சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,க்கு ராஜ துரோகம் செய்த சசிகலா குடும்பம்
விசாரணை கமிஷனில்
மருது அழகுராஜ், 'திடுக்' தகவல்

சென்னை : 'சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது' என, ஜெயலலிதா கூறியதாக, 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர், மருது அழகுராஜ், விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Jayalalithaa,Sasikala,அ.தி.மு.க,சசிகலா,ஜெயலலிதா,ராஜ துரோகம்,சசிகலா குடும்பம்,விசாரணை கமிஷன்,மருது அழகுராஜ்,திடுக்,தகவல்


ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்று, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், கட்சி நாளிதழின் ஆசிரியருமான, மருது அழகுராஜ் மற்றும் நடிகர் சோவின் மகன் ஸ்ரீராம் ஆகியோரிடம், விசாரணை நடந்தது.

அரசு தரப்பில், வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகினர். விசாரணையின்போது, ஸ்ரீராம் கூறுகையில், 'அப்பா சோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தான், முதன் முதலில், ஜெ.,வை பார்த்தேன். அவர்களுக்குள் நடக்கும் விவாதத்தை, யாரிடமும் அப்பா கூற மாட்டார்' என்று கூறியுள்ளார். மருது அழகுராஜிடம் நடந்த விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.

மருது அழகுராஜ் அளித்த வாக்குமூலம்: சசிகலா உறவினர் ராவணன் தான், என்னை

ஜெ.,விடம் அறிமுகப்படுத்தினார். பின், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் பணியாற்ற ஆரம்பித்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, வீட்டை விட்டு வெளியேற்றியபோது, என்னையும், பூங்குன்றனையும், ஜெயலலிதா அழைத்தார்.

அப்போது, 'சசிகலா குடும்பத்தினர், எனக்கு ராஜ துரோகம் செய்துள்ளனர். அவர்கள் வழியாக, நீங்கள் வந்துள்ளீர்கள்; நீங்களும், அவர்களுடன் போக நினைத்தால் செல்லலாம்' என்றார்.

நான், 'உங்கள் நிழலில் வாழ ஆசைப்படுகிறேன்' என்றேன். அதன்பின், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில், நிர்வாக இயக்குனர் பொறுப்பு கொடுத்தார். ஆனால், அந்த நாளிதழின் வரவு - செலவு கணக்குகளை, சசிகலா உறவினர்கள் பார்த்தனர். அதனால், அவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, ஆசிரியராக மட்டும் பணியாற்றி வந்தேன்.

இதய சிகிச்சைக்காக, மருத்துவமனையில் இருந்தபோது, கட்சி நாளிதழில், சசிகலா உறவினர் பாஸ்கரனின், சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து, என்னை அழைத்து, ஒரு மணி நேரம், ஜெ., திட்டினார்.

கட்சி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களில், ஜெ., அவ்வப்போது சில திருத்தங்கள் செய்வார். மற்ற நாளிதழ்களில், அரசு தொடர்பாக வரும் செய்திகளுக்கு, மறுப்பு தெரிவிக்க, குறிப்புகளை தருவார். நேரடியாக மறுப்பு தெரிவிக்க முடியாத செய்திகளுக்கு, 'சித்ரகுப்தன்' என்ற புனைப் பெயரில், மறுப்பு தெரிவிக்குமாறு கூறுவார்.

Advertisement


கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா குடும்பம் நினைத்ததாக, செய்தி வெளியானபோது, அதற்கு, அவர், எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. 2016 செப்., 21ல், ஜெ., உடல்நிலை மோசமானது; 22ல், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.

அவரது வீட்டில், அவசர தேவைக்கு, ஒரு ஆம்புலன்ஸ் கூட நிறுத்தப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சர்க்கரை அளவு, 500 ஆகவும், இதய துடிப்பு, 40க்கு குறைவாகவும் இருந்தது. இதய துடிப்பு, ஒரே நாளில் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியதாக, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளியே வந்து, பேட்டியளித்த மருது அழகுராஜ், ''ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, நான் பதிலளித்தேன். நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் இருந்து, நான் வெளியேற்றப்பட்டது குறித்து, தினகரன் தான் கூற வேண்டும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Nesan - Chennai,இந்தியா
05-ஜூன்-201817:36:54 IST Report Abuse

Tamil Nesanஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பல்லாயிரம் கோடி பணமும் சொத்தும் தான் அவரது இந்த முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது. ஏழை எளிய மக்களுக்கு கொஞ்சமாவது தானம் செய்திருந்தால், தர்மம் தலை காத்திருக்கும்...

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
05-ஜூன்-201816:58:35 IST Report Abuse

Sundaramசசிகலா குடுமபம் துரோகத்திற்கு பேரு போனது

Rate this:
JANANI - chennai,இந்தியா
05-ஜூன்-201816:52:50 IST Report Abuse

JANANIsasikala vai visaarithaal anaithu unmaiyum velivarum

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X