கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் வளாக கடைகளை காலி செய்ய அவகாசம் நீட்டிப்பு

Added : ஜூன் 04, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகங்களிலும் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கோயிலில் கடை வைத்துள்ள வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று
கோயில் கடைகள், சென்னை ஐகோர்ட், அவகாசம் நீட்டிப்பு

சென்னை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வளாகங்களிலும் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கோயிலில் கடை வைத்துள்ள வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாற்று இடம் குறித்து இந்து அறநிலைத்துறையிடம் 4 வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு மாற்றி இடம் கோரி விண்ணப்பித்தால் அது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஜூன்-201810:40:44 IST Report Abuse
Bhaskaran தீயணைப்பு உபகரணங்கள் hydrant pipeline ஸ்ப்ரின்க்லெர் போன்றவை பற்றி மாண்புமிகு நீதியரசர்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை கண்டிப்பாக கோவில் கடைகளில் பொறுத்த சொல்லியிருக்கவேண்டும்
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜூன்-201808:21:22 IST Report Abuse
Srinivasan Kannaiya கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. பாருங்கள் எந்த ஆண்டு என்று வரை இட்டு கூறவில்லை... இது ஒரு விதத்தில் நீதிமன்றங்களின் தயவுடன் இழுத்தடிக்க படும் விஷயமாக தெரிகிறது...
Rate this:
Cancel
04-ஜூன்-201822:52:25 IST Report Abuse
ஆப்பு எல்லோரையும் ஐ கோர்ட் வளாகத்திலியே கடை போட்டுக்கச் சொல்லிறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X