கார்ப்பரேட் விவசாயம் தான் காப்பாற்றும்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கார்ப்பரேட் விவசாயம் தான் காப்பாற்றும்!

Added : ஜூன் 04, 2018 | கருத்துகள் (1)

நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். நகரத்தில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் பல நவீன வசதிகள், கிராமப் பகுதிகளில் கிடைப்பதில்லை. வசதி படைத்த விவசாயிகளும், நகர தரத்துடன் ஒப்பிடுகையில், குறைவானவர்களாக உள்ளனர். தொழில் பொருட்களின் விலையைப் போல, விவசாய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதில்லை.கடந்த, 40 ஆண்டுகளாக, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. ஆனால், தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், வெகுவாக உயர்ந்துள்ளது. விவசாய தொழிலாளர்களிடம் தொடர்ந்து அதிகரித்து வரும் அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தின் விளைவு தான், சமீபத்திய போராட்டங்களும், விவசாயிகளின் தற்கொலைகளும்!விவசாயிகளின் அமைதியின்மைக்கு, தொழிற்சாலை மற்றும் விவசாய பொருட்களின் விலைகளில் சமநிலைப்பாடு இல்லாதது தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் போக்கு, வன்முறையாக மாறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.விவசாய பொருளாதாரம் வளர்ச்சியடையும் வரை, கிராம மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் வெற்றியடையாது. மிகப் பெரிய வர்த்தக அளவில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, விவசாய பொருளாதாரம் மலர்ச்சி அடையும்.இதற்கு, பொதுத் துறையுடன், தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். பொதுத் துறையின் ஒத்துழைப்பால், அரசின் சுமை வெகுவாக குறையும்.கடந்த, 47 ஆண்டுகளில், தொழில் துறையில் நம் நாடு அடைந்த வெற்றியில், தனியார் துறையின் பங்களிப்பும் உள்ளது. துரதிருஷ்டவசமாக, தொழிற்சாலைகளை போல, விவசாயத்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இந்த சூழ்நிலையை மாற்ற, நாட்டின் விவசாய பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, தொழிலதிபர்கள் உடனடியாக முன் வந்து, கிராமங்களில் முழுமையான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுடன், கிராம மக்கள் தொகைக்கு தேவையான அடிப்படை வசதிகளை, குறுகிய காலத்தில் உடனடியாக செய்ய வேண்டும்.செயல்திட்டம் இது தான்வணிக ரீதியான, தனிநபர் தொழிலதிபர்களை விட, கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறந்து விளங்குவதால், விவசாயத்தை வர்த்தக நோக்கில் எடுத்து செல்ல, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விவசாயத்தை வர்த்தக ரீதியாக்கும் போது, தனி நபர் அல்லது நில உரிமையாளர்களிடம் உள்ள, ஏற்கனவே சாகுபடி செய்யப்படும் விளைநிலங்களை பறிக்கும் படி கூறவில்லை.அதற்கு மாற்றாக, விவசாயம் செய்யப்படாத, கைவிடப்பட்ட புறம்போக்கு நிலம் அல்லது பயன்படுத்தப்படாத நிலங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள், வெற்றிகரமான தொழிலதிபர்களும், நிறுவனங்களும் ஒன்று கூடி, புறம்போக்கு மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டும். அத்தகைய செயல்பாடுகளுக்கு, பலதரப்பிலிருந்தும் ஊக்கம் கிடைக்க வேண்டும்.இந்த நிலங்களில், நெல், கோதுமை போன்ற உணவுப்பயிர்களை மட்டுமே பயிரிட வேண்டும் என்பதல்ல, அவற்றில், வனமாகவும், தோட்டமாகவும் கூட மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில், அரசும் தன்னை இணைத்து, தன் பங்களிப்பாக, பயன்படுத்தாத நிலத் தொகுப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி, அவற்றில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.நிறுவனங்களின் தேவைதனி நபர்களால், தேவையான வாய்ப்புகள் அல்லது விவசாயத்தில் புதிய நடைமுறையை செயல்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை பெறுவது கடினம். கூட்டுறவு நிறுவனங்கள் வளர்ச்சியை எட்டுவதில், வெகு தொலைவில் உள்ளன. அவற்றுக்குள்ள தடைகளால், விரைவான வளர்ச்சியை அவை எட்டுவது கடினமாகிறது.வர்த்தகமயமான டீ, காபி மற்றும் ரப்பர் தொழில்கள் வெற்றிகரமாக இயங்கி, நல்ல வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், சராசரி விவசாய தொழிலாளரை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குகின்றன. அதற்கு காரணம், அவை, கார்ப்பரேட்மயமானது தான். தொழிலதிபர்கள், அதில் தங்கள் முதலீடு, உழைப்பு, எண்ணத்தை ஈடுபடுத்தியது தான், வெற்றிக்கு காரணம்.வெற்றிகரமாக, வர்த்தகமயமாக்கப்பட்ட விவசாயத்திற்கு, சமீபத்திய உதாரணம் கரும்பு சாகுபடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியால், விதைப்பது முதல் கொள்முதல் நிலை வரை, கரும்பு விவசாயிகள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளனர். அது போல், இதர விவசாய மற்றும் தோட்டக்கலை நடவடிக்கைகளை அரசுடன் இணைந்து செயல்படுத்த, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.