பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
NEET exam,medical entrance test,நீட்,ரிசல்ட்,கட்சிகளுக்கு,மூக்கறுப்பு

'நீட்' தேர்வுக்கு எதிராக, தமிழகத்தில் குரல் எழுப்பிய அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, இத்தேர்வு எழுதிய, 1.14 லட்சம் பேரில், 45 ஆயிரம் மாணவர் - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்வு நன்றாக எழுதியதன் காரணமாக, டாக்டராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள, 7,470 மருத்துவ படிப்பு இடங்களுக்கு போட்டியிடும் அளவுக்கு, ஆறு மடங்கு மாணவர்கள் தகுதி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டு வந்தனர். இதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், தங்களது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் கல்லுாரிகளில் சேர்ந்தனர். அதனால், டாக்டர்களின் தகுதியும், திறமையும் கேள்விக்குறியானது.

கடும் எதிர்ப்பு :


அதனால், உயிரை காப்பாற்றும் புனித தொழிலான மருத்துவத்தில், தரத்தை உறுதி செய்யும் வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு, தமிழகத்தில் உள்ள பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும். தமிழக மாணவர்களால், மருத்துவம் படிக்க முடியாது; பிற மாநில மாணவர்கள், தமிழக மாணவர்களுக்கான இடங்களை அபகரிப்பர்' என்றெல்லாம், இக்கட்சி கள், மத்திய அரசுக்கு எதிராக, தீவிர பிரசாரம் செய்தன.
இப்பிரச்னை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதும், 'நீட் தேர்வு கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமானது. இதில், தமிழக அரசு, விலக்கு கேட்டும் கிடைக்கவில்லை. எனவே, நீட் தேர்வுக்கு, தமிழக அரசின் சார்பில், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், நீட் தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது. இதன் முடிவுகளை நேற்று, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டது. நாடு முழுவதும், தேர்வு எழுதிய, 12.69 லட்சம் பேரில், 56 சதவீதமான, 7.14 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம், 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட தேர்வில், சென்னை, பத்மசேஷாத்ரி பள்ளி மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில், 12ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில், 1.14 லட்சம் பேர், நீட் தேர்வை எழுதினர். அவர்களில், 45 ஆயிரத்து, 336 பேர், தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். அதாவது, தேர்வு எழுதியோரில், 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாயிலாக,

கவுன்சிலிங் நடத்தப்படும். இதில், மொத்த இடங்களில், 85 சதவீதம், நீட் தேர்ச்சி பெற்ற, தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படும். 85 சதவீத இட ஒதுக்கீட்டில், தோராயமாக, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 3,894 இடங்களும், பி.டி.எஸ்., என்ற, பல் மருத்துவ படிப்புக்கு, 1,880 இடங்களும் என, மொத்தம், 5,774 இடங்கள் உள்ளன.
மேலும், இந்த ஆண்டு முதல், நீட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள, இந்திய மருத்துவமான - ஆயுஷ் படிப்புகளுக்கு, 1,696 இடங்கள் உள்ளன. எனவே, தமிழக ஒதுக்கீட்டில், மொத்தம், 7,470 மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றுக்கு, இந்த இடங்களை விட, ஆறு மடங்கு அதிகமாக, 45 ஆயிரத்து, 336 மாணவர்கள் போட்டியில் உள்ளனர்.
'நீட் தேர்வால், தமிழகத்தில் சமூக நீதி பாதிக்கப்படும்; தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகி விடும்' என்றெல்லாம் பிரசாரம் செய்த, கட்சிகளுக்கு ஏற்பட்ட மூக்கறுப்பாக, 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிக்க தகுதி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, பிளஸ் 2 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும், நீட் தேர்ச்சி மூலமாக, மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அரசு ஒதுக்கீடு :


தமிழகத்தில், நிகர்நிலை பல்கலைகளில், 1,349 மருத்துவ இடங்கள் உள்ளன. அவற்றுடன், அகில இந்திய ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., 456 மற்றும் பி.டி.எஸ்., 30 இடங்களையும் சேர்த்து, 1,835 இடங்களிலும், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழக மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், இந்த, மத்திய அரசு ஒதுக்கீட்டிலும் சேர முடியும்.

குறைந்த மதிப்பெண் எவ்வளவு?

