குமாரசாமியுடன் கமல் சந்திப்பு: காவிரி விவகாரம் குறித்து பேச்சு Dinamalar
பதிவு செய்த நாள் :
குமாரசாமியுடன் கமல் சந்திப்பு
காவிரி விவகாரம் குறித்து பேச்சு

பெங்களூரு : காவிரி விவகாரம் தொடர்பாக, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், கர்நாடகா முதல்வர் குமாரசாமியை, பெங்களூருவில் நேற்று சந்தித்து பேசினார்.

குமாரசாமி,கமல்,சந்திப்பு,காவிரி விவகாரம்,பேச்சுகமல் நேற்று பெங்களூரு வந்தார். காவிரி நதி நீர் விஷயத்தில் சுமுக உடன்பாடு ஏற்படுத்துவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார்.


காவிரி நதி நீர் பங்கீடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை உட்பட, பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக, இருவரும், 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசினர்.


இதன்பின், முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டி: தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக, காவிரி நதி நீர் பிரச்னை உள்ளது. கமல், தமிழகத்தில் புதிய கட்சி துவக்கியுள்ளார். இதனால், என்னை சந்தித்து, காவிரி விஷயத்தில் சுமுக தீர்வு காணும் வகையில் பேசினார்.


இரு மாநிலத்தில் கலவரம் ஏற்படாமல், இரு மாநில விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவோம் என்றார்; அந்த கருத்தை நானும் ஏற்றுக்கொண்டேன். காவிரி பிரச்னை தீர்த்து கொள்வது தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


இதைத் தொடர்ந்து, கமல் கூறியதாவது: காவிரி விஷயத்தில், இரு மாநிலங்களுக்கும் பாலமாக இருந்து, தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளேன். தமிழக - கர்நாடக மக்கள் இருவரும் சகோதரர்களே தானே. காவிரி இல்லாமல், இரு மாநில மக்களும் வாழ முடியாது.

Advertisement
இதனால் தான், காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, முதல்வரிடம் ஆலோசித்தேன். குமாரசாமியும், தமிழக அரசுடன் சுமூக பேச்சு நடத்த தயார் என கூறியுள்ளார். குறுவை பாசனத்துக்கு தண்ணீர் தேவை என்பதால், முதல்வரை சந்தித்தேன். தமிழக மக்கள் சார்பில் மட்டுமே வந்தேனே தவிர, 'காலா' திரைப்படம் தொடர்பாக, பேச வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
06-ஜூன்-201809:02:29 IST Report Abuse

ரத்தினம்இந்த லூசு அங்க போனது காவிரி கொண்டு வரதுக்கு இல்ல. அது தான் அதிகார பூர்வமா வேலை நடந்துகிட்டு இருககு. காரணம் காலா ஓடாம பாத்திகிறதுக்கு தான். ஏன்னா இந்த ஆள பாத்த மறு நாளே, காலா கர்நாடகாவுல திரை இடுவது நல்லதில்லைன்னு குமாரசாமி சொல்றார்.

Rate this:
skv - Bangalore,இந்தியா
06-ஜூன்-201802:22:05 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>கர்நாடகாலே ஹெவி ரெயின் கொட்டிண்டுருக்கு அதனால் தானாவே காவிரி மேட்டுர்டாம் க்கு வந்து நெரையர்த்து என்பது உண்மை ஆனால் மேலும் தண்ணீர் வந்தால் எங்கே நிரம்பும் காலனிக்கு போவுமா ??//சமீபத்துல பார்த்தேன் கல்லணை வறண்டு கிடக்கு அங்கங்கே புல்லு முளைச்சு மாடுமேயுது என்பதுதான் உண்மை அகண்டகாவிரிலே லாரிகள் வரிசையானிக்குது மணல் அள்ளின்னு போறானுக நீர் தங்க என்னங்க ஆதாரம் இருக்கு , காவிரி பாயும் இடங்களிலே தடுப்பணை கட்டி நீர் தேக்கினால் வருஷம் பூரா நீர் இருக்கும் நிலத்தடி நீரும் ஊருமே ஐயா ஆனால் சாராயக்கடைக்குதானே முக்கியம் தாறானுக திமுக அண்ட் அதிமுக காரனுக்கு காசு பார்க்கவே தான் காவிரிலே நீர் வராமல் தடுக்கபாக்குறானுக என்பதுதான் உண்மை

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
05-ஜூன்-201821:38:39 IST Report Abuse

siriyaarAll because of BJP only, after gowthami joined BJP left kamal, so kamal upset with BJP , BJP stop spoiling the personnel freedom.. even sasi tharoor case his wife he ed why swamy cry for this.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X