நடவடிக்கைகள்கீழ்கண்ட நிலைகள், அரசு மூலமாக, விவசாய துறை அல்லது இதற்கென்றே அமைக்கப்படும், மாநில அமைப்பிடம் வழங்கப்படும் போது, விளைநிலங்கள் விளைச்சலில் மாறுதல் அடையும்.l அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பயன்பாடில்லாத விளை நிலங்களை கண்டறிந்து, விவசாய துறை உதவியுடன், மண் வள பரிசோதனையை நடத்துவதுடன், தண்ணீர் வசதி குறித்த அறிக்கையை தயார் செய்ய வேண்டும்l மண்ணின் தரம், சந்தை, தேவை மற்றும் வர்த்தக நம்பகத்தன்மையை கருதி, பயிரிட வேண்டிய பயிர்கள் குறித்து வேளாண் நிபுணர்கள் திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இந்த களப்பணிக்குப் பின், மத்திய அரசு அல்லது மாநில அரசு நிறுவனத்துடன் இணைந்து, விவசாய பணிகளை மேற்கொள்ள, தொழிலதிபர்களிடம் இருந்து திட்ட அறிக்கையின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட பதிவை பெற வேண்டும்l நிலத்தின் மதிப்பில், மாநில அரசு / நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிலதிபர்களின் பங்கு சமமாக இருக்க வேண்டும்.தடை கற்கள்இந்த திட்டத்தை செயல்படுத்த, பல தடைகள் இருக்கும். ஆனால், அரசுக்கும் தனியார் தொழிலதிபர்களுக்கும் இடையே புரிதல் இருந்தால், தடைகளை எதிர்கொள்ளலாம்.l நில உச்சவரம்பு சட்டம் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். நில சீர்திருத்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்வதன் மூலம், இதை சமாளிக்க முடியும். எனவே, மாநில அல்லது மத்திய அரசின் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள், அந்த சட்ட விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம்l விவசாயம் என்பது, இயற்கையின் மாறுபாடுகளுக்கு உட்பட்டு இருப்பதால், முதலீட்டின் மீதான வருவாய், போதுமானதாக இருக்காது. தண்ணீர் கிடைப்பதை பொறுத்து, வணிக ரீதியான பயிர்களை பயிரிட்டு, விவசாய நடவடிக்கைகளை பொருளாதார ரீதியாக வெற்றியடைய செய்யலாம்l முதலீடு மீதான வருவாய் குறைவாக இருந்தாலும், திட்டத்தின் முதன்மை நோக்கமானது, விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அதே நேரத்தில், பிற தொழில்களுக்கு உதவுவதன் மூலம் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதே. எனவே, பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றி பண்ணை, காதி மற்றும் கிராம தொழில்கள், போன்ற தொழில்களை துவக்கலாம்l அத்தியாவசிய பொருட்கள் சட்டம், விவசாய உற்பத்தி சந்தை சட்டம் மற்றும் இதர உணவு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்l அரசு கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் மற்றும் விவசாய, தோட்டம் மற்றும் பால் பொருட்களின் வினியோகம் மற்றும் விற்பனையை எளிதாக்க வேண்டும்l தொழிலதிபர்கள், தங்கள் சொந்த விருப்பத்தின் படி, இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். பிரிட்டன் பிரதமராக இருந்த, கிளமென்ட் அட்லீ, 'ஒரு சுதந்திர சமுதாயமானது, பெரும்பான்மையாக இருக்கும் ஏழைகளுக்கு உதவ முடியாவிட்டால், சில பணக்காரர்களையும் காப்பாற்றாது' என, கூறியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.நன்மைகள்l அரசின் கீழ், இந்த திட்டம் கூட்டுத் துறையில் இருக்கும் என்பதால், சமுதாய கட்டுப்பாடு இருக்கும். நிலத்தில் உட்பிரிவுகளோ அல்லது பாகங்களோ இருக்காது. பல தலைமுறை கடந்தாலும், விவசாய நிலங்கள் சிதைந்து போகாமல் அப்படியே இருக்கும். இந்த வழியில் விவசாய நடவடிக்கைகளை, மிகவும் சிக்கனமான மற்றும் லாபகரமான முறையில் செய்யலாம்l வேளாண் பல்கலையில் படித்து வரும் விவசாய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், பண்ணை மேலாண்மை தொழிலுடன் தொடர்பை ஏற்படுத்தினால், ஏற்படக்கூடிய நல்ல பலன்கள் தெரிய வரும்l கூடுதலாக, கிராமவாசிகளுக்கு புதிய வேலை வாய்ப்பு களங்கள், சீரமைக்கப்பட்ட துறைகளாக கிடைக்கும். நலிவடைந்த மக்களின் சேவைகளை விவசாயத்தில் அதிகமாக பயன்படுத்துவதால், பணி பாதுகாப்புடன் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்l கார்ப்பரேட் பண்ணை பெருக்கத்தால், 'காதி' மற்றும் கிராம தொழில்களின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகள் அதிகரிக்கும் போது, கிராம மக்கள் நகரங்களுக்கு செல்வது தடுக்கப்படும்l நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயத்தை மேம்படுத்தும் முறைகளை ஏற்பது, விவசாயத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுடன், கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்l இத்திட்டத்தால், அரசின் வருவாய் அதிகரிக்கக் கூடும். 'சிப்காட், டிட்கோ, டான்சி' மற்றும், 'டிக்' நிறுவனங்களுக்கு இணையாக ஊக்குவிப்பதன் பயனாக, விவசாய வளர்ச்சி மற்றும் காந்தியடிகளின் கிராமம் சார்ந்த பொருளாதார கனவை நனவாக்கும்.-- டி.எஸ்.கோபாலன்

வேளாண் வல்லுனர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X