அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதிக்கு பிரதமர் மோடி,
ராகுல் வாழ்த்து

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 95வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, அவருக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர், ராகுல், தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Congress,D.M.K,Rahul,Rahul Gandhi,karunanidhi,கருணாநிதி,காங்கிரஸ்,தி.மு.க,ராகுல்,ராகுல் காந்தி


கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை, கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி., காலனியில் உள்ள, அவரது வீடுகளும், தி.மு.க., தலைமையகமான அறிவாலயமும், நேற்று முன்தினமே வண்ண விளக்குகளாலும், மலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அன்று இரவே, கட்சித் தொண்டர்கள், கோபால புரம் வீட்டில், 'கேக்' வெட்டி, கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடினர். நேற்று அதிகாலை முதல், கோபாலபுரம் வீட்டின் முன் குவிந்த தொண்டர்கள், கருணாநிதியை வாழ்த்தி, முழக்கங்கள் எழுப்பினர்; பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், கருணாநிதியின் துணைவி ராஜாத்தி மற்றும் குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க., நிர்வாகிகளும், கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, கருணாநிதியை சந்தித்து, ஆசி பெற்றனர். வெளியே வந்த கருணாநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து, கை அசைத்து, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புன்னகைத்தார். இதைப்பார்த்த தொண்டர்கள், உற்சாகமாக வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.

சென்னையில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும், கட்சி நிர்வாகிகள், தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். அறிவாலயத்தில், வாழ்த்தரங்கம், கவியரங்கம் மற்றும் பட்டிமன்றமும் நடந்தது.

தலைவர்கள் வாழ்த்து :பிரதமர் மோடி:
கருணாநிதிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், 'இந்தியாவின் மிக மூத்த தலைவரான கருணாநிதி, மிகச் சிறந்த எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர். அவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement

ராகுல்:
'கருணாநிதியின் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இறைவனை எப்போதும் வேண்டுகிறேன்' என, காங்., தலைவர், ராகுல், வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார்.

முன்னாள் பிரதமர், தேவகவுடா, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ உள்ளிட்ட, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெயகுமார் வாழ்த்து :
தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறுகையில், ''கருணாநிதி, இன்னும் நுாறாண்டு காலம் வாழ வேண்டும் என்பது, என் தனிப்பட்ட கருத்து. அவரின் பிறந்தநாள் குறித்து, கட்சி ரீதியாக நான் எதுவும் தெரிவிக்க இயலாது,'' என்றார்.

அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் கூறுகையில், ''கருணாநிதி முதுபெரும் தலைவர். அவர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பது சிறப்புக்குரியது; சாதனைக்குரியது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்,'' என்றார்.

கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு, பிரபல ஓட்டலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த, காலை உணவு பரிமாற்றப்பட்டது. அதில், இட்லி, பூரி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, கேசரி, காபி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-201820:15:02 IST Report Abuse

Pugazh Vகலைஞர் பிறந்த நாள் 3 ஆம் தேதி. இன்னும் ஏன் இந்த தலைப்பில் எல்லோரும் ஆத்துஆத்துன்னு ஆத்தறாங்க? அனாவசியம்.

Rate this:
Ramanathan V - chennai,இந்தியா
04-ஜூன்-201817:50:38 IST Report Abuse

Ramanathan Vகலைஞர் மிக பெரியவர். அவர் இசை வெள்ளாளர் வகுப்பில் பிறக்காமல் ஐயர் வகுப்பில் பிறந்திருந்தால் அவரை அனைவரும் போற்றுவார்கள் . MGR ஜெயா போன்றவர்கள் ஐயர் ஆனதால் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தும் இங்குள்ள லஞ்சம் வாங்கும் நபர்கள் போற்றுகிறார்கள். காவேரி முதல் தமிழர்களுக்காக என்றும் பாடுபட்டவர் கலைஞர். 90 அறைகள் கொண்ட பங்களா கட்டி, குளிர் இடங்களில் சொகுசா வாழ்ந்த ஜெயா போல் இவர் வாழ்ந்தவர் கிடையாது. 100 கோடி சொத்தும் அபராதம் கட்டிய பெருமை இவருக்கு கிடையாது. இவர்கள் செய்த தவறை மறைக்கவே தலைவரை குறை சொல்கிறார்கள். தமிழ் நாட்டிற்கு தண்ணீர் வர வேண்டிய இடங்களை மற்ற அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்த பெரியவர்களை தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாது. கொள்ளை அடித்த கூத்தாடிகளுக்கு கும்மாளம் போட எங்களால் முடியாது. வாழ்க தலைவா, நீ நீடுழி வாழ்க.

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
04-ஜூன்-201819:44:15 IST Report Abuse

SARAVANAN Gகருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், உடலைப் பேணும் அம்சத்தை இந்தத் தலைமுறை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பு தினமும் உதிக்கும் சூரியன். அவர் நன்றாக இருந்த காலகட்டத்தில் இந்த விஷயத்தில் கடிகாரமும் அவரிடம் தோற்றுப் போயிருக்கிறது. உடலே மந்திரம் என வாழ்ந்து காட்டிய நம் காலத்திய திருமூலருக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-201801:20:51 IST Report Abuse

dandyமலேஷியா பிரதமர் பற்றி கேள்வி பட்டது உண்டா ..ஹி ஹி ஹி உங்களுக்கு டாஸ்மாக் நாடு தான் உலகம் .. ...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-201801:21:16 IST Report Abuse

dandyசந்ததிகளும் டாஸ்மாக் நாடெங்கும் திரிகின்றன ...

Rate this:
தமிழ் netizen - Chennai,இந்தியா
04-ஜூன்-201817:09:14 IST Report Abuse

தமிழ் netizenமுத் தமிழை விற்றவர் & கோ.. ஏன் இத்தனை வருடமாக ஆங்கில வருடத்தின் படி பிறந்த நாள் கொண்டாடுகிறார் ? தமிழ் வருடம் என்ன பாவம் செய்தது ? ஓ இது பகுத்தறிவா ? சரி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
04-ஜூன்-201818:45:10 IST Report Abuse

dandyமட்டுமா திராவிட கலாச்சாரமுறையில் கேக் வெட்டி இங்கிலீஸ் happy birthday சொல்லி கொண்டு ஆடுவார் சொந்த அக்கா இறந்து இரண்டுவாரம் கூட ஆகாமல் இருந்தபோது ...பிறந்தநாள் கொண்டாடியவர் இவர் ...

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
04-ஜூன்-201819:43:19 IST Report Abuse

SARAVANAN G5 முறை சூரியனை சுற்றிவந்த சூரியனே.. தாடியில்லா வள்ளுவனே... தடியில்லா பெரியாரே... பொடியில்லா அண்ணாவே.. மூவரும் ஓர் உருவாய் .... மூவேந்தரின் மறுபிறப்பாய்...... அறிவாலயத்தின் ஆண்டவரே... என் உயிரினும் மேலான பாசத்தலைவரை வாழ்த்தி வணங்குகிறேன்......... ...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
05-ஜூன்-201801:22:25 IST Report Abuse

dandyஹி ஹி ஹி கையை தூக்கி கூட அசைப்பதற்கு மெஷின் ...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X