய மின் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், மத்திய மின் திட்ட பணிகளை, டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய மின் துறை செயலர் தலைமையில், 6ம் தேதி, அனைத்து மாநில மின் வாரிய தலைவர்கள் பங்கேற்கும், மின் திட்டங்கள் கண்காணிப்பு கூட்டம்

Advertisement

நடக்கிறது.அதில் பங்கேற்று, இதுவரை ஒப்பந்தம் வழங்கியுள்ள பணிகள், அவற்றின் நிலை, 'டெண்டர்' கோர உள்ள பணிகள் என, அனைத்து விபரங்களும் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-ஜூன்-201808:55:16 IST Report Abuse

Srinivasan Kannaiyaசீராக மின்சாரம் சப்ளை செய்ய, புதிய துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்... மின் உற்பத்தி செய்யாமல் வெறும் கையை முழம் போட்டு என்ன செய்வது...

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
03-ஜூன்-201807:13:34 IST Report Abuse

ramasamy naickenஇதெற்கெல்லாம் பயப்படுபவரா தங்க"மணி". நாற்பது சத விகித கட்டிற்கு பிறகு என்னத்தை உருப்படியாக செலவழிக்க முடியும்.

Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
03-ஜூன்-201804:33:12 IST Report Abuse

Palanisamy Sekarஇந்த டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நிறைந்துகாணப்படும்..இதனை தெரிந்துகொண்டுதான் ஆளும் கூனர்கள் அரசை பீ ஜே பி மின் துறை அழைத்துள்ளது. கூப்பிட்டு மிரட்டினால்தான் எதையும் அதிகமாக சாதிக்க முடியும் என்பதை அறிந்துகொண்டு டெல்லிக்கே அழைத்துள்ளார்கள்.தரையை தொடுகின்ற அளவுக்கு கூழை கும்பிடுபோட்டு செல்வார்கள். மின்சார கட்டணத்தை உயர்த்த சொல்வார்கள்..அப்படியே எஜமான் என்று நிமிர்ந்து பார்க்காமலேயே தலையாட்டி வருவார்கள். மறுப்பு பேசினால்...ஆக விரைவிலேயே எதிர்பாருங்கள் மின் உயர்வு கட்டண செய்தியை..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X