சினிமா...சிபா...வைஷாலி

Added : ஜூன் 03, 2018 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆசியாவின் முதல் பெண் 'டிவி' ஒளிப்பதிவாளர், நம்ம ஊரு பொண்ணு வைஷாலி… சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர். ஆனா படிப்பு வாசனையெல்லாம் சிங்கப்பூரில். பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ படித்து விட்டு, 1996ல் டிவி துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரோட 'பில்லா', 'உன்னை போல் ஒருவன்' படங்கள், ஒளிப்பதிவாளர் பவுசியாவோட 'இவன்' படத்தில்
சினிமா...சிபா...வைஷாலி

ஆசியாவின் முதல் பெண் 'டிவி' ஒளிப்பதிவாளர், நம்ம ஊரு பொண்ணு வைஷாலி… சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர். ஆனா படிப்பு வாசனையெல்லாம் சிங்கப்பூரில். பிலிம் டெக்னாலஜி டிப்ளமோ படித்து விட்டு, 1996ல் டிவி துறையில் தடம் பதிக்க ஆரம்பித்தார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரோட 'பில்லா', 'உன்னை போல் ஒருவன்' படங்கள், ஒளிப்பதிவாளர் பவுசியாவோட 'இவன்' படத்தில் கேமரா வுமனாக இருந்தவர். 'இஷ்க்தினோ' என்ற இந்திபடத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வைஷாலி, பெயரிடப்படாத தமிழ் படத்தில் முதல் முறையாக, ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தமிழ் சினிமா பிறந்து நுாறு ஆண்டுகளில் இப்போது தான், இத்துறையில் பெண்களுக்கென தனி அமைப்பு உருவாகியுள்ளது. ஆம்! தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் (SIFWA - South Indian Film Women's Association) மே 1ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. பெண்களால் பெண்களுக்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு தலைவர் நம்ம வைஷாலி தான். அவருடன் ஒரு கலந்துரையாடல்.

* சிபா உருவான கதை?சினிமாவில் பெண்களுக்கான போதிய இடமும், வேலை வாய்ப்பும் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. இதற்கான தீர்வை யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர்கள் ஈஸ்வரி, மீனாகுமாரி, பெண் உதவி இயக்குனர்களுக்கான சங்கம் துவங்க இருப்பதாக முகநுாலில் பதிவிட்டனர். அவர்களை அணுகிய நானும் மற்றும் சில திரைத்துறை பெண்களும் அந்த அமைப்பை திரைத்துறை சார்ந்த அனைத்து தரப்பு (மொத்தம் 24 பிரிவுகள்) பெண்களுக்குமான அமைப்பாக மாற்றலாம் என ஆலோசித்தோம். அப்படிதான் உருவானது சிபா.

சிபாவுக்கு ஆதரவு…எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்த்தோம், உண்மையில் அனைவரும் வரவேற்கவே செய்தனர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தினார். பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் ஆதரவை தெரிவித்தனர்.

* சிபா எப்படி செயல்படும்?இது திரைத்துறையில் உள்ள பெண்களின் நலனுக்கான அமைப்பு. புதிதாக இத்துறைக்குள் நுழையும் பல பெண்கள் சரியான பாதை தெரியாமல் ஏமாற்றப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் வேலை வாய்ப்புகள் அமைத்து கொடுக்கும் தளமாகவும் சிபா செயல்படும்.

* தொழில்நுட்ப துறையில் பெண்களுக்கு குறைவாக வாய்ப்பு அளிக்கப்படுகிறதா?
ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவே உள்வாங்கி கொள்ளும் திறனும் அறிவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் உடலளவில் பலம் கொண்டவராக இருப்பார்களா என்ற கேள்வியே அவர்களுக்கு வாய்ப்பு குறைக்கப்படுவதற்கான காரணமாக அமைந்துவிடுகிறது.

உதாரணமாக ஒரு பெண் ஒளிப்பதிவாளரால் கேமராவை துாக்கி கொண்டு ஓடுவது, இரவு நேர பணிகளை மேற்கொள்வது போன்றவைகள் முடியுமா என்ற தயக்கங்கள் ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பெண்களால் முடியாதது ஒன்றுமில்லை. இப்பொழுது அனைத்து தளங்களிலும் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

* பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து?

எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகள் இருக்கவே செய்யும். எப்படி அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்கான பயிற்சி எங்கள் சங்கத்தில் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க முன்வந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ரேவதி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் நடிகை ரோகிணி.

எங்களிடம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அளிப்பதில் கவனமாக இருக்கிறோம். ஏனெனில் பெண் பிள்ளைகள் தந்தையிடம் சொல்ல இயலாததை தாயிடம்தான் சொல்வார்கள், அப்படியானதுதான் எங்கள் சங்கமும்!இவர்களை வாழ்த்த vaishudop@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
05-ஜூன்-201813:17:02 IST Report Abuse
சுந்தரம் ஏற்கனவே ஒரு பெண் ஒளிப்பதிவாளர் தமிழ் திரை உலகில் இருந்தாரே. அவர் பெயர் விஜய லட்சுமி என்று ஞாபகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X