அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தூத்துக்குடியில் சமூக விரோதிகள் கைவரிசை
ஆதாரம் இருப்பதாக முதல்வர் தகவல்

சென்னை : ''துாத்துக்குடி கலவரத்தில், சமூக விரோதிகள் மற்றும் விஷமிகள், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை மட்டும் தான் கைது செய்கிறோம்; பொது மக்கள் யாரையும் கைது செய்யவில்லை,'' என, முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.

துாத்துக்குடி,சமூக விரோதிகள்,கைவரிசை,ஆதாரம்,முதல்வர்


சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை வேண்டாம் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் உள்ளிட்ட, செம்பு உருக்காலைகளுக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டிய, கொள்கை முடிவுகளை, அரசு எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக, உச்ச நீதிமன்றம், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.அந்த நிதி, மாவட்ட கலெக்டரிடம் உள்ளது. அதன் வட்டியும், அசலும், எந்த அளவுக்கு உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பங்களுக்கு, அந்த நிதியிலிருந்து, தலா, 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பலத்த காயமடைந்தவர்களுக்கு, தலா, 50 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு, தலா, 25 லட்சம் ரூபாய் என, உயர்த்தி வழங்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகளோ, விஷக் கிருமிகளோ அல்லது பயங்கரவாதிகளோ அல்ல. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை, அரசு திரும்பப் பெற வேண்டும். போலீசார், வீடு வீடாகச் சென்று, சோதனையிடுவதை தடுக்க வேண்டும்.

சட்டசபை காங்., தலைவர், ராமசாமி: இப்போராட்டம் தொடர்பாக,

ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது; அவற்றை திரும்பப் பெற வேண்டும். ஸ்டாலின் கோரியபடி, நஷ்டஈடு வழங்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இனி, திறக்க முடியாது. இதற்காக, தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு, சட்டப்படி செல்லும். ஆலை இயங்காமலிருக்க, அனைத்து வகையான நடவடிக்கைகளையும், அரசு மேற்கொண்டுள்ளது.

துாத்துக்குடி கலவரத்தில், யாரெல்லாம் உருட்டுக்கட்டையால் அடித்தனர்; பெட்ரோல் குண்டு வீசி, கார்களுக்கு தீ வைத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்கள், தங்களுடைய உரிமைக்கு போராடுவதில், தவறு கிடையாது. இந்தியாவில், அதிக போராட்டம் நடைபெறும் மாநிலம், தமிழகம். அந்த அளவிற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

துாத்துக்குடியில், வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமே, விஷமிகள் மற்றும் சமூக விரோதிகள் என்கிறோம்; பொதுமக்களை அல்ல. வன்முறையாளர்களையும், சமூக விரோதிகளையும், எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. எனவே, வன்முறையில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்கின்றனர்.

தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, கைது செய்யப்படுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விபரங்களை, தாராளமாக அளிக்கலாம். தவறு செய்தவர்கள் மீது, விசாரணை முடிந்த பின், நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்டாலின்: சீருடை இன்றி, போலீஸ்காரர்கள், வேன் மீது ஏறி நின்று, துப்பாக்கியால் சுட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அதுவும், முதல்வர் கவனத்திற்கு வந்திருக்கும் என, நினைக்கிறேன். 'நீட்' தேர்வு, ஜல்லிக்கட்டு பிரச்னை போன்றவற்றுக்கு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துணை முதல்வர், பன்னீர்செல்வம்: நீட், ஜல்லிக்கட்டு பிரச்னையில், மத்திய அரசை கேட்க வேண்டி இருந்ததால், தீர்மானம்

Advertisement

நிறைவேற்றினோம். இது, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆலையை மூட, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதன்படியே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஸ்டாலின்: அரசின் நடவடிக்கையை எதிர்த்து, ஆலை தரப்பில், நீதிமன்றம் செல்வர் என்பதால், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோருகிறோம். அதை செய்தால், நீதிமன்றம் செல்லும் வாய்ப்பை இழப்பர்.

துணை முதல்வர்: தேவை இல்லை என்பதால், தீர்மானம் நிறைவேற்றவில்லை. ஆலை நிர்வாகம், எந்த ரூபத்தில் வந்தாலும், அதை தடுக்கும் அதிகாரம், அரசுக்கு உள்ளது.

ஸ்டாலின்: ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியிலும், அ.தி.மு.க., ஆட்சியிலும், தடை பெற்றுள்ளனர். அந்த பிரச்னை, மீண்டும் வரக்கூடாது என்பதற்காகவே, தீர்மானத்தை வலியுறுத்துகிறோம்.

முதல்வர், பழனிசாமி: ஆலை, இனி திறக்கப்படாது. இதில், எந்த சந்தேகமும் தேவை இல்லை.

துணை முதல்வர்: நீதிமன்றம், நம்மை கேட்காமல், எந்த முடிவும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்து உள்ளோம்.

அமைச்சர், சி.வி.சண்முகம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், சட்டம் இயற்றினாலும், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப உரிமை உண்டு. ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதை, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joseph - Adam,ஓமன்
08-ஜூன்-201812:37:52 IST Report Abuse

josephதமிழக அரசு அல்லது மத்திய அரசு ஏன் மக்களிடமும் , ஸ்டெர்லிட் நிர்வாகத்திடமும் பேசி ஒரு சரியான தீர்வை காண முயற்சி எடுக்கவில்லை ? இந்த நாடு மக்களாட்சி நாடா அல்லது அடிமை நாடா ? இத்ற்கு காரணம் தமிழக மக்களும் ஒரு காரணம் . நல்லவர்களை நியாயமாக ஒட்டு போட்டு தேர்ந்து எடுக்காமல் , ஓட்டுக்கு துட்டு வாங்கிட்டு , இலவசமாக எந்த ஓட்டை ஓடைசல்களையும் சண்டை போட்டு வாங்கிக்கொண்டிருப்பதே காரணம். சினிமா பார்த்து காலங்காலமாக நடித்தவர்களை நாட்டை ஆழ்வர்களாகவும் , அவர்களது கண் மண் அறியாத முரட்டு ரசிகர்களை அமைச்சர்களாகவும் அழகு பார்த்தத்தினால் தமிழகம் தலைகீழாக போயி கொண்டே இருக்கிறது. ஜோ, கசான்

Rate this:
raaj - surat,இந்தியா
05-ஜூன்-201822:14:22 IST Report Abuse

raajபழனிசாமி நீங்களே ஒரு சமூகவிரோதி யாருக்கோ ஓட்டுப்போட்டு முதல் அமைச்சர் ஆக்கினால் நீங்க திருட்டு வேலை பார்த்து மக்கள் போட்ட ஓட்டை தவறா பயன்படுத்தி முதல் அமைச்சர் ஆகியிருக்கிங்க சசிகலா காசுலயும் தினகரன் உதவியோடும் பன்னிரு செல்வத்துக்கு ஆப்பு வைத்து சசிகலாவை ஜெய்லயும் தினகரனை மாட்டி விட்டு பன்னிர்செல்வத்தை அடிமையாக்கி முதல் அமைச்சர் ஆனா எவ்வளவு பெரிய ஜெகஜாதளக் கில்லாடி சாமி உங்களுக்கு ஆதாரம் ரெடி பண்ணுறது பெரிய வேலையா உங்களை முதல் அமைச்சர் நிறுத்தி ஓட்டு கேட்டால் உங்க மனைவியே கேக்கும் இந்த மூதேவிக்கனு பணத்துக்காவும் பதவிக்காகவும் சொந்த மக்களையே விக்கிறீங்க

Rate this:
05-ஜூன்-201818:59:02 IST Report Abuse

விஜய்,மலேசியா.உங்களை யாரும் கைகாட்டிவிடகூடாதுயன நீங்கள் "சமூகவிரோதி" என்று பட்டம் கட்டுகிறீர்கள்...

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X