'நீட்' தேர்வில், மருத்துவ இடங்களில் சேருவதற்கான, 'கட் ஆப்' என்ற, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 'கட் ஆப்' ஒன்பது மதிப்பெண் குறைந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களது இன அடிப்படையில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கு, 119 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், 691 மதிப்பெண் வரை, 6.35 லட்சம் மாணவர்கள் பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில், மாற்றுத் திறனாளிகளுக்கு, குறைந்தபட்சமாக, 107 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கும், குறைந்தபட்ச மதிப்பெண், 96. பிற்படுத்தப்பட்டோரில், 54 ஆயிரத்து, 653 பேர்; தலித் பிரிவில், 17 ஆயிரத்து, 209; பழங்குடியினர், 7,446 பேர், இந்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளில், பொதுப் பிரிவினர், 205; பிற்படுத்தப்பட்டோர், 104; தலித், 36; பழங்குடியினர், 12 பேர், தகுதி பெற்றுள்ளனர். இந்த பட்டியலின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதியானவர்கள். அவர்களுக்கு, அகில இந்திய தர வரிசை பட்டியலின் படி, மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாரிமுத்து.க - சென்னை,இந்தியா
08-ஜூன்-201811:29:24 IST Report Abuse

மாரிமுத்து.க  இன்று உங்களுக்கு புரியாத "நீட்" அரசியல்... முப்பது வருடங்கள் கழித்து ஹிந்தி பேசும் டாக்டர் உங்களுக்கு மருத்துவம் பார்க்கும் போது புரியும்...

Rate this:
05-ஜூன்-201821:00:08 IST Report Abuse

chezhiyanதமிழகத்தில் 45000 மாணவர்கள் தேர்ச்சி தான். 100 மார்க் வாங்கினாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 400 மார்க்குக்கு மேல் வாங்கினால் தான் அரசு கல்லுரியில் சேர முடியும். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து கோச்சிங் சென்ற மாணவர்கள் தான் 400 மார்க் வாங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க 100 மார்க் வாங்கியவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தின் நோக்கம் என்னவென்றால் பணக்கார மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேர வேண்டும் என்ற நோக்கம் தான். ஆண்டுக்கு 20 லட்சம் பணம் செலுத்தி ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரியில் சேர முடியாது. அரசு கல்லூரியில் சேர 400 மார்க் வாங்க லட்சங்கள் செலவு செய்து கோச்சிங் போக வேண்டும். ஆக மொத்தம் NEET தேர்வால் வந்த பலன் என்ன வென்றால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் இல்லை..

Rate this:
sri -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூன்-201820:57:56 IST Report Abuse

sriநீ பேசாம இரு. நீ உன் மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா போற. நீ அங்க போக காரணம் என்னவென்றால் அங்கு மருத்துவம் தரமானதாக உள்ளது. நாங்கள் நல்ல மருத்துவத்திற்கு எங்கே போவது? எங்களுக்கு நல்ல மருத்துவர்கள் இருந்தால் தான் எங்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். அதனால் எங்களுக்கு நீட் வேண்டும்

Rate this:
skv - Bangalore,இந்தியா
10-ஜூன்-201808:33:49 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>பாரினலே எங்கிட்ட போனாலும் அவஸ்தையேதான் மெடிக்ஷன் அவ்ளோ அதிகம் , எக்ஸ்ரே எடுக்க பிளட் டெஸ்ட் ஸ்கேன் என்று வரச்ச அவ்ளோதான் , மேக்ஸிமம் வயர் ரிப்பேருக்கு காரணமே லிக்கர் தான் MALE FEMALE நுபேதமே இல்லாதிக்கு குடிக்குதுங்க $ லே காச்சல் இந்தியா கரன்சியுடன் ஒப்பிட்டால் அவ்ளோதான் நம்மளவா எப்போதுமே அப்படியேதான் கால்குலேட் பண்றங்க , ஒருடாலர் கடையிலே வாங்கறச்ச கணக்குபார்க்கறதே இல்லே நாம் நம்ம தேசத்துலே 20 ரூபாய்க்கு வாங்கும் ஒரு சோப்புத்தப்பா 1க்கு 1$இதுபோல் ITEMS வாங்குவதை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கும் நம்ம இந்தியர்கள் அதனாலே பல பொருட்களை இந்தியாவாரச்ச அள்ளி ண்டுபோவாங்க சோனியா இந்தியனே இல்லே அனால் அவளை காங்கிரஸ் இந்திராவின் மருமகள் ராஜிவ் மனைவி என்று தலையே தூக்கிண்டு திரியுதுங்க அங்கேயும் நம்மவர்கள் பாராசிட்டமால் இப்ருபின் போன்ற பல மாத்திரைகள் இங்கேதுதான் கொண்டுபோறாங்க சுஅர்ஜெரி என்றுவாரச்ச அவா இந்தியா தான் வராங்க MRI SCANE இங்கே மினிமம் 4000 /லெந்து பத்தாயிரம்னு ஆவும் யு எஸ் லே எல்லா பாரின் தேசங்கள்லேயும் எல்லாம் கோஸ்டலி. எப்படியோ ஒரு வீடு வாங்கிட்டுசெல்லில் ஆவுதுங்க காதுகளின் வாரிசுகளோ சுகவாசியா இருந்துட்டு இங்கே நம்ம தேசத்துலே ஓட்டமுடியலே ...

Rate this:
மேலும் 156 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X