அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில், 1.75 லட்சம் பேர், 'அம்மா வைபை' வசதியை பயன்படுத்தி உள்ளனர். தமிழகத்தில், பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 'வைபை' என்ற, கம்பியில்லா இணையதள சேவை வழங்கப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதை செயல்படுத்தும் முயற்சியில், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டது.முதற்கட்டமாக, ஏப்ரல், 5ல், சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை மற்றும், மதுரை, திருச்சி, சேலம், கோவை பேருந்து நிலையங்கள் என, ஐந்து இடங்களில், இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்தது.முதல், 20 நிமிடங்களுக்கு இலவசமாக, இந்த சேவையை பயன்படுத்த முடியும். அதன்பின், ஒரு மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் சேவையை தொடரலாம்.இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:'அம்மா வைபை' இலவச சேவையை, இரண்டு மாதங்களில், 1.75 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர். அதில், இலவச பயனாளர்களே அதிகம். 20 ஆயிரம் பேர், தொடர்ந்து பயன்படுத்தி உள்ளனர்.மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்த சேவையை, பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement