அரசியல் செய்தி

தமிழ்நாடு

234 தொகுதிகளில் பா.ஜ., போட்டி:ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவு

Added : மார் 11, 2011 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை:""சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.கோவையில் பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் இணைந்து, 234 தொகுதியிலும் பா.ஜ., கட்சி
234 தொகுதிகளில் பா.ஜ., போட்டி:ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவு

கோவை:""சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.
கோவையில் பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் சுப்ரமணியசாமியின் ஜனதா கட்சியுடன் இணைந்து, 234 தொகுதியிலும் பா.ஜ., கட்சி போட்டியிடும். 100 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) காலை வெளியாகும். மார்ச் 16ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர் பெயர்களும் அறிவிக்கப்படும்.
தேர்தலில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். வரும் 12ல் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தி.மு.க., - காங்., கூட்டணி ஒரு கசப்பு உணர்வுள்ள கூட்டணி. ஆறு ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்திய பா.ஜ., கட்சி, தோழமை கட்சிகளை மரியாதையாகவே நடத்தி வருகிறது. ஆனால், இன்று காங்., கட்சி தி.மு.க., கட்சியை அவமானப்படுத்துகிறது.காங்., தேச விரோத ஆட்சி நடத்துகிறது. விரைவில் இதற்கு முடிவு கிடைத்து விடும். வரும் மே மாதத்துக்கு பின் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்காது. மத்திய அரசின் முடிவு நெருங்கி விட்டது.
தற்போது கைதாகியுள்ள ஹசன் அலி 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து வருமானவரித் துறையினரும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு ராஜா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kishan kumar - switzerland,சுவிட்சர்லாந்து
11-மார்-201118:36:20 IST Report Abuse
kishan kumar ஆல் தி பெஸ்ட்
Rate this:
Cancel
Parveen - Chennai,இந்தியா
11-மார்-201110:41:38 IST Report Abuse
Parveen Good alliance , its an alliance alternate to DMK and ADMK. Wish BJP all the best in TN.
Rate this:
Cancel
Nagamoney Sivathanupillai - Chennai,இந்தியா
11-மார்-201109:55:49 IST Report Abuse
Nagamoney Sivathanupillai நிச்சயமாக நான்கு இடங்களில் குமரியில் வெற்றிபெறும் பார்லிமென்ட் தேர்தலில் மூன்து தொகுதிகளில் muthal இடத்தில irunthathu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X